பிரபஞ்சத்தை மீண்டும் படைக்கும் பணியை பிரம்மன் ஆரம்பித்தபோது, லேசாக அவனுள் செருக்கு எட்டிப் பார்த்தது.
மணக்கும் வாழ்வு தரும் முதுகுன்றீஸ்வரர்
பிரபஞ்சத்தை மீண்டும் படைக்கும் பணியை பிரம்மன்
ஆரம்பித்தபோது, லேசாக
அவனுள் செருக்கு எட்டிப் பார்த்தது. அதை அடக்க மலையாகத் தோன்றினார் மகேசன்.
அத்தலமே விருத்தாசலம். இங்கு பழமலைநாதராய் கோயில் கொண்டிருக்கும் அரன்.
முதுகுன்றீஸ்வரர் என்ற திருநாமத்தோடு வேறொரு இடத்திலும் கோயில் கொண்டிருக்கிறார். எங்கு? ஏன்?
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகாவில் முதனை எனும் சிறு கிராமத்தில்!
இன்றும் திருவண்ணாமலை தீபத்திற்கு முதல் நெய் இவ்வூர் யாதவர்கள் தருவதுதான்.
அதனால்தான் இந்த ஊருக்கு முதல் நெய் என்று பெயர் வந்ததாம். இது
காலப்போக்கில் முதனையாய் மருவியுள்ளது.
கி.பி. 12ம் நூற்றாண்டின் இறுதியில் காடவர் தலைவர்களான கச்சிராயர்கள்
நடுநாட்டை ஆண்டு
வந்தார்கள். அவர்கள் வழிவந்தவர் கச்சிராயர். முதனையில் வசித்த இவர் சிறந்த
சிவபக்தர். தினமும் பழமலைநாதரையும் அன்னை பெரியநாயகியையும் வணங்கிய பின்னரே உணவு
உட்கொள்வார். ஒருநாள் தன் பணியின் நிமித்தம் பழமலைநாதரை தரிசிக்க இயலாமல் போனது.
இதனால் மனம் வருந்திய கச்சிராயர், ஈசனை உள்ளம் உருக தியானித்தார். தன் பொருட்டு தன் பக்தன் உணவருந்தாமல்
இருப்பது கண்டு சகியாத ஈசன், அன்னை பெரியநாயகியோடு கச்சிராயருக்கு அருட்காட்சி தந்தார்.
இனி நீங்கள் திருமுதுகுன்றம் வந்து எம்மை தரிசிக்கத் தேவையில்லை. இங்கேயும் யாம்
உனக்காக கோயில் கொள்கிறோம். என்று கூறி மறைந்தார். வாழும் காலத்திலேயே யாம் ஈசனை
தரிசிக்கும் பேறு பெற்றோம். எம் மீது அரனுக்கும், அன்னைக்கும் இத்தனை அன்பா! என அகம் மகிழ்ந்து ஈசனுக்கு
அழகிய கோயில் கட்டினார் கச்சிராயர். முதுகுன்றீஸ்வரர் கோயில் முதனையில் அமைந்த
வரலாறு இதுதான்.
அழகிய ஏரிக்கு அருகே கோயில் அமைந்துள்ளது. மூன்று நிலை
ராஜகோபுரம் தாண்டி உள்ளே செல்ல அழகிய முன்மண்டபம். இங்கு சந்திரனும்,
சூரியனும், பைரவரும் கோயில் கொண்டிருப்பது தனிச்சிறப்பு. பிராகாரத்தில்
விநாயகர். சண்முகர். பெருமாள். அனுமன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், துர்க்கையம்மன் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். அழகிய கொன்றை
மரம் தல விருட்சம். இந்த மரத்தின் வயது சுமார் 300 என்றபோதும் இதன் பருமன் அதிகமாவது இல்லை. கிளைகளின்
எண்ணிக்கையும் அதிகமாவதில்லை.
புதிய கிளைகள் உருவாகும்போது பழையது தானே விழுந்து விடுகிறது
என்பதும் அதிசயம். கருவறையில் முதுகுன்றீஸ்வரர் வேண்டும் வரம் தர நானிருக்கிறேன்
என்பதாய் அமர்ந்திருக்கிறார். அருகில் தனிச் சந்நதியில் பெரியநாயகி அருள்கிறார்.
விருத்தாசலம் நெய்வேலி
சாலையில், விருத்தாசலத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : மணக்கும் வாழ்வு தரும் முதுகுன்றீஸ்வரர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Mudukunreeswarar who gives life to smell - Spiritual Notes in Tamil [ spirituality ]