சென்னை கோயம்பேடு அருகில் அமைந்துள்ள நெற் குன்றத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் ஆலயம்.
நெற்குன்றம் - கரிவரதராஜ பெருமாள் ஆலயம்!
சென்னை கோயம்பேடு அருகில் அமைந்துள்ள
நெற் குன்றத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் ஆலயம். இவ்வாலயம் சுமார்
நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது!.
சன்னிதி நுழைவு வாயிலில் துவார பாலகர்கள்
மற்றும் கருடாழ்வாரை வணங்கி விட்டு சன்னிதிக்குள் நுழைந்தால் மூல ஸ்தானத்தில் ஐந்தரை
அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் திருக்காட்சி தருகின்றார்!. அந்த அழகுத்
திருமேனியைக் காணக் கண் கோடி வேண்டும்!!.
நேத்திர தரிசனம் அருளும் இந்தப் பெருமாளின்
திருவடிகள் அருகே பக்தர்கள் பயபக்தியோடு அமர்ந்து, கரிவரதராஜப் பெருமாளையே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கோயில் அர்ச்சகர் கருவறையின் மின்சார விளக்குகளை முழுமையாய் நிறுத்தி விட்டு, நெய்விளக்கு ஆரத்தியை பெருமாளின் முகம்
அருகே காட்டும்போது, அங்கே
ஓர் அற்புதம் நிகழ்கிறது.
பெருமாளின் கண்கள் இரண்டும் திறந்து
கண்ணின் மணிகள் உருள ஆரம்பிக்கின்றன. அதைப் பார்த்துப் பக்தர்கள் மெய்சிலிர்த்துப்
போகிறார்கள். ஆனந்தக் கண்ணீர் விட்டு உருகுகிறார்கள்.
சாதாரணமாக இந்தப் பெருமாளின் முன் நின்று
பார்க்கும்போது பெருமாளின் கண்கள் மூடியிருப்பது போல் தோன்றுகிறது. இருளில் நெய் விளக்கு
ஆரத்தி காட்டும்போது மட்டும் கண் இமைகள் மெல்லத் திறந்து விழிகள் இரண்டிலும்
ஆரத்தியின் ஒளிபட்டு பிரதிபலித்து, அந்தக் கணமே பெருமாளின் முகமே சிரிப்பது போல் தோன்றுகிறது. இது, வேறு எந்தக் கோவிலிலும் காண முடியாத
அதிசயம்.
இக்கோவிலில் அனைத்து ஏகாதசி மற்றும்
அஸ்த நட்சத்திரத்தில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
கையில் வெண்ணெயுடன் காட்சி தரும் இங்குள்ள சந்தான போபால கிருஷ்ணனை வழிப்பட்டால் குழந்தை
பாக்கியம் தாமதமாகும் தம்பதியர் அந்த பாக்கியம் பெறலாம் என்கிறார்கள்.
இக்கோவில் மூலவர் கரிவரதராஜப் பெருமாளுக்கு, அவர் பெயரில் கடிதம் அனுப்பும் பக்தர்களும்
இருக்கிறார்கள். அவர்கள் தங்களது கடிதத்தில், வேண்டுதல் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கிறார்கள். அவர்கள் எழுதும்
கடிதங்கள் கோவில் முகவரிக்குச் சரியாக வந்து விடுகிறது. இந்தக் கடிதங்களில் கூறப்பட்டுள்ள
கோரிக்கைகளை பெருமாளுக்குப் படித்துச் சொல்லி, அவரது பாதங்களில் வைக்கிறார்கள். இப்படிச் செய்வதாலும் நமது
கோரிக்கைகள் நிறைவேறும் என்கிறார்கள். சன்னிதிக்கு முன்புள்ள மண்டபத்தில் ஸ்ரீ வரதராஜ
ஆஞ்சநேயர் உள்ளார். திருமண தோஷம் நீக்கி, நல்ல விதமாய் திருமணம் நடத்தி வைப்பார் இவர் என்பது பக்தர்களின்
நன்னம்பிக்கையாய் இருந்து வருகிறது!!.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : நெற்குன்றம் - கரிவரதராஜ பெருமாள் ஆலயம்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Nelkundram - Karivaradharaja Perumal Temple! - Perumal in Tamil [ Perumal ]