ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும், சமூக வாழ்வையும் ஒழங்கு முறைக்குட்படுத்துவதே ஆன்மீகம்.
நவதிருப்பதி
முன்னுரை
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும், சமூக வாழ்வையும் ஒழங்கு முறைக்குட்படுத்துவதே ஆன்மீகம். உலகம் முழுவதும் ஆன்மீகமானது பல்வேறு மதம் மற்றும் சம்பிரதாயம் ஆகியவற்றின் நடைமுறை வழியாக தன் பணி செய்கின்றது. மனித குலத்தை பண்படுத்துவதே ஆன்மீகத்தின் அடிப்படை நோக்கம். நம் பாரத நாடு ஆன்மீக வழியிலான பண்பாட்டு ரீதியில் பல்வேறு புராதனமான நடைமுறைகளை தன்னகத்தே கொண்ட பெருமைகளையுடையது. ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயமும், ஸ்ரீராமனுஜரும் பன்னிரு ஆழ்வார் இவரது படைப்புகளம் ஆன்மீக வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது. மகாவிஷ்ஸ பல்வேறு திருநாமங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகின்ற திருத்தலங்களில் பன்னிரு ஆழ்வார்களால் மங்களாஸாஸனம் செய்விக்கப்பட்ட (வரவேற்று போற்றப்பட்ட) 108 திவ்விய தேசமும் முக்கியமானது.
பரமபதம் திருப்பாற்கடல் நீங்கலாக 106 தலங்களும் பாரத தேசத்தில் பரவலாக அமைந்துள்ளது.
இத்திருத்தலங்களில் சோழநாட்டில் 40,
தொண்டை நாட்டில் 22.
பாண்டிய நாட்டில் 18,
மலை நாடு 13,
வட நாடு 11,
நடு நாடு 2
என அமையப் பெற்றுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு. பாண்டிய நாட்டில் அமைந்துள்ள 2 திருப்பதிகளில் தாமிரபரணி நதியின் இருபுறமாக அமைந்துள்ள 9 திருத்தலங்களுலே நவதிருப்பதி என்று அழைக்கப்படுகின்றது.
அவையாவன :
1) திருவைகுண்டம்
2) திருவரகுணமங்கை (நத்தம்)
3) திருப்புளியங்குடி
4) இரட்டை திருப்பதி
5) பெருங்குளம்
6) தென்திருப்பேரை
7) திருக்கோளூர்
8) ஆழ்வார் திருநகரி
ஆழ்வார் திருநகரியில் வைகாசி மாத நம்மாழ்வார் திருநட்சத்திரமான விசாகத்தை ஒட்டி ஆண்டுதோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருநாளில் ஐந்தாம் திருநாளன்று நவதிருப்பதி பெருமாளும் ஆழ்வார்திருநகரில் எழுந்தரளி நம்மாழ்வாரால் மங்களாஸாஸனம் செய்கின்றார். அன்று இரவு ஒன்பது பெருமாளும் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்னவாகனத்திலும் மதுரகவி ஆழ்வார் பரங்கி நாற்காலியிலும் எழுந்தருளி ஒன்று சேர்ந்து வீதி உலா செய்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இந்நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து இங்கு வந்து பெருமாளின் திருவருளைப் பெறுகின்றனர். நவதிருப்பதியின் ஒவ்வொரு திருக்கோவில்களிலும் தனி வரலாறை விளக்கமாக காணலாம்.
இத்தலம் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றின் வடகரையில் உள்ளது. பேருந்து வசதி, புகைவண்டி வசதியும் இருக்கிறது. 15.5.09 அன்று மகா சம்ப்ரோஷணம் (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.
பிரம்மன் எழுந்தருளியுள்ள சத்திய லோகத்தில் ஒரு சமயம் பிரளையம் ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்து கொண்டு இருந்த காலத்தில் சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவன் வைத்திருந்த (சிருஷ்டி ரகசிய கிரந்தம்) படைப்பு தொழில் பற்றி கசிய ஏடுகளை ஒளித்து வைத்துக் கொண்டான். தன் நிலை வருந்திய பிரம்மா அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு விஷ்ணுவை குறித்து தவம் செய்ய எண்ணி தன் கையில் உள்ள பிரம்ம தண்டத்தை பெண்ணாக்கி தவம் செய்யும் இடத்தை அறிந்து வரச் சொல்ல அதுவும் தாமிரபரணி ஆற்றங்கரையில் சோலைகள் நிறைந்த இடத்தை தேர்வு செய்து கூற பிரம்மன் அங்கு வந்து கடுத்தவம் செய்து திருமால் நேரில் அங்கு வந்து பிரம்மனை வாழ்த்தி இழந்த ரகசியத்தை மீட்டுக் கொடுத்தார். திருமாலிடம் பிரம்மன் தனக்கு காட்சி கொடுத்த நின்ற திருக்கோளத்திலேயே இங்கு வைகுண்டநாதனாக காட்சியளிக்க வேண்டும் என வேண்ட அவரும் சம்மதித்தார். மூல விக்கிரகத்தை பிரம்மனே பிரதிஷ்டை செய்து தன கமண்டத்திலேயே நீர் எடுத்து திருமஞ்சனம் செய்து கலசத்தை நதிக்கரையில் பிரதிஷ்டை செய்தல் தீர்த்தம் கலச தீர்த்தம் எனப்படுகிறது.
