முகுள முத்திரை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்....

செய்முறை, நேர அளவு, பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

Must know Mukula Stamp... - Recipe, time scale, benefits in Tamil

முகுள முத்திரை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... | Must know Mukula Stamp...

முகுளம் என்ற சொல்லுக்கு பறவையின் அலகு என்று பெயர். இது ஒரு எளிமையான முத்திரை. மற்ற முத்திரைகளை ஒப்பிடும்போது, இதைச் செய்வது எளிது. இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வரும்போது, ஒருவித புத்துணர்ச்சியை நாம் உணரலாம்.

முகுள முத்திரை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்....

முகுளம் என்ற சொல்லுக்கு பறவையின் அலகு என்று பெயர். இது ஒரு எளிமையான முத்திரை. மற்ற முத்திரைகளை ஒப்பிடும்போது, இதைச் செய்வது எளிது. இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வரும்போது, ஒருவித புத்துணர்ச்சியை நாம் உணரலாம். 

நாம் இதைச் செய்யும்போது, நோய்களைக் குணப்படுத்தும் சக்தி, பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஒளியாகச் சென்று சக்தியாகச் செயல்படுகிறது. எனவே, இது ஒரு சக்தி வாய்ந்த, நோய்களைக் குணப்படுத்தும் 'சாதனமாக' உள்ளது.

உடலில் பாதிக்கப்பட்ட பகுதியில் இந்த முத்திரையை வைத்தால், அப்பகுதியில் சக்தியைச் செலுத்தி அங்குள்ள கோளாறுகள் குண மாகும். எனவே, இந்த முத்திரைக்கு சக்தியைக் கொடுக்கும் முத்திரை என்றும், மன இறுக்கத்தை அகற்றும் முத்திரை என்றும் சொல்லலாம்.

செய்முறை

நான்கு விரல்களையும் கட்டை விரலோடு இணைக்க வேண்டும். விரல்கள் மேல் நோக்கியபடி இருக்க வேண்டும். அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. சுவாசம் ஒரே சீராக இருக்க வேண்டும்.

செய்ய வேண்டிய முறை

நம் உடலில் உள்ள ஏதேனும் உறுப்பு பாதிக்கப்பட்டிருந்தால், அந்த இடத்தில் முகுள முத்திரை செய்திருக்கும் நிலையில் கையை வைக்க வேண்டும். அப்போது, நமது சக்தி பாதிக்கப்பட்ட பகுதிக்குள் சென்று, பாதிப்பு குணமாகும்.

உடலில் எங்காவது வலி இருந்தால், இந்த இடத்தில் முகுள முத்திரையை வைக்க வேண்டும். நமது கவனம் முழுவதும் வலியுள்ள அந்த இடத்திலேயே இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் வலி நீங்கிவிடும்.

நேர அளவு

தினமும் ஐந்து நிமிடங்கள் வீதம் ஆறு அல்லது ஏழு தடவை செய்யலாம். இதை நின்றுகொண்டோ, அமர்ந்த நிலையிலோ செய்யலாம்.

எந்தெந்த உறுப்புகளில் விரல்களை எங்கு வைக்க வேண்டும் என்ற விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

சிறுநீரகங்கள்

முதுகுப் பகுதியில் கடைசி விலா எலும்புக்கு சற்று கீழாக வைக்க வேண்டும்.

குடல்

ஒரு கையில் உள்ள முகுள முத்திரையை தொப்புளின் மேல் வைக்க வேண்டும். அடுத்த கையில் உள்ள முகுள முத்திரையை தொப்புளைச் சுற்றி வைத்துக்கொண்டே வர வேண்டும்.

கல்லீரல்

நெஞ்சு எலும்பின் கீழ்ப் பகுதியில், இடது கை முத்திரையை வைக்க வேண்டும். வலது கை முத்திரையை வலது விலா எலும்புகளின் மீது வைத்துக்கொண்டே வர வேண்டும்.

மண்ணீரல் - கணையம்

நெஞ்சு எலும்பின் கீழ்ப் பகுதியில் வலது கையை வைக்க வேண்டும். இடது கையால், இடது விலாவின் கீழ்ப்பகுதியைத் தொட வேண்டும்.

பலன்கள்

1. உடலில் எங்கு சக்தி தேவைப்படுகிறதோ அந்தப் பகுதிக்கு சக்தி கிடைக்கும்.

2. உடலில் எந்தப் பகுதியிலும் ஏற்படும் பாதிப்புகளைக் குணப்படுத்த முடியும்.

3. மன இறுக்கம் அகலும்.

4. உடலில் புத்துணர்ச்சி உண்டாகும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : முகுள முத்திரை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Must know Mukula Stamp... - Recipe, time scale, benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்