சர்க்கரை நோய் தீர இயற்கை உணவுகள்

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

Natural foods to cure diabetes - Medicine Tips in Tamil

சர்க்கரை நோய் தீர இயற்கை உணவுகள் | Natural foods to cure diabetes

இந்நோய்க்கு இதுதான் காரணம் என்று கண்டிப்பாய் வகைப்படுத்த இயலாது. ஒருவர் அதிக இனிப்பு உண்டால், அதனால் சர்க்கரை வியாதி வரவாய்ப்புக்கள் குறைவு என்பதை சமீபத்திய ஆய்வுகள் நிரூபணம் செய்கிறது.

சர்க்கரை நோய் தீர இயற்கை உணவுகள்

 

இன்று உலகைப் பயமுறுத்தும் முக்கியமான நோய்களுள், முன்னணி வகிப்பது இந்தச் சர்க்கரை நோய்தான்... இதை நோய் என்று அழைப்பதைவிட குறைபாடு (Deficiency) என்றே அழைக்கலாம்..

உடனிருந்தே கொல்லும் நண்பன்போல், உங்கள் உள்ளிருந்தே கொல்லும் நண்பன்தான் சர்க்கரைநோய். உடம்பின் ஆதாரண சக்திகள் யாவற்றையும் அழித்து, உடலையே நீராய் இழியச் செய்யும் (Melitus) தன்மை கொண்டது.

இந்நோய்க்கு இதுதான் காரணம் என்று கண்டிப்பாய் வகைப்படுத்த இயலாது. ஒருவர் அதிக இனிப்பு உண்டால், அதனால் சர்க்கரை வியாதி வரவாய்ப்புக்கள் குறைவு என்பதை சமீபத்திய ஆய்வுகள் நிரூபணம் செய்கிறது.

கீழ்கண்ட காரணங்கள் சர்க்கரை நோய் வர ஏதுவாகலாம்.

1. பரம்பரை ஒரு காரணமாகலாம்.

2. உடலுழைப்பு, வியர்வை வெளிவராத தன்மை பெற்ற வாழ்க்கை நிலையும் ஒரு காரணமாகலாம்.

3. நகர்புற வாழ்வியல் சூழல், சர்க்கரை நோய்வர மிகுதியான காரணமாகிறது.

4. முறையற்ற உணவுப்பழக்கம், மதுப்பழக்கம், புகைப் பழக்கம், போதைப்பழக்கம் இவையும் காரணமாகலாம்.

5. உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப்பொருட் கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் கொள்ளும் பொழுது இந்நோய் வர சாத்தியமாகிறது.

இறுதியாக நீரிழிவு (Diabetes) வர, உடலைக் கெடுக்கும் பல்வேறு காரணிகளின் ஒட்டுமொத்த காரணமாக இந்தச் சர்க்கரைநோய் என்று முடிவுக்கு வரலாம்.

சர்க்கரை நோய் யாருக்கு வரும்...?

சித்த மருத்துவ சாஸ்திரம் பின்வரும் காரணங்களை நோய்க்கான காரணிகளாக வகைப்படுத்துகிறது.

i) அதிக அளவில் இனிப்புச் சுவையுள்ள பொருட்களை உண்ணுதல்.

ii) நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டி றைச்சி போன்றவற்றை அதிக அளவில் உண்ணுதல்.

iii) வேகாத உணவுப் பொருட்கள், வடை, போண்டா , பஜ்ஜி, பூரி போன்ற மந்தப் பொருட்களை அதிகம் உண்ணுதல்.

iv) அடிக்கடி உடலுறவில் ஈடுபடுதல், உணவு உண்டதும் உடலுறவு கொள்ளல் போன்ற காரணிகளால், சர்க்கரை நோய் தோன்றுவதாக சித்த மருத்துவம் கூறுகிறது.

நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் என்ன....?

 i) அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

ii) சிறுநீர் கழித்ததும் கை, கால் மூட்டுகளில் வலி ஏற்படுதல்.

 iii) உடலில் அதிக வியர்வை ஏற்படுதல்.

 iv) வியர்வையில் கற்றாழை நாற்றம் காணுதல்.

 v) சிறுநீரில், , எறும்பு மொய்த்தல்.

 vi) அடிக்கடி தாகம், பசி எடுத்தல்

vii) உடலுறவில் அதிக நாட்டம், உயிர்த்துளி (Semen) நீர்த்துப் போதல், ஆண்மைக்குறைவு உண்டாதல்.

viii) தூக்கமின்மை காணுதல், உடலில் காயம் பட்டால் புண் ஆறாதிருத்தல்.

