திருப்பதியில் பெருமாளுடன் வீற்றிருப்பவர் ஸ்ரீ பத்மாவதித் தாயார்.
பத்மாவதி தாயார்!
திருப்பதியில் பெருமாளுடன் வீற்றிருப்பவர்
ஸ்ரீ பத்மாவதித் தாயார். இவரை, பெருமாள்
ஏழுமலையானாக வந்து கரம் பற்றிய கதை அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.
ராமாவதாரத்தின் போது நடந்த ஒரு சம்பவம்
இது; வேதவதி என்பவள், ஸ்ரீராமர் மீது ஆசை கொண்டு, அவரைக் கணவனாக அடைய வேண்டித் தவம் இருந்தாள்.
ஸ்ரீ ராமரும் அவள் முன்பு தோன்றினார்!
வேதவதியின் நோக்கம் அறிந்த ராமர், 'இந்த அவதாரத்தில் எனக்கு ஒரே மனைவிதான்.
அவள் சீதை மாத்திரமே! அதற்காக நீ கவலைப்பட வேண்டாம். கலியுகத்தில் ஆகாச ராஜன் என்கிற
மன்னனின் மகளாக நீ பிறப்பாய். அப்போது, நான் உன்னை ஆட்கொள்கிறேன்' என்று அருளினார்.
அதன்படி, கலியுகத்தில் பெருமாள் பூமிக்கு வந்து
சேர்ந்த போது மன்னன் ஆகாசராஜனின் மகளாக வேதவதி பிறந்து, திருமணப் பருவத்தில் இருந்தாள். அவளது
பெயரே பத்மாவதி என்னும் அலர்மேல்வல்லி.
தன்னைப் பிரிந்து சென்ற மகாலட்சுமியைத்
தேடிவந்த இடத்தில், பத்மாவதியைக்
காணப்போய் அவரைத் திருமணம் செய்து கொண்டார் பெருமாள். இங்கு பத்மாவதித் தாயார், மகாலட்சுமியுடன் அருள்கிறார் ஸ்ரீ வெங்கடேசப்
பெருமாள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : பத்மாவதி தாயார்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Mother Padmavati! - Perumal in Tamil [ Perumal ]