சர்ப்ப தோஷம் போக்கும் நவநீதகிருஷ்ணன்

திருத்தலங்கள்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Navaneethakrishnan, who removes the snake dosha - Temples in Tamil

சர்ப்ப தோஷம் போக்கும் நவநீதகிருஷ்ணன் | Navaneethakrishnan, who removes the snake dosha

‘நவநீதம்’ என்றால் ‘வெண்ணெய்’. தண்ணீரில் பால் கலந்தால் அதோடு ஐக்கியமாகி விடும். உயிர்களான நாமும், கடவுளால் அருளப்பட்ட இந்த பூமியை நமக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். சிறப்பம்சம்: முன் மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சன்னிதிகள் உள்ளன. இச்சன்னிதி எதிரே ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். கிருஷ்ண ஜெயந்தி இங்கு பாஞ்சராத்ர ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. மறுநாள் மாலையில் பகவத் கீதை பாராயணம், பிருந்தாவன தீபக்கேளிக்கை கோலாட்டம் ஆகியவை நடக்கின்றன. மூலஸ்தானத்தில் நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணெய்யுடன், சிரித்த முகத்துடன், குழந்தையாக நின்ற கோலத்தில் அருளுகிறார். இவரது வலது மார்பில் மகாலட்சுமியும், அருகில் உற்சவரும் இருக்கின்றனர். இவர் வீதியுலா செல்வது கிடையாது.

சர்ப்ப தோஷம் போக்கும் நவநீதகிருஷ்ணன்

 

நவநீதம்’ என்றால் ‘வெண்ணெய்’. தண்ணீரில் பால் கலந்தால் அதோடு ஐக்கியமாகி விடும்.

 

உயிர்களான நாமும், கடவுளால் அருளப்பட்ட இந்த பூமியை நமக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

 

சிறப்பம்சம்:

 

முன் மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சன்னிதிகள் உள்ளன. இச்சன்னிதி எதிரே ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். கிருஷ்ண ஜெயந்தி இங்கு பாஞ்சராத்ர ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

 

மறுநாள் மாலையில் பகவத் கீதை பாராயணம், பிருந்தாவன தீபக்கேளிக்கை கோலாட்டம் ஆகியவை நடக்கின்றன.

 

மூலஸ்தானத்தில் நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணெய்யுடன், சிரித்த முகத்துடன், குழந்தையாக நின்ற கோலத்தில் அருளுகிறார். இவரது வலது மார்பில் மகாலட்சுமியும், அருகில் உற்சவரும் இருக்கின்றனர். இவர் வீதியுலா செல்வது கிடையாது.

 

கிருஷ்ணர் பிறந்தது ரோகிணி நட்சத்திரம். இந்த நாட்களில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சுவாமி சன்னிதிக்கு பின்புறம் சீனிவாசப்பெருமாள், அலர்மேலுமங்கை தாயார் ஆகியோர் இருக்கின்றனர்.

 

மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் சூரிய உதயத்தின்போது, தொடர்ந்து 3 மாதங்கள் ஸ்ரீநிவாசர் மீது சூரிய ஒளி விழுகிறது.

 

தினமும் காலையில் கிருஷ்ணருக்கு பூஜை செய்யும்போது, 27 நட்சத்திர தீபங்கள் மற்றும் 108 தீபங்களை ஏற்றி பூஜை செய்கின்றனர். இந்தக் கோயிலில் கண்டகி நதியில் கிடைத்த சாளக்கிராம கற்கள் இருக்கின்றன.

 

சாளகிராமம் மற்றும் ஜடாரிக்கு தினமும் பாலாபிஷேகம் நடக்கிறது. இந்த தரிசனத்தை கண்டால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

பரிகார தலம்:

 

கண்ணன், காளிங்கன் என்ற நாகத்திற்கு முக்தி கொடுத்து அதன் மீது நின்று ஆடியவர் என்பதால், இங்கு ராகு, கேது கிரகங்கள் சிலை வடிவில் உள்ளன.

 

சர்ப்ப தோஷத்தால் திருமணம், தொழில் வளர்ச்சி தடை உள்ளவர்கள் இவர்களுக்கு அர்ச்சனை செய்து நிவாரணம் பெறலாம். பிராகாரத்தில் உள்ள நாகர் சன்னிதியில் மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

 

இக்கோயிலை கட்டும்போது கிடைத்த மகாகணபதி, முன்மண்டபத்தில் இருக்கிறார். கோயிலுக்கு வெளியே காவல் தெய்வம் கருப்பசாமியை சாட்டை ரூபத்தில் வைத்துள்ளனர்.

 

இருப்பிடம்:

 

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து 4 கி.மீ., தூரத்திலுள்ள திருமலை நாயக்கர் மகால் அருகிலுள்ள பந்தடி ஐந்தாவது தெரு.

நேரம்: காலை 7:00 –- 11:00, மாலை 5:30 –- 8:00 மணி.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : சர்ப்ப தோஷம் போக்கும் நவநீதகிருஷ்ணன் - திருத்தலங்கள் [ ] | Spiritual Notes: Temples : Navaneethakrishnan, who removes the snake dosha - Temples in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்