இவையே சர்க்கரை நோயில் பெரும்பான்மையான அறிகுறி களாய்க் காணப்படுகிறது.

நீரிழிவின் சார்வு (Related Diseases) நோய்கள் என்ன...?

i) பார்வைக் கோளாறுகள், பல்நோய்கள்.

 ii) இருதய நோய், மாரடைப்பு, இரத்த அழுத்தம்  (BP).

iii) மூட்டுவாதம் (Rheumatison).

iv) காசநோய் (TB), சிறுநீரக நோய், தோல் நோய்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

நீரிழிவை கட்டுப்படுத்துவது எப்படி....?

நான் முன்னமே சொல்லியபடி நீரிழிவு ஒரு குறைபாட்டு நோய்தான்.

நீரிழிவை கட்டுப்படுத்த நம்மால்தான் முடியும். எந்த மருந்துகளும் செய்யாத வேலையை நம் அன்றாட உணவுகள் செய்யும் வல்லமை கொண்டது.

நவீன மருத்துவத்தில் தரப்படும் Dioanil, Semi Dioanil போன்ற மருந்துகள் இன்சுலின் சுரப்பு மருந்துகள் அல்ல. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டு (Control) மருந்துகளேயாகும்.

உண்மையான இன்சுலின் சுரப்பு மருந்தென்பது, நாம் உடல் பேணும் உணவுகளேயாகும். உணவின் தன்மையறிந்து, வகையறிந்து, அளவோடு உண்ண, அற்புத மருந்தாய் உடலில் வேலை செய்கிறது.

இங்கே சில உணவுகளை உங்களுக்காக வகைப்படுத்து கின்றேன். உங்கள் மருந்தை நம்பாதீர்கள். உங்கள் உணவை நம்புங்கள் அதுவே நோய் தீர்க்கும் அருமருந்து.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்:

1. வாழைப்பூ, 2. வாழைப்பிஞ்சு, 3. வாழைத்தண்டு, 4. சாம்பல் பூசணி, 5. முட்டைக்கோஸ், 6. காலிபிளவர், 7. கத்திரிப் பிஞ்சு, 8. வெண்டைக்காய், 9. முருங்கைக்காய், 10. புடலங்காய், 11. பாகற்காய், 12. சுண்டைக்காய், 13. கோவைக்காய், 14. பீர்க்கம் பிஞ்சு, 15. பலாப்பிஞ்சு, 16. அவரைப்பிஞ்சு.

பச்சடி செய்முறை :

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் காய் கறிகள் அனைத்தையும் பச்சடியாகச் செய்து உண்ணலாம். உதாரணமாக, புடலங்காயை சிறிதாக அரிந்து கொள்ளுங்கள். சாம்பார் வெங்காயம் இரண்டு, பச்சைமிளகாய் - இரண்டு, கொத்துமல்லி இலை தேவையான அளவு, இவற்றையும் சிறிதாக அரிந்து புடலங்காயுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு எலுமிச்சம்பழம் முழுவதும் பிழிந்து, ஒரு கப் தயிர் சேர்த்து, சிறிது உப்புப் போட்டு நன்றாகப் பிசையுங்கள். பச்சடி தயாராகிவிட்டது. காலை உணவில் தினசரி ஒரு பச்சடி வரும்படி கவனித்துக் கொள்ளல் வேண்டும்.

சிறந்த பச்சடிகள் :

பாகற்காய்ப் பச்சடி, கோவைக்காய்ப் பச்சடி, சுண்டைக் காய்ப் பச்சடி, வாழைத்தண்டு பச்சடி, வாழைப்பூ பச்சடி, வெங்காயப் பச்சடி., அவரைப் பிஞ்சு பச்சடி, புடலங்காய்ப் பச்சடி, கத்திரிப்பிஞ்சு பச்சடி, பீர்க்கம் பிஞ்சு பச்சடி.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரை வகைகள் :

1.முருங்கைக்கீரை, 2. அகத்திக்கீரை, 3. பொன்னாங்கண்ணிக்கீரை, 4. சிறுகீரை, 5. அரைக்கீரை, 6. வல்லாரைக் கீரை, 7. தூது வளைக்கீரை, 8. முசுமுசுக்கை கீரை, 9. துத்திக் கீரை, 10. மணத்தக்காளி கீரை, 11. வெந்தயக்கீரை, 12. கொத்து மல்லி கீரை, 13. கறிவேப்பிலை.