கால தூஷகன் என்னும் திருடன் ஒருவன் இப்பெருமானை வழிபட்டு திருடச் செல்வாளாம். திருடிய செல்வத்தில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாகவும் தருவாள். இவன் கூட்டத்தினர் அரண்மனையில் திருடுகையில் பிடிபடும் பொழுது கால நூஷகள் வைகுண்ட நாதனிடம் சரண் அடைந்து தன்னை காக்குமாறு வேண்ட பெருமாளே காலதூஷகள் வேடத்தில் எதிரில் வர காலதூஷகனை அரசன் பார்த்த போது தன் சுயரூபத்தை காட்டியருள அடிபணிந்து நின்ற மன்னன் தன்னிடம் கொள்ளையடித்து செல்ல வேண்டிய காரணம் கேட்க தர்மம் காக்காத உன்னை தர்மத்தில் ஈடுபட செய்யவே நான் வந்தேன் என்றார். அரசனும் தளக்கு கிடைத்த பாக்கியம் மக்களுக்கும் கிடைக்க உட்சவ மூர்தியை கள்ளபிரான் என்று கூறி வழிபடலானார்.
இக்கோவிலின் அமைப்பு முழுவதும் சில காலத்திற்கு முன் பூமியில் புதையுண்டு போனது பின்னர் மணப்படை வீட்டை தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியமன்னனின் பசுக்களை இங்கு ஒட்டி வந்து மேய்ப்பது வழக்கம். இதில் ஒரு பசு மட்டும் தனித்து பெருமாள் பூமியில் மறைந்து உள்ள இடத்தில் பால் சொறிவதை வழக்கமாக கொண்டிருந்தது. இதனை மேய்ப்பவன் மன்னனிடம் கூற மன்னன் தனது பரிவாரங்களுடன் அங்கே வந்து மணலை அகற்ற அங்கே வைகுண்ட பெருமாள் சன்னதியை கண்டு ஆனந்தித்து இப்பொழுதுள்ள கோவிலை அமைத்தார். இத்தலத்தில் பெருமாளை சூரிய ஒளி ஆண்டிற்கு இருமுறை சித்திரை 6, ஐப்பசி 6 ஆகிய நாட்களில் காலைக் கதிரவன் பெருமாளின் பாதத்தை தரிசித்து செல்கிறான். இதற்காக கொடி மரம் சற்று தெற்கே விலகி அமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுதுள்ள கோபுரம் சந்திர குல பாண்டியனால் கட்டப்பட்டது. வீரப்பன் நாயக்கர் காலத்தில் கொடி மரமும், சந்தான சபாபதி காலத்தில் மண்டபமும் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான கலை அம்சம் உள்ள கோவில் இங்கு உள்ள உற்சவரனி திருமேனியை உருவாக்கிய சிற்பி இவர் அழகில் மயங்கி கன்னத்தில் கிள்ள சிற்பியன் ஆத்மாத்தமான அன்பின் அடையாளத்தை கன்னத்தில் வடுவாக ஏற்றுக் கொண்டார். இன்றும் இந்த வடுவை உற்சவரிடம் காணலாம்.
மூலவர் - வைகுந்தநாதன் - நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக மண்டலம், (மூலவருடம் தாயர் கிடையாது)
உற்சவர் - கள்ளபிரான். தாயார் - வைகுண்டவல்லி, பூதேவி (தனி சன்னதி) தீர்த்தம் - பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதி. விமானம் - சந்திரவிமானம்
பிரத்யட்சம் - பிருகு சக்கரவர்த்திக்கும், இந்திரனுக்கும் - ஆகமம்- பாஞ்சராத்ரம் - சம்பிரதாயம் - தென்கலை.
நம்மாழ்வார் மங்களாஸாஸனம்
புளியங்குடி கிடந்து வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி, நலிந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி (நின்(று) ஆர்ப்ப, பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே
நத்தம் என்ற பெயரே வழக்கில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் கிழக்கே வந்தால் இத்திருதலத்திற்க வரலாம். பேருந்து வசதி உள்ளது. குக்கிராமம். இப்பொழுது தேவபிரசன்னத்தில் கோவில் அருகிலேயே புஷ்கரணி இருப்பதாய் கண்டு புதைத்திருந்த புஷ்கரணியை தோண்டி சீர் செய்து உள்ளார்கள். 20.10.96 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னோரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புன்னிய கோஷம் என்னும் அக்கிராகாரத்தில் 'வேதவி என்பவர் தன் மாதா, பிதா, குரு மூவருக்குரிய கடன்களை முடித்து திருமாலை நோக்கி ஆஸனதை என்னும் மந்திரத்தை ஜெபித்து தவமிருக்க எண்ணியிருக்கையில் அவனிடம் திருமால் கீழ பிராமண வேடத்தில் வந்து ஆஸனதை மந்திரம் ஜெபிக்க வரணகுண மங்கைதான் சிறந்தது என்று கூற அவர் இங்கு வந்து கடுந்தவம் திருமாலின் அருள் பெற்று பரமபதம் அடைந்தார். ஆஸன மந்திரம் செய்து ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமாதலால் விஜயசானர் என்னும் திருநாம் திருமாலுக்கு உண்டானது. பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமேசமகரிஷிக்கும் சத்தியத்தால் கணவனின் உயிர் மீட்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியான சாவித்திரிக்கும் அதர்மத்தையும், அக்கிரமத்தையும் கட்டுப் பொசுக்கும் அக்கினி தேவனுக்கு காட்சியளித்த இடம், இம்மூவருக்கும் சத்தியத்திற்கு ஜெயம் அளிப்பவனாக, சத்திய நாராயணனாக ஆதி சேடன் குடைபிடிக்க சத்தி ஜெயவிஜயங்களை தன் ஆசனமாகக் கொண்டு விஜயாசனர் என்னும் திருநாமம் பெற்று வீற்றிருந்த திருக்கோலத்தில் பரமபத சேவை தந்தருளும் தலம். இத்திருப்பதியில் உயிர் நீத்தால் மோட்சம் கிட்டும் என ரோமேச முனிவர் கூறியுள்ளார்.
