மட்டன் பிரியாணி

குறிப்புகள்

[ சமையல் குறிப்புகள் ]

Mutton Biryani - Tips in Tamil

மட்டன் பிரியாணி | Mutton Biryani

மட்டனை நன்கு கழுவி அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர், மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதனுடன் பெரிய வெங்காயம் அரைத்துக் வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

மட்டன் பிரியாணி

 

தேவையான பொருட்கள்

மட்டன்  - அரை கிலோ

பாசுமதி அரிசி -  4 டம்ளர்

பெரிய வெங்காயம் -  3

தக்காளி -  3

பச்சைமிளகாய் - ஐந்து

புதினா கொத்தமல்லி -  ஒரு கைப்பிடி அளவு

மஞ்சள் தூள்  - அரை ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

தண்ணீர்  - 7  டம்ளர்

லெமன் - 1/2 முடி

நெய்  - 2  ஸ்பூன்

உப்பு  - தேவையான அளவு

 

அரைப்பதற்கு தேவையான பொருட்கள்

 

பூண்டு -  15 பல்

இஞ்சி  - விரல் நீளத் துண்டு

கிராம்பு -  4

பிரிஞ்சி இலை -  ஒன்று

சோம்பு  - அரை ஸ்பூன்

பட்டை - 2  துண்டு

 

தாளிப்பதற்கு

 

சமையல் எண்ணெய் -  100 கிராம்

பட்டை, சோம்பு, கிராம்பு, பிரிஞ்சி இலை ஏலக்காய்  - தலா இரண்டு

 

செய்முறை

 

மட்டனை நன்கு கழுவி அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர், மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

 

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

 

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

 

பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

 

பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

 

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க  கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதனுடன் பெரிய வெங்காயம் அரைத்துக்  வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 

பின்பு அதனுடன் பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.

 

பச்சை மிளகாய்  கலர் மாறியவுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

 

பின்பு அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு மசியும் வரைவதக்கவும்.

 

குக்கரை மூடி அடிக்கடி திறந்து கிளறி விட்டால் தக்காளி சீக்கிரம் வதங்கி விடும்.

 

பின்பு அதனுடன் மட்டனையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு அதில் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும் .

 

நன்கு கொதி வந்தவுடன் குக்கரை மூடி 6 விசில் விட்டு இறக்கவும்.

 

10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து மீதமுள்ள மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

 

நன்கு கொதி வந்தவுடன் அரிசியை ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் நன்கு வடித்து சேர்க்கவும்.

 

பின்பு அதனுடன் புதினா, கொத்தமல்லி   நெய் , எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

 

உப்பு சரி பார்த்து விட்டு குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

 

உப்பு சரிபார்க்கும் போது  தண்ணீரை விட உப்பு சற்று கூடுதலாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

 

பின்பு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து கிளறினால் மிகவும் சுவையான மட்டன் பிரியாணி ரெடி.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

சமையல் குறிப்புகள் : மட்டன் பிரியாணி - குறிப்புகள் [ ] | cooking recipes : Mutton Biryani - Tips in Tamil [ ]