சூப் செய்யும் முறை :

நீரிழிவை கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தையும்சூப்பாகச் செய்து அருந்தலாம். உதாரணமாக, காம்பு நீக்கிய முருங்கை இலை ஒரு கைபிடி அளவு எடுத்து, பாத்திரத்தில் இடுங்கள். ஐந்து மிளகு, சிறிது சீரகம் (பொடிக்கவும்) இரண்டு பல் பூண்டு, இரண்டு சாம்பார் வெங்காயம், தேவைப்பட் டால் ஒரு தக்காளி, இவற்றை அரிந்து கீரையுடன் போட்டு, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, சிறிது மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவைக்கவும், பின் வடிகட்டி ஒரு டம்ளர் அளவு சூப் காலையோ அல்லது மாலையோ சாப்பிடவும்.

சிறந்த சூப் வகைகள் :

முருங்கை சூப், பொன்னாங்கண்ணி சூப், சிறுகீரை சூப், அரைக்கீரை சூப், வெந்தயக் கீரை சூப், அகத்திக்கீரை சூப், பாகற்காய் சூப்.

பாகற்காய் சூப் செய்யும்முறை :

சிறிதாக அரிந்த இரண்டு பாகற்காய், சாம்பார் வெங்காயம் இரண்டு, பூண்டு, மிளகு, சீரகம், வெந்தயம் தேவையான அளவு பொடித்துச் சேர்த்து, ஒரு எலுமிச்சைச் சாறு விட்டு, சிறிது மஞ்சளும், உப்பும் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும். சூப் தயார். வாரம் இரண்டு முறை அவசியம் சாப்பிட வேண்டும்

பூண்டு - வெங்காயம் பச்சடி செய்யும்முறை :

பூண்டு, சாம்பார் வெங்காயம் இரண்டையும் சம அளவு எடுத்து, தோல் உரித்து அவிக்கவும். அதில் சிறிது தயிர்விட்டு கடைந்து சிறிது உப்பு போட்டு சாப்பிடவும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழவகைகள் :

1. விளாம்பழம் - 50 கிராம், 2. அத்திப்பழம், 3. பேரீச்சம் பழம் 3, 4.நெல்லிக்காய், 5. அரைநெல்லிக்காய் - 100 கிராம், 6. நாவல் பழம், 7.மலைவாழை - 30 கிராம், 8. அன்னாசிப்பழம் - 40 கிராம், 9. மாதுளம் பழம் 90-கிராம், 10. எலுமிச்சை - 1, 11. ஆப்பிள் - 75 கிராம், 12. பப்பாளிப்பழம் - 75 கிராம், 13. கொய்யாப் பழம் - 75 கிராம், 14. திராட்சை - 100 கிராம். (குறிப்பிடப்பட்டுள்ள பழங்களில் ஏதேனும் ஒன்று மட்டும் தினசரி உபயோகிக்கவும். கொடுக்கப்பட்ட எடையளவு மீறாமல் பழஉணவு கொள்க.)

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் சாறு வகைகள் :

1. எலுமிச்சை சாறு - 200 மில்லி , 2. இளநீர் - 200 மில்லி , 3.வாழைத்தண்டு சாறு - 200 மில்லி, 4. அருகம்புல் சாறு - 100 மில்லி, 5.நெல்லிக்காய் சாறு - 200 மில்லி, 6. கொத்துமல்லி சாறு - 100 மில்லி. 7.கறிவேப்பில்லை சாறு - 100 மில்லி கொடுக்கப்பட்டுள்ள சாறுகளில் ஏதேனும் ஒன்று மட்டும் எடையளவை மீறாமல் தினமும் சேர்த்துக் கொள்ளவும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மூலிகை கசாயம் :

மருதம்பட்டை - 200 கிராம், ஆவாரம் பூ - 50 கிராம், தாமரைப் பூ - 50 கிராம், நன்னாரி - 50 கிராம், நாவல்கொட்டை - 50 கிராம், நெல்லி - 50 கிராம், கடுக்காய் - 50 கிராம், தானிக்காய் - 50 கிராம், கருஞ்சீரகம் - 50 கிராம், சீரகம் - 50 கிராம், ஏலக்காய் - 25 கிராம்.