மூலவர் - விஜயாசனபெருமாள் - ஆதிசேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலம் கிழக்கு பார்த்த திருமுக மண்டலம்.
தாயார் - வரகுணவல்லித் தாயர், வரகுண மங்கைத் தாயர் (தனி சன்னதி இல்லை). தீர்த்தம் - அக்னி தீர்த்தம் தேவ புஷ்கரணி. விமானம் - விஜயகோடி
பிரத்யட்டசம் - அக்னி, ரோமேச முனிவர், சத்தியவான் முதலியவர்க்கு ஆகமம் - வைகானஸம். சம்பிரதாய் - தென்கலை.
நம்மாழ்வார் மங்களாஸாஸனம்
புளியங்குடி கிடந்து வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி, நலிந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள்கூத்தாடி (நின்(று) ஆர்ப்ப, பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே
பாடல் 3571
திருவரகுணமங்கையிலிருந்து அதே சாலையில் கிழக்கே அரை கி.மீ.யில் உள்ளது இத்திருத்தலம். பேருந்து வசதி இருக்கிறது. இங்கு பெருமாளின் திருஉத்தியிலிருந்து பிரம்மா சேவை சாதிக்கிறார். 15.5.96 அன்று மகா சம்ப்ரோஷணம் (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.
ஒரு சமயம் திருமால் இலக்குமி தேவியுடன் இந்நதிக் கரையில் தனித்திருந்த பொழுது பூவுலகுக்கு வந்தும் தன்னை ஒதுக்குகினிறாரோ என பூமாதேவி சினங்கொண்டு பாதாளலோகம் செல்ல பூமி இருண்டு வறண்டது. தேவர்கள் எல்லாம் திருமாலை வழிபட அவரும் இலக்கும் தேவியுடன் பாதாள லோகம் சென்று பூமாதேவியை சமாதானம் செய்து இருவரும் சமமே என்று கூறி நட்புண்டாக்கி இரு தேவிமார்களுடன் இங்கே காட்சியளிக்கிறார்.
வியாழ பகவானின் யோசனைப்படி இந்திரன் இங்கு வந்து பூமி பாலனை வேண்டி தீர்த்தத்தில் நீராட பரமஹத்தி தோஷம் நீங்கியது. தனது சாபவிமோசனத்தில் மகிழ்ந்த இந்திரன் திருமாலை நோக்கி பெரிய யாகம் செய்து வசிஷ்டரின் மகளையும் அவருடன் வந்த ரிஷிகளையும் மதிக்காமல் கடுஞ்சொற்கால் வஞ்சிதத அரக்கனாக சபிக்கப்பட்ட யக்ஞசர்மாவிற்கும். திருமால் தோன்றி சாபவிமோசனம் அளித்தார். இங்கே பெருமாள் ஆதிசேஷன் மீது பனிரண்டு அடியில் காட்சி கொண்டுள்ளார். சயனப் பெருமாளின் திருப்பாதத்தை மூலஸ்தானத்தை சுற்றி வரும் போது உள்ள ஜன்னல் வழியே தரிசிக்கலாம். பெருமாள் நாபியியல் இருந்து ஒரு தாமரைக்கொடி சுவரில் பிரம்மன் வீற்றிருக்கும் தாமரையுடன் சேருகின்றது. இவர் மேனிக்கு எண்ணெய் காப்பு செய்ய 250 லிட்டர் உபயோகிக்கப்படுகிறது. இலக்குமியுமியும் பூமாதேவியும் பெரிய உருவங்களாக பெருமாளின் திருப்பாதத்தில் அமர்ந்துள்ளனர். இங்கு குழந்தைப் பேறுக்காக செய்யப்படும் பிரார்த்தனைகள் பொய்ப்பதில்லை.
மூலவர் - காய்சினவேந்தன், புஜங்கசயனம் கிழக்குப் பார்த்த திருமுக மண்டல்,
உற்சவர் - எம் இடர்களைவான். தாயார் - மலர்மகள், திருமகள் (பெரிய திருவுருவங்கள்) புளியங்குடிவல்லி என்ற உஸ்தவதாயாரும் உண்டு) தாயார்களுக்கு தனி சன்னதி இல்லை தீர்த்தம் - வருணநீருதி தீர்த்தம், விமானம் - வதசார விமானம்,
பிரத்யட்சம்- வர்ணம் நீருதி, தர்மராஜன். ஆகமம் - வைகனாஸம், சம்பிரதாயம் - தென்கலை.
