ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும், சமூக வாழ்வையும் ஒழங்கு முறைக்குட்படுத்துவதே ஆன்மீகம்.
நவதிருப்பதி
முன்னுரை
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும், சமூக வாழ்வையும் ஒழங்கு முறைக்குட்படுத்துவதே ஆன்மீகம்.
உலகம் முழுவதும் ஆன்மீகமானது பல்வேறு மதம் மற்றும் சம்பிரதாயம் ஆகியவற்றின்
நடைமுறை வழியாக தன் பணி செய்கின்றது. மனித குலத்தை பண்படுத்துவதே ஆன்மீகத்தின்
அடிப்படை நோக்கம். நம் பாரத நாடு ஆன்மீக வழியிலான பண்பாட்டு ரீதியில் பல்வேறு
புராதனமான நடைமுறைகளை தன்னகத்தே கொண்ட பெருமைகளையுடையது. ஸ்ரீவைஷ்ணவ
சம்பிரதாயமும், ஸ்ரீராமனுஜரும்
பன்னிரு ஆழ்வார் இவரது படைப்புகளம் ஆன்மீக வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
மகாவிஷ்ஸ பல்வேறு திருநாமங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகின்ற
திருத்தலங்களில் பன்னிரு ஆழ்வார்களால் மங்களாஸாஸனம் செய்விக்கப்பட்ட (வரவேற்று
போற்றப்பட்ட) 108 திவ்விய தேசமும் முக்கியமானது.
பரமபதம் திருப்பாற்கடல் நீங்கலாக 106 தலங்களும் பாரத தேசத்தில் பரவலாக அமைந்துள்ளது.
இத்திருத்தலங்களில் சோழநாட்டில் 40,
தொண்டை நாட்டில் 22.
பாண்டிய நாட்டில் 18,
மலை நாடு 13,
வட நாடு 11,
நடு நாடு 2
என அமையப் பெற்றுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு.
பாண்டிய நாட்டில் அமைந்துள்ள 2 திருப்பதிகளில் தாமிரபரணி நதியின் இருபுறமாக அமைந்துள்ள 9 திருத்தலங்களுலே
நவதிருப்பதி என்று அழைக்கப்படுகின்றது.
அவையாவன :
1) திருவைகுண்டம்
2) திருவரகுணமங்கை
(நத்தம்)
3) திருப்புளியங்குடி
4) இரட்டை திருப்பதி
5) பெருங்குளம்
6) தென்திருப்பேரை
7) திருக்கோளூர்
8) ஆழ்வார் திருநகரி
ஆழ்வார் திருநகரியில் வைகாசி மாத நம்மாழ்வார் திருநட்சத்திரமான
விசாகத்தை ஒட்டி ஆண்டுதோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருநாளில் ஐந்தாம்
திருநாளன்று நவதிருப்பதி பெருமாளும் ஆழ்வார்திருநகரில் எழுந்தரளி நம்மாழ்வாரால்
மங்களாஸாஸனம் செய்கின்றார். அன்று இரவு ஒன்பது பெருமாளும் கருட வாகனத்திலும்
நம்மாழ்வார் அன்னவாகனத்திலும் மதுரகவி ஆழ்வார் பரங்கி நாற்காலியிலும் எழுந்தருளி
ஒன்று சேர்ந்து வீதி உலா செய்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இந்நாளில்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து இங்கு வந்து பெருமாளின்
திருவருளைப் பெறுகின்றனர். நவதிருப்பதியின் ஒவ்வொரு திருக்கோவில்களிலும் தனி
வரலாறை அடுத்து வரும் கட்டுரைகளில் காணலாம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீகம் : நவதிருப்பதி - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | spirituality : Navathirupati - Spiritual Notes in Tamil [ spirituality ]