பைரவர் தோற்றத்திற்கான புராண வரலாறு

பைரவர் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: பைரவர் ]

Mythological history for the origin of Bhairava - Bhairava - Spiritual notes in Tamil

பைரவர் தோற்றத்திற்கான புராண வரலாறு | Mythological history for the origin of Bhairava

தான் என்ற ஆவணமும், கர்வமும் அழிவைத் தரும். இதற்கு எடுத்துக்காட்டாக, படைப்புக் கடவுளாகிய பிரம்மன் ஒரு சமயம் தன் ஆற்றிலின் பேரில் அளவற்ற கர்வம் கொண்டு தாமே சிவனை விடப் பெரியவர் என்று கூறி வந்தார்.

பைரவர் தோற்றத்திற்கான புராண வரலாறு:


தான் என்ற ஆவணமும், கர்வமும் அழிவைத் தரும். இதற்கு எடுத்துக்காட்டாக, படைப்புக் கடவுளாகிய பிரம்மன் ஒரு சமயம் தன் ஆற்றிலின் பேரில் அளவற்ற கர்வம் கொண்டு தாமே சிவனை விடப் பெரியவர் என்று கூறி வந்தார். பிரம்மனுடைய அகந்தையை அடக்குவதற்காக சிவபெருமான் தனது புருவ மத்தியிலிருந்து ஒரு விநோத மனித வடிவத்தைப் படைத்தார். அந்த சிவ அம்சமே பைரவர் திருக்கோலம் ஆகும். சிவ அம்சமான பைரவர் பிரம்மனின் 5 தலைகளில் ஒன்றை தனது கைவிரல் நகத்தால் கிள்ளி எறிந்து விட்டார். இதனால், கர்வம் அடங்கிய பிரம்மா பைரவரைத் துதித்து வணங்கினார்.

பின்னர் பிரம்மாவின் தலையைத் துண்டித்ததால் ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம் நீங்க அருளுமாறு சிவ பெருமானை பைரவர் வேண்டி பிரார்த்தித்தார்.

சிவபெருமான், பைரவரை கபால விரதம் மேற்கொண்டு பிச்சை வாங்கிக் கொண்டு சிவத்தல யாத்திரை செய்யும் படியும் அப்போது பிரம்மகத்தி தோஷம் நீங்கும் எனவும் அருளினார். பைரவரும் பல சிவத்தலங்களை வழிபட்டு, சுவாமி மலைக்கு மிக அருகில் உள்ள திருவலஞ்சுழிக்கு வந்து தரிசிக்கும்போது பிரம்மகத்தி தோஷம் அவரைவிட்டு நீங்கியது.

அப்போது திருவலஞ்சுழி விநாயகர் தோன்றி, பைரவரை நோக்கி உமது கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசுங்கள். அது எங்கு சேர்ந்திருக்கிறதோ அந்த இடத்தில் கோயில் கொண்டருளுங்கள் என்று அருளினார். பைரவரும் அவ்வாறே சூலாயுதத்தை வீச, அது சேத்திரபாலபுரம் என்ற இடத்தில் விழுந்தது. சூலாயுதம் விழுந்த இடம் தீர்த்தம் ஆயிற்று. அங்கு பைரவர் தனிக்கோயில் கொண்டு அருள் வழங்கி வருகிறார். இத் தலம் குத்தாலம் அருகில் உள்ளது. இது சம்பவக் கதை ஆகும். பைரவர் காசிக்கு சென்றதும் பிரம்மத்தி தோஷம் நீங்கியதாகவும் சொல்லப்படுகிறது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : பைரவர் தோற்றத்திற்கான புராண வரலாறு - பைரவர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Mythological history for the origin of Bhairava - Bhairava - Spiritual notes in Tamil [ spirituality ]