நம்மாழ்வார் மங்களாஸாஸனம்
பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கையத்தான் திரு அருளும்
கொண்டு, நின் கோயில் சீய்த்துப்பல் படிகால் குடி குடி வந்து
ஆட்செய்யும் தொண்டரோர்க் (கு) அருளிச் சோதி வாய் திறந்துன்
தாமரைக் கண்களால் நோக்காய்.
தென்டீரைப் பொருநல் தன்பணை சூழ்ந்தனை திருப்புளியங்குடி
கிடந்தானே
- பாடல் 3566
புளியங்குடி கிடந்து வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி,
நலிந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள்கூத்தாடி (நின்(று) ஆர்ப்ப,
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே
- பாடல் 3571
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தியுள் திருஉடம்பு அசைய,
தொடர்ந்து குற்றவேல் செய்து கொல்லடிமை வழிவரும் தொண்டரோர்க் கருளி,
தடங் கொள்தாமரைக் கண்விழித்து நீ எழுந்தன் தாமரை மங்கையும் நீயும்,
இடங்கொள் மூவுலகும் தொழவிருந்த தருளாய் திருப்புளியங்குடி கிடந்தானே
- பாடல் 3570
திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் கிழக்கே 5 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் உள்ளது. பேருந்து வசதி உண்டு. கருடன் (ஆடல் பறவை) ஏக ஆசனத்தில் உஸ்தவருடன் எழுந்தருளியுள்ளார். வாசத்தடம் என்ற குளம் தேவபிரசன்னத்தில் செய்யப்பட்டுள்ளது. கோவிலின் தென்புறத்தில் கழுநீர் தொட்டியான் கண்டுபிடிக்கப்பட்டு என்னும் சன்னதி உள்ளது. திருமடப்பள்ளியிலிருந்து வரும் பிரசாத கழிவுநீர் இவர் பாதம் வழியாக செல்கிறது. 9.12.98ல் மகாசம்ப்ரோஷணம் (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.
இங்கு வசித்து வந்த வேதசாரண் குழுத வல்லி தம்பதியினரின் தவப்புதல்வியான கமலாவதி மானிடர் யாரையும் மணந்து வாழ மாட்டேன். இப்பெரு மாளையே மணம்புரிவேன் என்று கடும் தவம் கொண்டாள். பெருமாளும் நேரில் தோன்றி அவளின் ஆசைப்படி தன் மார்பில் ஏற்றுக்கொண்டார். இன்றும் இப்பெருமாளின் நெஞ்சில் கமலாவதியைக் காணலாம். இதனால்தான் பெரும்பாக்கியம் அடைந்ததாக நினைத்த வேதசாரண வேங்கடவானுக்கு நித்ய ஆராதனை செய்து வந்தார். இவருடைய மனைவியானவள் குமுதவல்லி குளிக்க செல்லும் வழிகளில் அச்மசாரன் என்கிற அரக்கன் ஆனவன் அவர் மனைவியை கவர்ந்து சென்று இமயத்தில் மேலே சிறை வைத்து இருந்தான். இதை அறிந்த வேதசாரண் பெருமாளிடம் அருள்புரிய வேண்டினார். பெருமாளும் குமுதவல்லியை இமயமலையிலிருந்து தனது கருட வாகத்தில் மீட்டு வந்தார். அச்மசாரன் இங்கு வந்து பெருமாளுடன் போர்புரிய அவன் மீது நர்த்தனம் செய்து அவனை வதம் செய்தார்.இதனால் பெருமாளுக்கு ஸோர (அரக்கன்) நாட்டியன் தமிழில் மாயக்கூத்தன் என்ற திருநாமம் ஏற்பட்டது. தனக்கு உதவிபுரிந்த கருடனுக்கு உஸ்தவமூர்த்தியுடன் ஏக ஆசனம் அளித்துள்ளார்.
மூலவர் - வேங்கடவானன் நின்ற திருக்கோலம் கீழக்கு பார்த்த திருமுகமண்டலம்.
உற்சவர் - மாயக்கூத்தன். தாயார் - அலர்மேலு மங்கை, குளந்தை வலலி - (தனி சன்னதி இல்லை) தீர்த்தம் - பெருங்குளம் விமானம் - ஆனந்த நிலையம்.
பிரத்யட்சம் - பிரகஸ்பதிக்கு. ஆகமம் - வைகானஸம். சம்பிரதாயம் - தென்கலை.
நம்மாழ்வார் மங்களாஸாஸனம்
கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன்? கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்.
பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தன்
மாடக்கொடிமதின் தென்குளத்தை வண்குட பால் நின்ற மாயக்கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல்லோர் ஆழிவலவனை ஆதரித்தே
- பாடல் 3461
பெருங்குளத்திலிருந்து கிழக்கே 0.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மங்கலக்குறிச்சி வந்து வடகால் என்ற வாய்க்கால் கரை வரியாக மேற்கு நோக்கி 4 கி.மீ பாதையில் வந்தால் இத்திருத்தலத்தை அடையலாம். காட்டுக் கோயில் வீடுகளே கிடையாது. இருகோவில்களும் அருகருகே அமைந்துள்ளன. இத்திருத்தலும் வடக்கு கோவில் எனப்படுகிறது. இத்திருத்தலங்களுக்கு மேற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் நம்மாழ்வார் அவதரித்த அப்பன் கோயில் உள்ளது.
