கோவிலுக்கு செல்வதின் அவசியம்...

குறிப்புகள்

[ பொது தகவல்கள் ]

Necessity of going to temple... - Tips in Tamil

கோவிலுக்கு செல்வதின் அவசியம்... | Necessity of going to temple...

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் தானே. பின் ஏன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

கோவிலுக்கு செல்வதின் அவசியம்...


கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் தானே.

பின் ஏன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

வீட்டிலேயே கடவுள் படம் உள்ளதே வீட்டிலேயே கடவுளை வணங்கலாமே என்று பலர் நினைப்பதுண்டு. அவர்களுக்கான பதிவு தான் இது.

முன்னோர்கள் ஏன் கோவில் வழிபாட்டு முறை கொண்டு வந்தார்கள் என்று பார்போம்.

 

சூரிய ஒளி என்பது இந்த பூமி முழுவதும் இருக்கும் . ஆனால் அதே சூரிய ஒளி ஒரு லென்ஸ்ன் கீழ் குவியும்போது போது அபிரிமிதமான ஆற்றலை கொடுக்கும்.

 

பசுவுக்கு உடல் முழுவதும் ரத்தம் இருந்தாலும் தான் கன்றுக்கு கொடுக்க மடியில் மட்டுமே பால் சுரக்கும்.

 

அதே போல் இறைநிலை எல்லா இடங்களிலும் இருந்தாலும் கோவில்களில் அதிகபடியான ஆற்றல் குவியும் வண்ணம் சிலையை செப்பு தகடு மற்றும் பல சடங்குகளை செய்து அங்கே பிரதிஷ்டை செய்து உள்ளார்கள்.

 

அங்கே சென்று வழிபடுவதால் இறை ஆற்றலும் கிடைக்கும் .மேலும் சம்பர்தாயம் என்னும் பெயரில் பல அறிவியல் பூர்வமான சடங்கு முறைகளை அங்கே வைத்து நாம் உடலில் உள்ள நோய்களை போக்குவதற்கும் ,மனம் ஒருநிலை படுவதற்கும் பல சடங்கு முறைகளை ஏற்படுத்தி உள்ளனர்.நாம் உடலில் உள்ள நோய்களை போக்குவதற்கு பல சம்பரதாய முறைகள் உள்ளன.

 

முதலில் நாம் கோவிலுக்கு உள்ளே செல்லும் போது செருப்பை கழற்றி விட்டு செல்லுவோம் ,அது எதற்கு என்றால் நாம் காலின் கீழ் பாதத்தில் நோயை குணபடுத்தும் பல வர்ம புள்ளிகள் உள்ளன. அக்குபஞ்சர் மருத்துவரிடம் கேட்டு பாருங்கள் சொல்லுவார்கள்.

 

உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் நிவாரணம் கொடுக்கும் எல்லா புள்ளிகளும் அங்கே உள்ளன. அக்கால நாம் கோவில்களை சுற்றி கருங்கற்களை பதித்து வைத்து இருப்பார்கள். வெறும் காலுடன் கோவிலை சுத்தும் போது நாம் கால்களில் உள்ள வர்மபுள்ளிகளை அழுத்துவதன் மூலம் உடலில் உள்ள பல நோய்கள் நமக்கே தெரியாமல் குணமாகும்.

 

மேலும் தோப்பு கரணம் போடும் போது நம் காதுகளை இழுத்து உக்காந்து எந்திரிக்கும் போது நாம் மூளை பகுதி சுருசுறுப்பாகும். அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவோம். உடம்பில் உள்ள எல்லா நரம்புகளையும் இழுத்து சோம்பல் இல்லாமல் இருக்கும்.

 

 மேலும் குழந்தை இல்லாதவர்கள் விடியற்காலை அரசமரத்தை சுத்தும் போது அரசமரத்தின் விதையை மிதித்தும் மரத்தின் காற்றை சுவாசிக்கும் போதும் கற்பப்பை வலு பெற்று குழந்தை பாக்கியம் கொடுக்கும்.

 

துளசி இலை போட்ட திர்த்ததை குடிக்கும் போது வயிறு சம்பந்த பிரச்னைகள் சரியாகும்.

 

இதே போல் பல சடங்குகளை சொல்லி கொண்டே செல்லலாம். இறைவனை வழிபட மனதை ஒருநிலை படுத்த வேண்டும்.

 

மன ஒரு நிலை என்பது நாம் உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் என்னும் கண், காது, மூக்கு,வாய், தோல் இவை அனைத்தும் ஒரு நிலைபடுத்தி கடவுளை வழிபாடு செய்ய வேண்டும்.

 

மனதை ஒரு நிலைபடுத்த கோவிலில் ஒரு சடங்கு செய்வார்கள். அதாவது திரையை விலக்கி கடவுளை காண்பிக்கும்போது நாம் கண்ணின் கவனம் சிதறாமல் இறைவனை காண வேண்டி தீபாராதனை காட்டுவார்கள்,

 

காதின் கவனம் சிதறாமல் இருக்க மணி அடிப்பார்கள்,

 

மூக்கின் கவனம் சிதறாமல் இருக்க ஊது பக்தி வாசனையும்,

 

வாய்க்கு பிரசாதமும், தோலுக்கு எல்லார் உடலிலும் படும்படி தீர்த்தம் தெளிப்பார்கள்.

 

இப்படி நாம் ஐம்புலன்களையும் ஒரே செயலில் மனதை ஒரு நிலை படுத்தி கவனம் சிதறாமல் இறைவனை வேண்ட வேண்டி அந்த சடங்கை செய்வார்கள்.

 

ஆனால், வீட்டில் கடவுளை கும்பிடும் போது ஐம்புலன்களில் எதாவது ஒன்று கவனம் சிதறி விடும் மனம் ஒரு நிலைபடாது.

 

நோய்கள் குணமாகவும், மனதை ஒருநிலை படுத்தி இறைவனை வழிபடவும் தான் முன்னோர்கள் கோவில் வழிபாட்டை வலியுறுத்தி வந்தனர்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் நமது  ஆன்மீக பயணம் தொடரும்!

இறைபணியில்

அன்புடன்....

🌷தமிழர் நலம்🌷

💥நன்றி!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்...

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

 

பொது தகவல்கள் : கோவிலுக்கு செல்வதின் அவசியம்... - குறிப்புகள் [ தகவல்கள் ] | General Information : Necessity of going to temple... - Tips in Tamil [ Information ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்