மீசைப் பெருமாள்!

பெருமாள்

[ பெருமாள் ]

Mustache Perumal! - Perumal in Tamil

மீசைப் பெருமாள்! | Mustache Perumal!

நூற்றி எட்டு வைணவஸ்தலங்களுள் ஒன்று சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்.

மீசைப் பெருமாள்!

 

நூற்றி எட்டு வைணவஸ்தலங்களுள் ஒன்று சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில். இந்தப் பெருமாள் தான், முன்பு நடைபெற்ற பாரதப் போரில் அர்ஜூனனின் தேருக்கு சாரதியாக இருந்து அருள்புரிந்ததாகக் கூறப்படுகிறது!

 

ஒரு தேரோட்டிக்கு அழகு அவரது கம்பீரத்தை உணர்த்தும் மீசை. அதனால் இங்கு காட்சி தரும் மூலவர் ஸ்ரீவேங்கட கிருஷ்ணர் சாரதிக்குரிய கம்பீரத் தோற்றத்தில் மீசையுடன் காட்சி தருகின்றார்! இதனால் இவருக்கு 'மீசைப்பெருமாள்'- என்ற பெயரும் உண்டு!

 

ஒவ்வொரு ஆண்டும் இங்கே நடைபெறும் வைகுண்ட ஏகாதசித் திருவிழாவின் பகல்பத்து என்ற உற்சவத்தின் ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரை ஐந்து நாட்கள் மட்டும் இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பெருமாள் : மீசைப் பெருமாள்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Mustache Perumal! - Perumal in Tamil [ Perumal ]