ஆத்ரேயசுப்ரபர் என்கிற ரிஷி ஆனவர் யாகம் செய்வதற்காக இந்த தலத்திற்கு வந்து யாகம் செய்யும் இடத்தை சுத்தம் செய்யும் பொழுது பூமியில் புதையுண்ட மிக ஒளிமயமான ஒரு வில்லையும், தராசையும் அவர் கண்டார். அவைகளை கையில் எடுத்த உடனே வில்லானது ஆணாகவும், தராசு ஆனது பெண்ணாகவும் மாறச் செய்தது. இருவரும் குபேர சாபத்தால் வில்லாகவும், தராசாகவும் மாறி இத்தல மண்ணில் புதையுண்டு கிடந்தோம் என கூறி பரமபத முக்தி அடைந்தனர். எனவே இத்தலம் ஆனது தொலைவில்லி மங்கலம் எனவும் பெயர் வந்தது.
சுப்ரபர் யாகத்தை வெகுவிமர்சையாக நடத்தி அதில் திரண்டு வந்த பலனை அவிர்ப்பாகமா தேவர்களுக்கும் கொடுத்தார், அவிர்பாகம் கிடைத்த மகிழ்ச்சியில் தேவர்களும் சுப்ரருடன் திருமாலை வேண்ட திருமால் அங்கு காட்சியளித்தார். அதனால் மூலவர் தேவர்பிரான் என அழைக்கப்படுகின்றார். பூமிக்கு அதிபதியாகிய இந்திரனுக்கும், நீருக்கு அதிபதியான வருணனுக்கும், வாயு பகவானுக்கும் காட்சியளித்த இடம் இது.
மூலவர் – தேவர் பிரான் இருக்கின்ற திருக்கோலம் கிழக்கு திசை பார்த்த திருமுக மண்டலம் ஆகும்.
தாயார் - உபதாயார்களுக்கு தனி சன்னதி இல்லை. தீர்த்தம் - வருண தீர்த்தம் தாமிரபரணி நித். விமானம் - குமுத விமானம்.
பிரத்யட்சம் - இந்திரன் வாயு வருணன். ஆகமம் - வைகானஸம்.
தேவபிரான் சன்னதியில் யாகம் முடித்து சுப்ரபர் தினந்தோறும் வடக்கு பக்கத்தில் இருந்த தடாகத்தி லிருந்து தாமரை மலர்களை கொய்து வந்த தேவபிரானை வழிபட்டு வந்தார். தினந்தோறும் இத்தகைய அழகான மலர்களை எங்கே எடுத்து வருகின்றார் என்பதை பார்க்கவே பெருமாள் சன்னதிக்கு வடக்கே நின்று கொண்டு பார்த்தார். அந்த நேரத்தில் மலர்களுடன் வந்த சுப்ரபர் பெருமாளை பார்த்து தன்னை பின் தொடர என்ன காரணம் என்று கேட்டபொழுது. உம்முடைய செந்தாமரை புஷ்ப பூஜைக்கு மயங்கி இங்கே இருந்தோம். எனக்கும் தேவபிரானோடு சேர்ந்து அபிஷேகம், அர்ச்சனை செய்யுமாறு கூறினார். சுப்ரபர் பெருமாளின் வேண்டுகோளின்படி பெருமாளை பிரதிஷ்டை செய்து இரு கோவில் களுக்கும் நாள் தவறாமல் பூஜை செய்து வந்தார். தனக்கு தாமரைப் பூ கொண்டு அர்ச்சனை செய்பவர்களுடைய அனைத்து சகல பாவங்களையும் போக்கி ஆசிர்வாதம் என்கிற அருள் தருவேன் என்றும் அவர் கூறினார். இந்த பெருமாளை அஸ்வினி, தேவர்கள் தங்களுக்கு அவிர்ப்பாகம் வைத்திய சாஸ்திரம் பின்பற்றாததாலும் பிரம்மிடம் வேண்டி, பூமியில் முறையிட இப்பெருமாளை நோக்கி வழிபட்டு பெருமாளை தாமரை மலரை கையில் கொண்டு காட்சியளித்து குறை நீக்கினார். அஸ்வினி, தேவர்கள் மருத்துவத்தின் தலைவர்கள் கங்கை நதிக்கரையில் வாழ்ந்த விபீதகள் என்றவன் இந்த தீர்த்தத்தில் நீராடி தனது குஷ்ட நோயை போக்கியதால் அவன் நெடுங்காலம் இத்தலத்தில் தங்கி இரு பெருமாளுக்கு தொண்டு செய்ததாக வரலாறு.
மூலவர் - அரவிந்தலோசனன், வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர் - செந்தாமரைக் கண்ணன். தாயார். கருத்தடங்கண்ணி. தீர்த்தம் - வருணை தீர்த்தம் தாமிரபரணி
பிரத்யட்சம் - இந்திரன், வாயு, வருணன். ஆகமம் - வைகானஸம். சம்பிரதாயம் - தென்கலை. விமானம் - குமுத விமானம்.
நம்மாழ்வார் மங்களாஸாஸனம்
துவளில் மாமணி மாடம் ஓங்கு தொலைவில்லி மங்கலம் தொழும்
இவளை, நீர் இனிஅன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடுமினோ
தவள ஒண்சங்கு சக்கரம் என்றும், தாமரை தடங்கண் என்றும்.
