நந்தி வழிபாடு

தெய்வத் திருஉலா

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

Nandi worship - Goddess Thiruula in Tamil

நந்தி வழிபாடு | Nandi worship

நலம் யாவும் அளிப்பதில், நடேசனின் வாகனமான நந்திக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பதால், பிரதோஷ வேளையில் நந்தி தேவருக்கும் பிரத்யேக வழிபாடு செய்வது சிறப்பு.

நந்தி வழிபாடு

நலம் யாவும் அளிப்பதில், நடேசனின் வாகனமான நந்திக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பதால், பிரதோஷ வேளையில் நந்தி தேவருக்கும் பிரத்யேக வழிபாடு செய்வது சிறப்பு.

அதுமட்டுமல்ல, பிரதோஷ காலத்தில் பரமன், நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையேதான் நடனமாடுகிறார் என்பதால், அந்த சமயத்தில் அவருக்குச் செய்யும் பூஜை, ஆண்டவனையும் அடைகிறது.

அபிஷேகம், ஆராதனை என்று ஆடம்பரமாகச் செய்ய இயலாவிட்டாலும், அறுகம்புல் மாலை சாத்தி, அகல் விளக்கில் நெய்யிட்டு தீபம் ஏற்றி வைத்து நந்திதேவரை வணங்குவது, நலம் யாவும் சேர்க்கும். சிலர், மாவிளக்கில் நெய்யிட்டு தீபம் ஏற்றுவர்.

காப்பரிசியும் வெல்லமும் கலந்து தருவது, நந்திக்கு உகந்த நிவேதனமாகும்.

பிரதோஷ வேளையில் பரமனையும் நந்திதேவரையும் தரிசிப்பது, பலப்பல வளங்களைத் தரும் என்கின்றன புராணங்கள்.


தெய்வத் திருஉலா

அன்றைய தினம் அடியாரைப் போலவே ஆண்டவனும் ஆலயத்துள் வலம் வருவார். பிரதோஷ வேளையில் உலகம் முழுமையும் உமாமகேசனுக்குள் ஒடுங்கி உறையும் என்பதால், அதை உணர்த்தும் விதமாகவே பிரதோஷ நாயகராக பரமன் தன் தேவியுடன் 'சந்திர சேகர ராய் இடப வாகனத்தில் ஆலயத்தில் திருவுலா வருகிறார்.

அந்த சமயத்தில், 

முதல் சுற்றின்போது வேத மந்திர கோஷம் ஒலிக்க வேண்டும்; 

இரண்டாம் சுற்றின்போது திருமுறை பாராயணம் செய்தல் வேண்டும்; 

மூன்றாம் சுற்றின்போது நாதஸ்வர இன்னிசை ஒலிக்க வேண்டும் என்பது நியதி.

இப்படிப் வழிபாட்டை முடித்துக் கொண்ட பின், வீட்டுக்குச் சென்று இறைவனை வணங்கிவிட்டு, விரதத்தை நிறைவு செய்து உணவு உட்கொள்ளலாம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : நந்தி வழிபாடு - தெய்வத் திருஉலா [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Nandi worship - Goddess Thiruula in Tamil [ spirituality ]