கருஞ்சீரகம், சீரகம், சோம்பு மூன்றையும் லேசாக வறுத்து, பிற சரக்குகளுடன் சேர்த்து சூரணமாக்கிப் பொடி யாக்கிக் கொள்ளவும். சர்க்கரை வியாதியினர், டீ, காபிக்குப் பதிலாக இதனை உபயோகிக்கலாம். டீ போன்று இதுவும் சுவையான பானம், காலை, மாலை உபயோகிக்கலாம்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இயற்கை உணவு : -

வெந்தயம் - 250 கிராம், உளுந்து - 100 கிராம், எள் - 100 கிராம், கசகசா - 250 கிராம், கேழ்வரகு - 250 கிராம், கோதுமை - 250 கிராம், சிவப்பு அவல் - 250 கிராம், சீரகம் - 25 கிராம், சோம்பு - 25 கிராம், ஓமம் - 25 கிராம் சுண்டைவற்றல் - 50 கிராம்.

வெந்தயம், கேழ்வரகு, கோதுமை போன்றவற்றை முளைகட்டி காயவைத்துக் கொள்ளவும். மற்ற சரக்குகளை இளவறுப்பாய் வறுத்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அரைத்துக் கொள்ளவும். சிறிதளவு மாவை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, ஒன்று முதல் நான்கு டம்ளர் வரை சாப்பிடவும். இதனையே களி உருண்டையாகவும் செய்து சாப்பிடலாம்.

உணவு முறைகளில் தவிர்க்க வேண்டியவை

1. சர்க்கரை, குளுக்கோஸ், சர்க்கரை சார்ந்த இனிப்பு பலகாரங்கள், கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், வெல்லம், தேன் போன்றவற்றை கண்டிப்பாக நீக்க வேண்டும்.

2. உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்ப் போன்றவற்றை கண்டிப்பாகத் தொடக்கூடாது. கேரட், பீட்ரூட், சிறு அளவில் மாதம் இருமுறை சாப்பிடவும்.

3. மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், சப்போட்டா பழம் போன்றவற்றை கண்டிப்பாக நீக்கவும்.

4. அடிக்கடி குளிர்ப்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். போதைப் பொருள் உபயோகம் கூடாது.

5. எண்ணெய் தன்மை உள்ள வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, அக்ரோட்டு போன்ற பருப்பு இனங்களை தவிர்க்க வேண்டும்.

6. பிரிஞ்சி, பிரியாணி போன்றவற்றைத் தவிர்த்தல் அவசியம். நாள் ஒன்றுக்கு 20 கிராம் எண்ணெய்க்கு மேல் உணவில் எடுத்துக் கொள்ளக்கூடாது.

அன்றாட உபயோகத்திற்கான மாதிரி உணவுப் பட்டியல்

காலை : மருதம்பட்டை மூலிகை கசாயம் - ஒரு கப் (100 மிலி) அல்லது டீ, காபி (சர்க்கரை இல்லாமல்)

காலை டிபன் : 1. இட்லி - 3, தோசை - 2, சப்பாத்தி - 1, இடியாப்பம் - 1, சம்பாரவை உப்புமா, மிளகு பொங்கல், வெந்தயம் கலந்த கஞ்சி (இவற்றில் ஏதேனும் ஒன்று) 2. நீரிழிவை கட்டுப்படுத்தும் கீரைகளில் ஏதேனும் ஒரு சூப், அல்லது கீரைக்கட்டு. 3. புதினா, கறிவேப்பிலை, கொத்து மல்லி, வெங்காயம் - இவற்றில் ஒன்றின் சட்னி. (தேங்காய் சட்னியை தவிர்க்கவும்).

காலை 11 மணிக்கு : நீரிழிவைக் கட்டுப்படுத்தும் சாறு வகைகளில் ஒன்று அவசியம் பருகவேண்டும்.

மதிய உணவு : 1 கப் சாதம் - நீரிழிவுக்கு உகந்த காய்கறி சாம்பார் /75 கிராம் காய்கறி பச்சடி / வெங்காய பச்சடி / நீரிழிவுக்கு உகந்த பழங்களில் ஏதேனும் ஒன்று.

மாலை உணவு : கோதுமை சார்ந்த உணவுகள்/2-3 காய்கறி பச்சடி, சட்னி வகைகள்.


மருத்துவ குறிப்புகள் : சர்க்கரை நோய் தீர இயற்கை உணவுகள் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Natural foods to cure diabetes - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்