குவளை ஒண் மலர் கண்கள் நீர்மல்க நின்று நின்ரு குமுருமே
- பாடல் 3271
6. தென்திருப்பேரை (சுக்ரன்)
தாமிரபரணிக் கரையின் தென்கரையில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ,ல் இத்தலம் உள்ளது. பேருந்து வசதி உண்டு. 16.6,95 அன்று மகா சம்ப்ரோஷணம் (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.
ஸ்ரீமத் நாராயணன் திருமலை விடுத்து பூமா தேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டதாக நம்பிய திருமகள் துர்வாச முனிவரிடம் பூமா தேவியை போல்தான் அழகு இல்லாத காரணத்தால் ஸ்ரீமந் நாராயணனோ தன்னை வெறுக்கின்றார். அதனால் அவளை போன்றே தனக்கும் அழகும் திறமும் வேண்டும் என கேட்டார். துர்வாசரும் பூமிதேவியை காண வந்த பொழுது திருமாலின் மடியில் அமர்ந்து துர்வாசரை மதியாமல் இருக்க. கோபத்தில் துர்வாசகர் பூமாதேவியை நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய் என சாபமிட்டர். எனவே சாப விமோசனம் பெற பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை ஜெபம் செய்து வர பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும் பொழுது இரண்டு மகர குண்டலங்கள் (மீன் வடிவான காதில் அணியும் ஓர்அணிகலன்) கிடைக்க அப்பொழுது திருமால் பிரத்யட்சமாக திருமாலுக்க அளித்து மகிழ்ந்தார். தேவர்கள் பூக்களை மாரி சொரிய பூமா தேவியினுடைய மேனியானது மிகவும் அழகானது. லக்குமியின் உடலுடன் பூமா தேவி தவமிருந்ததால் ஸ்ரீபேரை (லக்குமியின் உடலைப் பெற்றவர்) என்று ஆனது. இன்று பெருமாள் மகர, குண்டலங்களுடன் காட்சியளிக்கிறார். இதனால் பெருாளின் திருநாமம் மகர நெடுங்குழைகாதன் (மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன்) வருணன், அசுரர்களிடம் போரிட்டு தன் பாசம் என்னும் ஆயுதத்தை இழந்து இத்தலம் வந்து தவம் செய்து திரும்பப் பெற்றதால் இத்தலத்தில் மழை வேண்டி (வருண பகவானை) பிரார்த்திக்கும் பிராத்தனைகள் இன்று வரை பொய்ப்பதில்லை. சுக்கிரனும் இங்கு வந்து பெருமாள் அருள் பெற்றார். விதர்ப்ப நாட்டினுடைய மன்னன் ஆனவன் இங்கு வந்து வழிபட்டதால் நாட்டின் மொத்த அதாவது 12 வருட பஞ்சம் நீங்கி நாடு மிகவும் செழித்ததாக வரலாறு கூறுகிறது. பிரம்மனும் ஈசானய ருத்தரருக்கும் முன்பாக குழைக்காத நந்சியார். வேதம் ஓதி வரும் வேத வித்களை காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது. "வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக்குழா விளையாட்டு ஒலியும் அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே" என்ற நம்மாழ்வார் பாசுரமும் இதையே காட்டுவதாக கூறப்படுகின்றது. நம்மாழ்வார் காலத்திற்கும் முன்பே அமையப் பெற்றது. இக்கோவில் பின்னே பத்தாம் நூற்றாண்டின் மத்தியில் அதனுடைய கொடி மரமும், மண்டபமும், பின்னே வெளி மண்டபம் மற்றும் தேரும் செய்யப்பட்டுள்ளதாக வரலாற்று கல்வெட்டுகள் கூறுகின்றன. சுந்தரபாண்டியனுக்கு குழந்தை பேறு பெற வேண்டி அவனால் சோழ நாட்டில் இருந்து இவ்வூருக்க அழைத்து வரப்பட்டு தினசரி பெருமாளை பூஜை செய்வதற்காக குடியமர்த்தி பொன்னும் பொருளும் கொடுக்கப்பட்ட ஜெய்முனி சாமவேத தலவகார நூற்றெண்மர் வழி வந்த இவ்வூர் அந்தணர்கள் பெருமாளை தங்களுள் ஒருவராகவே கருதி பல அறக்கட்டளைகளை ஏற்படுத்தி பல்வேறு நித்தியமாக வருட கைங்கரியங்களை செய்து வருகின்றனர். சந்தர பாண்டியனுக்காக 108 அந்தணர்களை சோழ நாட்டில் இருந்து அழைத்து வரும் வழியில் ஒருவர்காணாமல் போய்விட்டார் ஊர் வந்தடைகையில் நூற்றியெழுபேர் தான் இருந்தனர். ஆனால் அரசன் இவ்வூர் வந்து பார்க்கையில் 108 நபர் இருந்தனர். பெருமாளே எங்கோ காணாமல் போன மனிதர் வடிவில் அரசன் முன்னே தோன்றினார் எனவும் அதனால் பெருமாள் மக்களில் ஒருவர் எனவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இங்கு பங்குனி ப்ரமோஸ்தலத்தின் 5ம் திரு நாள் இரவு பெருமாள் கருட சேவையில் பிரதான வாயிலில் இருந்து வெளி மண்டபத்திற்கு ஏழுகின்ற சமயத்தில் பெருமாளை சேலிக்கும் நாத்திகனும் ஆத்திகனும் ஆவான். வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத அப்பேற்பட்ட காட்சி அது.
