நாமகிரியம்மன் பெருமை

நரசிம்மர் பெருமை, அரங்கநாதர் பெருமை

[ ஆன்மீகம்: ஆஞ்சநேயர் ]

Namakiriyaman is proud - in Tamil



எழுது: சாமி | தேதி : 31-05-2023 01:29 pm
நாமகிரியம்மன் பெருமை | Namakiriyaman is proud

நாமகிரி என்ற சிறப்புபெற்ற நாமக்கல்லில் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் முதல்பகுதியில், அதியேந்திரன் குணசீலன் என்ற அரசனால் குடையப்பட்ட கல்வெட்டுகள் உள்ள இரண்டு குடைவரைக் கோவில்கள் அமைந்துள்ளன.

நாமகிரியம்மன் பெருமை


நாமகிரி என்ற சிறப்புபெற்ற நாமக்கல்லில் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் முதல்பகுதியில், அதியேந்திரன் குணசீலன் என்ற அரசனால் குடையப்பட்ட கல்வெட்டுகள் உள்ள இரண்டு குடைவரைக் கோவில்கள் அமைந்துள்ளன. சாளக்ராமம் மலையின் கீழ்புறம் அருள்மிகு அரங்கநாதர். கார்க்கோடக சயனத்தில் காட்சி அளிக்கிறார்.

மலையின் மேல்புறம் அரங்கசுவாமி அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். இங்குள்ள நரசிம்மர் ஸ்ரீ வைகுண்ட நாராயணர், ஹிரண்ய சம்ஹாரமூர்த்தி வாமன அவதாரம் ஸ்ரீவராகமூர்த்தி ஆகிய திருஉருவங்கள் சிற்ப வேலைக்கு எடுத்துக்காட்டாகும். ஸ்ரீநாமகிரி தாயாரின் பெருமை மிகவும் விசேஷசமானதாகும்.

தன்னை நாடி வரும் பக்தர்களுக்குக் கருணையுடன் நோக்கி, எதிர்கொண்டு வரவேற்பது போலத் தோற்றம் அளிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள நரசிம்ம தீர்த்தத்தில் பக்தர்கள் காலை. மாலை ஆகிய இரண்டு வேலைகளில் குளித்துவிட்டு, பயபக்தியுடன் இங்குள்ள கோவில்களை 12 முறை வலம் வந்தால், எந்த விதமான கெட்ட துன்பங்களும் நீங்கும்.

 

நரசிம்மர் பெருமை

ஸ்ரீ நரசிம்மர் திருக்கோவிலும் குன்றின் மேல்புறத்தில் உள்ள குடைவரையில் அமைந்துள்ளது. இங்குக் குடிகொண்டு இருக்கும் ஸ்ரீ நரசிம்மர் மேற்கு நோக்கி வீரமாக வலக் காலை ஊன்றியும். இடக் காலை மடித்தும் அமர்ந்திருக்கிறார். அருகில் பூஜிக முனிவர்களான சனக சந்தர்களுக்கும், கவரி வீசும் சூர்ய சந்திரர்களும் எழுந்தருளியுள்ளனர்.

அடுத்து வலப்புறத்தில் ஈஸ்வரரும் இடப்புறத்தில் நான்முகனும், நரசிம்மர் இரணியனை வதம் செய்த பின்னர் உக்ரம் தணிவதற்காக வழிபடுகின்றனர். ஸ்ரீ மகாலட்சுமி தவத்தால் மகிழ்ந்த ஸ்ரீ நரசிம்மர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன் ஆகிய மூவரும் இங்கு பூஜிக்கபடுவதால், இந்தத் தலம் மும்மூர்த்தித் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ நரசிம்மர் வலக்கையில் இரணியனைச் சம்ஹாரம் செய்த ரத்தக்கரையும், நகங்களின் கூர்மையையும் காணலாம். இங்கு எழுந்தருளி உள்ள மூர்த்திகளுக்கு மூன்று காலப்பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிற்பங்கள் நிறைந்த இந்தத் திருத்தலம் மத்திய அரசின் கண்காணிப்பிலும். இந்து அறநிலையப் பாதுகாப்பாளர்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. வைணவ ஆகம விதிமுறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

 

அரங்கநாதர் பெருமை

நாமக்கல் மலைக் கோட்டையின் கிழக்குப் புறக் குடைவரை கோவிலில், கார்க்கோடக ஆசனத்தில் சயனித்த கோலத்தில் காட்சி தருபவர் அரங்கநாதப் பெருமாள். அவரது வலப்புறம் கிழக்கு நோக்கித் தனிக் கோவிலில் அரங்கநாயகி தாயாரும் எழுந்தருளி அன்பர்களுக்கு எல்லையில்லா அருள்பாலித்து வருகின்றனர்.

சிராப்திநாதர். முகம் கொண்ட சிங்க குரூரமான கார்க்கோடகன் என்ற பாம்பணையில் அரங்கநாதர் என்ற திருநாமத்ததைக் கொண்டு யோகநித்திரை புரிந்து வருகிறார். திருவடிபுறத்தில் தாமஸகுணம் படைத்த அரக்கர்களான மது, கைடபர் ஆகிய இருவரும் தீச்செயல் புரிய வந்தவர்கள். மலர் வழிபாடு செய்கின்றனர்.

உந்தியில் நான்முகனும், சங்கு, சக்கர, சுதை, கத்தி, வில் ஆகிய ஐந்து ஆயுதங்களும். மனித உருவத்துடன் நாரதர், தும்புரு ஆகிய முனிகளும், சூரிய சந்திரர்கள் யாவரும் பகவானைத் தரிசிக்கின்றனர். இந்தக் குகையில் முக்கிய இடத்தில் பள்ளி கொண்ட பெருமாளும், பக்கவாட்டில் சங்கர நாராயணனுக்கு எதிர்ப்புறம் வாமனரும் எழுந்தருளி உள்ளனர்.

இந்தத் திருத்தலத்தில் கார்க்கோடகன் தவமிருந்து அரங்கநாதனை மகிழ்வித்து, அவருக்குப் படுக்கையானான். தினமும் கமலாலய குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அரங்கநாதருக்குப் பூஜை செய்கிறான் என்பதற்குச் சான்றாக இன்னும் மலைப்பாதையில் குளத்தில் இருந்து கோவில் வரை பாம்பு சென்ற வழி காணப்படுகின்றது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீகம்: ஆஞ்சநேயர் : நாமகிரியம்மன் பெருமை - நரசிம்மர் பெருமை, அரங்கநாதர் பெருமை [ ஆன்மீகம் ] | spirituality: Anjaneya : Namakiriyaman is proud - in Tamil [ spirituality ]



எழுது: சாமி | தேதி : 05-31-2023 01:29 pm