நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது கூனவேலம் பட்டி புதூர். இந்தப் பகுதியில் நெசவாளர்களும், விவசாயிகளும் அதிகம் வசிக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டம்: இலங்கை அம்மன் கோயில்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே
உள்ளது கூனவேலம் பட்டி புதூர். இந்தப் பகுதியில் நெசவாளர்களும், விவசாயிகளும் அதிகம் வசிக்கிறார்கள்.
இங்கு விவசாயம், நெசவுத் தொழில், கோழிப் பண்ணை தொழில் பிரதானமாக இருந்து
வருகிறது.
இந்தக் கிராமத்தில் உள்ள அலவாய் மலை
அடிவாரத்தில் சுமார் 400 ஆண்டுகள்
பழமை வாய்ந்த 'அழியா இலங்கை அம்மன் கோயில்' உள்ளது.
இந்தக் கோவிலில் உள்ள மண்டபத் தூண்களில்
ஆஞ்சநேயர், ராமர், லட்சுமணன் மற்றும் சீதையின் சிலைகள்
பிரதானமாக இடம் பெற்றுள்ளன. எனவே, இக்கோயிலுக்கும்
இலங்கைக்கும் தொடர்பு இருப்பதாகக் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. இதனாலேயே இந்தக்
கோயில் 'அழியா இலங்கை அம்மன் கோயில்' என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.
இந்தக் கோவிலில் உள்ள மூலவரான அம்மன், புற்றுக் கண் மீது, பெண்ணின் கால்பாதங்கள் வடிவத்தில் பக்தர்களுக்கு
அருள் பாலித்து வருகிறாள். அதாவது, இந்த அம்மனின் உடல் நிலத்திற்குள்ளும், பாதங்கள் மேல் பகுதியிலும் இருப்பதாக
இக்கோயில் தலவரலாறு கூறுகின்றது!
புற்றுக்கண் மீது அம்மனின் கால் பாதங்கள்
அமைந்துள்ளது என்றாலும் அபிஷேகம், ஆராதனை
போன்ற பூஜைகளின்போது எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் புற்றுக்கண் மீது உள்ள அம்மனின் மண் பாதங்கள் மட்டும் கரைவதே இல்லை
ஆயிரக்கணக்கான குடங்கள் தண்ணீர் ஊற்றினாலும் அது கரையாமல் அப்படி உள்ளது அதிசயமாகக்
கருதப்படுகிறது.
மேலும் பாதத்தின் மீது ஊற்றப்படும்
தண்ணீர் முழுவதும் எங்கே செல்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. ஏனென்றால் தண்ணீர்
வெளியேறுவதற்கு மற்ற கோயில்களில் வைத்து இருப்பது போன்று இங்கு குழாய்கள் எதுவும் பொருத்தப்படவில்லை.
இது அந்தத் தாயின் அதிசய அருள் என்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
இக்கோயிலில் சில கல்வெட்டுக்கள் உள்ளன.
அதில் உள்ள எழுத்துக்கள் புரியாத நிலையில் இருப்பதால் கோலிலில் முழமையான வரலாற்றை அறிய
முடியவில்லை!.
இக்கோயிலின் கிழக்குப் புறத்திலும்
ஒரு புற்றுக்கள் உள்ளது. ராகு, கேது, செவ்வாய் மற்றும் நாகதோஷம் உள்ளவர்கள், திருமணக் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்தப்
புற்றுக் கண்ணுக்கு குங்குமம், மஞ்சள்
வைத்து பால், இளநீர் ஊத்தி வணங்கி வந்தால், தோஷம் நீங்கி திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள், பிரதி ஞாயிற்று கிழமைகளில் இந்தப் பரிகார
பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : நாமக்கல் மாவட்டம்: இலங்கை அம்மன் கோயில்! - [ அம்மன் ] | Amman: History : Namakkal District: Sri Lanka Amman Temple! - in Tamil [ Amman ]