மூலவர் - மகர நெடுங்குழைக்காதன் வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர் - நிகரில் முகில் வண்ணன். தாயர் - குழைக்காத நாச்சியார். திருப்பேரை நாச்சியார் தாயர்களுக்கு தனித்தனி சன்னதி. தீர்த்தம் - சுக்கிர கரணி, சங்கு தீர்த்தம், கூடுபுனல் தீர்த்தம் பத்ர விமானம் - சுக்கிரன், ஈசானயருததார், பிரம்மா முதலியவர்களுக்கு. பாஞ்சராத்ரம் - சம்பிரதாயம் - தென்கலை.
நம்மாழ்வார் மங்களாஸாஸனம்
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழியேந்தித்த தாமரைக் கண்ணன் என்னெஞ்னூடே
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் என் சொல்லிச் சொல்கேன் அன்னைமீர்காள்
வெள்ளச் சுகமன் வீற்றிருக்க வேதவொலியும் விழா வொலியும்,
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே
தென்திருப்பேரையிலிருந்து ஆழ்வார்திருநகரி வரும் வழியில் 3 கி.மீ வந்து தெற்கே போகும் ஒரு கிளைப் பாதையில் 2 கி.மீ சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். மதுரகவி ஆழ்வார் அவதார தலம். தல வரலாறு: குபேரன் ஒருமுறை சிவனைவழிபட கைலாயம் சென்றான். அங்கே உமயவள் சிவனுடன் இருக்க இவனது கண்கள் உமயவளை கெட்ட நோக்கத்தோடு பார்க்க, இதனால் கோபம் கொண்ட பார்வதி குபேரனை சபித்தாள். அதனால் அவனிடம் இருந்த நவ நிதிகளும் அகன்று உருவம் விகாரமானது. நவநிதிகளும் தவமிருந்து இவ்வூர் பெருமாளை அடைக்கலம் கொண்டதால் வைத்தமாநிதி பெருமாள் (நிதிகளை வைத்திருப்பவர்) என அழைக்கப்படுகின்றார். குபேரன் தன் தவறை உணர்ந்து சிவன் பாதம் பணிய அவர் பார்வதியிடம் மன்னிப்பு கோருமாறு கூற, இவன் பர்வதியை அடிபணிய அவள் இனி உனக்கு ஒரு கண் தெரியாது, உடல் விகாரம் மாறாது. இழந்த நிதிகளை அவை தஞ்சம் அடைந்துள்ள வைத்தமாநிதி பெருமாளிடம் தவம் செய்து பெற்றுக் கொள் என்று கூறினாள்.
நிலையான செல்வம் இருக்கும் இடத்தில் அதர்மம் ஆட்சிபுரியும் தர்மம் இருக்காது. ஆகவே செல்வம் ஒருவரிடம் நிலையாக இல்லாமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது பெருமாள கிருபை. தர்மம் நிரந்தரமாகவே இங்கே தங்கி பெருமாளை வழிபட்டு வருகின்றதாம். வியாச வம்சத்தில் வந்த தர்மகுப்தன் என்பவர் 10 குழந்தைகளுடன் தரிததி ரனாகி, வறுமையில் மிகவும் கஷ்டப்பட பரத்வாஜ முனிவரின் ஆலோசனையின்படி இங்கு வந்து பணிவிடை செய்து பெருஞ் செல்வத்திற்கு அதிபதியாக சுகவாழ்வு பெற்றான்.
மூலவர் - வைத்தமாநிதிப்பெருமாள் நிஷேபவித்தன், புஜங்க சயனம் கிழக்கு பார்த்த திருமுகமண்டலம்.
தாயார் - குமுதவல்லி கோளூர் வல்லி தனித்தனி சன்னதி, தீர்த்தம் - குபேர தீர்த்தம், தாமிரபரணி நிதிவிமான் - ஸ்ரீகர விமானம்,
பிரத்யட்சம் - குபேரன், மதுரகவி. ஆகமமம் - வைகானஸம். சம்பிரதாயம் - தென்கலை.
நம்மாழ்வார் மங்களாஸாஸனம்
உண்ணும்சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மகிக் அவனூர் வினவி
தண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே
- பாடல் 3293
ஒரு சமயம் திருமாலிடம் பிரம்மா தான் தவமிருக்க இடம் கூறுமாறுவேண்ட திருமால் உன்னை படைப்பதற்கு முன்னமே தாமிரபரணி நதிக்கரையில் யாம் எழுந்தருளி உள்ளோம் என்று கூறினார். ஆதியிலே தோன்றி நாதன் என்பதால் ஆதி நாதன், ஆதிபிரான் என திருநாமம் கொண்டார். திருமாலே வந்து பிரம்மனுக்கு குருவாக காட்டிய இடம் என்பதால் குருகூர் என கூறப்படுகிறது. இங்கு ஆற்றில் வந்த சங்கு இப்பெருமானை வழிபட்டு மோட்சம் பெற்தால் சங்கின் வேறு பெயர் குருகு. குருகு மோட்சம் பெற்ற தலம் குருகுஊர் குருகூர் என்றும் கொள்ளலாம். சங்குமோட்சம் பெற்றதலம் இன்றும் திருச்சங்கண்ணி துறை என்று கூறுகின்றனர்.
