இரண்டாம் பிரகாரத்தின் முகப்பில் அமைந்துள்ள மண்டபத்தில், இசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூண்களிலிருந்தும் ச,ரி,க,ம,ப,த,நி என்ற ஏழு சுரங்களையும் கேட்க முடிவதே இதன் சிறப்பு!
உலகிலேயே வேறு எங்குமே இல்லாத 'மிடறு' என்ற இசைத்தூண்கள்
இரண்டாம் பிரகாரத்தின் முகப்பில் அமைந்துள்ள மண்டபத்தில்,
இசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூண்களிலிருந்தும் ச,ரி,க,ம,ப,த,நி என்ற ஏழு சுரங்களையும் கேட்க முடிவதே இதன் சிறப்பு!
ஒவ்வொரு பெரிய தூண்களைச் சுற்றியும், பல சிறிய தூண்கள் கட்டப்பட்டுள்ளன. இதிலிருந்து ஐம்பத்தி
மூன்று தனித்தனி ராகங்களைக் கேட்க முடியுமாம். பெரிய தூணிலிருந்து கர்நாடக
சங்கீதமும்., அதைச்
சுற்றியுள்ள சிறிய தூண்களிலிருந்து, மிருதங்கம், வீணை, கடம், சலங்கை, மணி போன்ற இசைக் கருவிகளின் நாதத்தையும் கேட்க முடியுமாம்.
மெலிதாக விரல்களில் மீட்டினாலே எந்த வலியும் இல்லாமல் சுகமான நாதம் இசைக்கிறது.
நல்ல இசை ஞானம் உள்ளவர்களால் இதன் வேறுபாடுகளை நன்கு உணர முடியும். 'மிடறு' என்று அழைக்கப்படும்.
இது போன்ற இசைத் தூண்கள் உலகில் வேறு எங்குமே
இல்லையென்கிறார்கள். தொழில்நுட்பங்கள் முன்னேறாத அந்தக் காலத்திலேயே இது எங்ஙனம்
சாத்தியமானது என்று நினைக்கும்போது ஆச்சரியமே மேலிடுகிறது. இன்றைய நவீன
தொழில்நுட்ப முறையைக் கொண்டு (spectral analysis) ஆய்வு செய்தபோது, இத்தூண்களிலிருந்து வரும் இசைகளின் தன்மைகளுக்கேற்ப இசைந்து
கொடுக்கும் அலைக்கற்றையினால் சப்தம் உருவாகிறது என்று தெரிவிக்கின்றது.
இத்தூண்களில் ஒரு சிறு துவாரமோ அல்லது வேறு ஏதும் தூண்டுகோலோ இல்லாமல்,
அழகாக இசைப்பதுதான் அதிசயத்தின் உச்சம்.
கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு நோக்கித் திரும்பியிருப்பதன் மூலம்,
படித்தவர்கள் இவரை வணங்கினால், செல்வாக்கு மிக்க வேலையோ, தொழிலோ செய்யலாம் என்று நம்புகிறார்கள். ஜாதகத்தில் புதன்
தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபடுகிறார்கள். கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும்
இந்தத் தலத்தில் தம்பதியர் வழிபட்டால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒற்றுமையுடன் இருப்பர் என்பது
நம்பிக்கை.
பொதுவாக, நவக்கிரக சன்னதியில் புதன் பகவான் கிழக்கு
நோக்கியிருப்பார். இங்குள்ள புதனோ, வடக்கு நோக்கியிருக்கிறார். இது மிக அரிய கோலம்.
தமிழகத்தில் வேறு எந்தக் கோயிலிலும் புதனின் திசையில் மாற்றமில்லை.
இங்குள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதியில்,
12 துளைகள் கொண்ட கல் ஜன்னல் இருக்கிறது.
இவரிடம் வேண்டிக்கொண்டு, குழந்தைப்பேறு பெற்றவர்கள், குழந்தையை ஜன்னல் வழியாகக் கொடுத்துவாங்கி வித்தியாசமான
நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த நேர்த்திக் கடனால் குழந்தைகள்,
விநாயகரின் பாதுகாப்பைப் பெற்று தீர்க்காயுளுடன் வாழ்வர்
என்பதும், கல்வியில்
சிறந்து விளங்குவர் என்பதும் நம்பிக்கை.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: சிவன் : உலகிலேயே வேறு எங்குமே இல்லாத 'மிடறு' என்ற இசைத்தூண்கள் - வித்தியாசமான நேர்த்திக்கடன், புதன் தோஷம் நீங்கும் [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : Musical pillars of 'Mitaru' which are not found anywhere else in the world - With different elegance, Mercury dosha will be removed in Tamil [ spirituality ]