மூளையுடன் தொடர்பு கொண்ட நரம்புகள்

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

Nerves connected to the Brain - Medicine Tips in Tamil

மூளையுடன் தொடர்பு கொண்ட நரம்புகள் | Nerves connected to the Brain

இனி நரம்புகள் மூளையுடன் தொடர்பு கொண்டு உடல் இயக்கத்துக்கு எவ்வாறு உதவுகின்றன என்று கவனிப்போம்.

மூளையுடன் தொடர்பு கொண்ட நரம்புகள்

இனி நரம்புகள் மூளையுடன் தொடர்பு கொண்டு உடல் இயக்கத்துக்கு எவ்வாறு உதவுகின்றன என்று கவனிப்போம். மூளையிலிருந்து பல இணை நரம்புகள் புறப்பட்டு பல உறுப்புகளின் இயக்கங்களுக்கு ஆதாரமாக உள்ளன. கண்ணின் பார்வை ஆற்றலுக்கு சில ஆதார இணை நரம்புகள் உள்ளன.

மூக்கின் மூலம் மணம் உணர சில நரம்புகள் உள்ளன.

செவிப்புலன் மூலம் கேட்கும் சக்தியை அளிக்கும் நரம்பு இணைகள் மூளையிலிருத்து செயற்படுகின்றன.

கண்ணின் அசைவுகளை இயக்கும் நரம்புகள் உதவுகின்றன. முகத்தின் பொதுவான அசைவுகளுக்கு சில நரம்புகள் உதவுகின்றன. நாக்கின் சுவையறிதல் நாக்கின் அசைவு களுக்கு மூளையிலிருந்து வரும் சில நரம்புகள் ஆதாரமாக உள்ளன. தோல் அசைவுக்கு ஆதாரமாகச் சில நரம்புகள் உள்ளன.

 

நரம்புகளின் நுண்ணிய செயலாற்றல்

நமது உடலின் உயிராதாரமான உறுப்புக்கள் குழப்ப மில்லாமல் தெளிவாக செயற்படுவதற்கு நரம்புகள்தான் அடிப்படை வகிக்கின்றன.

நமது மூளையில் உள்ள தன்னியக்க பகுதி நமது தன்னிச்சை -அனிச்சை செயல்களுக்கான நிலைக்களனாக உள்ளது. நாமாக விரும்பி சில செயல்களைச் செய் கிறோம் நமது உடலில் நம்மையறியாமலே சில செயல்கள் நடைபெறுகின்றன.

நமது இதயத் துடிப்பு, சுவாசித்தல், உணவு செரிமானம், கழிவுப் பொருட்கள் போன்ற செயல்கள் நமது விருப்பத்தை எதிர் பார்க்காத நிலையில் தானாகவே நடைபெறுகின்றன. அனிச்சையாக நடைபெறும் இந்தச் செயலானது இறைவனின் பொறுப்பில் நடைபெறுகிறது என்று கூறவேண்டும். இந்த அனிச்சைச் செயலின் காரணமாகத்தான் மனிதன் கவலையின்றி வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது. அதாவது உடலைப் பற்றி அக்கறை நாம் நமது செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் நமது உயிருக்கு ஆதாரமான மேற்கண்ட செயல்கள் தானாகவே நிகழ்கின்றன..

நமது உடலை - உணர்வுகளை நரம்புகள் மூலம் இயக்கிச் செயற்படுத்தும் மூளை மிகவும் நுணுக்கம் வாய்ந்ததாகத் திகழ்கின்றது. பெரு மூளையின் மேற்பரப்பானது 1,800 சதுர சென்டி மீட்டராக உள்ளது. சிறு மூளையின் மேற்பரப்பு அளவு 1,00,300 சதுர மில்லி மீட்டராக உள்ளது. பெரு மூளையில் மட்டும் 15,00,000,000,000,000 நரம்பணுக்கள் உள்ளன. சிறு மூளையில் ஒரு கோடிக்கு மேற்பட்ட நரம்பணுக்கள் உண்டு. மூளைத்தண்டில் இரண்டு கோடி நரம்பணுக்கள் உள்ளன. தண்டுவடத்திலும் இரண்டு கோடி நரம்பணுக்கள் அமைந்துள்ளன. நரம்பு மண்டலம் இவ்வளவு நுணுக்கமான அமைப்பு கொண்டதாக விளங்குகிறது.

இந்த அமைப்பில் சிறு குழப்பம் ஏற்பட்டாலும் நரம்பு தொடர்புடைய பல பிணிகள் மிகவும் எளிதாக தோன்றிவிட நேரிடும். இனி நரம்புக் கோளாறுகள் ஏற்படாமல் தடுப்பது எவ்விதம் என்பது குறித்து ஆராய்வோம்.

 

நரம்புக் கோளாறுகள் உடலியல் காரணங்கள்

நரம்பு தொடர்புடைய பிணிகள் தோன்றுவதற்கு உடலியல் ரீதியிலான முக்கிய காரணம் போதுமான சத்துணவு உண்ணாத நிலைதான். பொதுவாகவே நமது நாட்டில் தோன்றுகின்ற நோய்கள் அனைத்திற்குமே உணவுச் சத்துக் குறைவே காரணமாக உள்ளன.

பசி நேரத்தில் எதையாவது சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்கிறோம் என்பதற்கு மேலாக உணவு பற்றி நாம் அதிகமாக சிந்தனை செய்வதில்லை. திட்டமிட்டு சத்து நிறைந்த உணவு வகைகளை உண்ணுவதை வழக்கமாக வைத்துக் கொண்டால் உடலில் எந்த விதமான நோயும் அணுகாது. நரம்புத் தளர்ச்சிக்கும் இது பொருந்தும்.

நரம்புத் தளர்ச்சி ஏற்படாமல் தவிர்க்க அல்லது நரம்புகளுக்கு வலிமையூட்ட தனியாக சத்துணவு உண்ண வேண்டும் என்பதில்லை. பொதுவான சத்துணவைத் தொடர்ந்து உண்டு வந்தாலே நரம்புகள் பலமடையும். நரம்புத் தளர்ச்சி ஏற்படாது. சத்துணவு என்று சொல்லும் போது அதற் காக அதிகமாக பணச் செலவு செய்ய வேண்டி. வரும் என்று சிலர் அச்சப்படுவதுண்டு. இந்த எண்ணம் அறியாமை காரணமாக எழுவது தான். உணவுப் பொருட்களைப் பற்றி சரியான தகவல்களை நாம் தெரிந்துக்கொண்டால் மிகவும் குறைந்த செலவிலேயே நல்ல சத்துணவை நம்மால் பெறமுடியும்.

உதாரணமாக எந்தக் காலத்திலும் மிகவும் மலிவாக கிடைக்கும் கீரை வகைகள் அருமையான சத்துகளைக் கொண்ட உணவுப் பொருளாகும். ஆகவே நரம்புக் குறைபாடுகள் அகற்றும் உணவுச் சத்துக்களைப் பற்றி இப்போது தெரிந்துக்கொள்வோம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

மருத்துவ குறிப்புகள் : மூளையுடன் தொடர்பு கொண்ட நரம்புகள் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Nerves connected to the Brain - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்