சாளக்கிராமத்தில் மந்தன் என்ற அந்தணச் சிறுவன் வேதம் படிக்கும் காலத்தில் அதை சரியாக படிக்காமலும் வேதத்தை இகழ்ந்து பேசியும் வந்தான். இதனால் கோபமுற்ற குரு அவனை ஈழிகுலத்தில் பிறக்க சபித்தார். அவனும் படிப்பதை நிறுத்திவிட்டு திருமால் ஸ்தலங்களின் ஆலய துப்புரவு பணிகளில் ஈடுபட்டு தன் காலங்கடந்தான் மறு பிறவியில் தாந்தன் என்னும் பெயரில் கீழ்குலத்தில் பிறந்து ஒழுக்கத்தில் சிறந்தவனாக விளங்கினான். பின்னார் குருகூர் திருச்சங்கண்ணி துறைக்கு வந்து ஆதிநாதனை வழிபட்டு வந்தான். அங்கே இருந்தவர்கள் இவனை வெறுத்து ஒதுக்க அவன் கிழக்கே சென்று மறுகரையில் ஆதிபிரானை மணலில் அமைத்து வழிபட்டான். திடீரென தாந்தனை ஒதுக்கியவர்களுக்கு கண் தெரியாமல் போகவே அவர்கள் பெருமாளை சரணடைய அசரீரியாய் நீங்கள் தாந்தனை ஒதுக்கியதற்கு தண்டனை என்று கூற அவர்கள் அவன் இருப்பிடம் சென்று மன்னித் தருள வேண்டிய பின் கண்ணொளி பெற்றனர். பெருமாளும் தாயார்களோடு காட்சி கொடுத்து தாந்தனை தன்னுடன் இணைத்துக் கொண்டார். இதனால் தாந்த ஷேத்ரம் என கூறுகின்றனர்.
பிற்காலத்தில் தாந்தன் தங்கிய ஆலமரத்தில் முன்பு ஒருமுறை தங்கி: வேடன் ஒருவன் மறு பிறவியில் சங்கன் என்னும் முனிவராக கடுந்தவம் கொள்கையில் நாரத முனி அவனிடத்தில் தவத்திற்கான காரணம் கேட்க அவன் மோட்சம் வேண்டும் என்று கூற அவரும் குருகூர் சென்று பெருமாளை வேண்டுமானு அறிவுறுத்த முனிவரும் சங்காக மாறி குருகுகூல் வேண்டி பெருமாள் காட்சி அளித்து மோட்சம் பெற்றார். அந்த இடம்தான் இன்றும் திருச்சங்கண்ணி துறை என்று அழைக்கப்படுகிறது. இங்கு இருக்கும் புளியமரம் இலக்குமணன் எனப்படுகிறது. ஆதிசேஷனாக இலக்குமணம் இருப்பதால் சேஷ சேஷத்திரம் எனவும். வராஹ அவதாரம் காண முனிவர்கள் இத்தலத்தில் தவமிருந்து அவர்களுக்கு பிராட்டியுடன் வராஹ நாராயணன் காட்சியளித்ததால் வராஹஷேத்திரம் எனவும் நாய்க்கும் மோட்சம் அளித்த தீர்த்தகரை என்பதால் தீர்த்த ஷேத்திரம் எனவும் பஞ்ச மஹா ஷேத்திரம் என்றும் கூறுவர். நம்மாழ்வார் குழந்தையாக இருந்த பொழுது தவழ்ந்த புளியமரத்தில் இன்றுமே குழந்தையின் உருவம் காணப்படுகிறது.
நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை எழுத நினைத்த நாதமுனிகள், மதுரகவி வம்சத்தினரிடம் கண்ணி நுண் சிறுத்தாம்பு பெற்று அதை பலாயிரம் முறை ஜெபிக்க நம்மாழ்வாரே நேரில் வந்து அருள நாதமுனி அவற்றை எழுதினார் என்று கூறப்படுகிறது.
இங்குள்ள ஆதிபிரான் சுயம்பு உருவம் கால்கள் பூமியுள் இருப்பதாக ஐதிகம். நம்மாழ்வார் மூல வடிவம் தாமிரபரணி நீரை காய்ச்சி அதில் மதுர கவி தன் சக்திகளை பிரையோகித்து உருவாக்கிய சிற்பம் கைப்படாத சிற்பம் என்று கூறப்படுகிறது.
மூலவர் - ஆதிநாதன் பொலிந்து நின்ற பிரான், நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுகமண்டலம்,
தாயார் - ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி. தாயர்களுக்கு தனித்தனி சன்னதி) தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், திருசங்கண்ணி துறை. விமானம் - கோவிந்த விமானம்.
பிரத்யட்சம் - பிரம்மா, மதுரகவி, நம்மாழ்வாருக்கு. ஆகமம்- பாஞ்சராத்ரம் – சம்பிரதாயம் தென்கலை.
நம்மாழ்வார் மங்களாஸாஸனம்
ஒன்றுந்தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று, நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றும் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றெத் தெய்வம் நாடுதிரே.
- பாடல் 3106
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : நவதிருப்பதி முழு விவரங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Navathirupati full details - Spiritual Notes in Tamil [ spirituality ]