மனிதனுடைய ஆரோக்கியத்துக்கு உறக்கம் மிகவும் அவசியமான ஒன்று ஆகும்.
உறக்கக் கேடும் நரம்பு நோய்களும்
மனிதனுடைய ஆரோக்கியத்துக்கு உறக்கம் மிகவும் அவசியமான ஒன்று
ஆகும். அன்றாடம் பணிபுரியும் போது இழக்கும் ஆற்றல் நமது உறக்கத்தின் போதுதான் ஈடுசெய்யப்படுகிறது.
நாம் இழந்த சக்தியைத் திரும்பப் பெறுவதற்கு தூக்கம் மட்டுமே
உதவுகிறது என்பதல்ல, இழந்த சக்தி மீளுவதற்கு சரியான தளம் அமைப்பது உறக்கந்தான் என்பதை
மறுக்க முடியாது.
உறக்கம் அன்றாடம் தேவையான அளவு இருந்தாக வேண்டும். உறக்கம் குறைந்தால்
அது பலவிதமான நரம்பியல் கோளாறுகளைத் தோற்று வித்துவிடும். தொடர்ந்து சில காலம் ஒருவன்
உறக்கத்தை அடியோடு இழந்து விட்டால் அவனுக்கு நிச்சயமாகப் பைத்தியம் பிடித்து விடும்.
கடினமாக உழைக்கும் உடல் உறுப்புக்களுக்கு ஓய்வு அளித்து அவை ஊக்கமும், புத்துணர்ச்சியும் பெறுவதற்கு உதவுவது உறக்கமே. உறக்கம் மனித ஆயுளை நீடிக்கச் செய்கிறது. சீரான உறக்கம்
இல்லாத ஒருவனுடைய ஆயுள் நிச்சயமாகக் குறையத் தான் செய்யும். கடுமையான இரைச்சல் தூக்கத்தின்
விரோதி யாகும்.
பேரோசை மிகுந்த ஓரிடத்தில் நாள் முழு வதும் பணி புரியும் ஒருவன்
இரவில் தூக்கமில்லாமல் அவதியுறுவான். இரவு நேரத்தில் நமது உடலின் பெரும் பாலான உறுப்புகள்
ஓய்வு பெறுகின்றன. முக்கியமாக நரம்பு மண்டலந்தான் இரவில் நல்ல ஓய்வு பெறுகின்றன.
நரம்பு மண்டலம் இரவிலே ஓய்வு பெறத் தவறினால் உணர்ச்சிகள் தொடர்பான
பல குறைபாடு குழப்பங்கள் ஏற்படும். நரம்பு மண்டலங்களில் தலைமை நிலையம் என்று கருதப்படும்
முகுளம். இரவில்தான் முழுமையான ஓய்வினைப் பெறுகின்றது. தொடர்ந்து உறக்கம் கெட்டால்
மூளையின் செயற்பாட்டிலும் குழப்பம் ஏற்படும்.
நரம்புத் தளர்ச்சி போன்ற குறைபாடு ஏற்படாமல் தடுப்பதற்கு முன்
எச்சரிக்கை நடவடிக்கையாக சரியான உறக்கத்தைப் பராமரிக்க வேண்டும். இரவில் குறிப்பிட்ட
நேரத்தில் படுக்கைக்குச் சென்று அதிகாலையில் குறிப்பிட்ட நேரத்தில் துயிலெழும் வழக்கத்தைப்
பேண வேண்டும். நடுத்தர வயதுள்ள ஒருவன் குறைந்த பட்சமாக ஏழு மணி நேரமாவது இரவில் துயில்
கொள்ள வேண்டியது முக்கியம். வயது முதிர முதிர தூக்க நேரத்தின் அளவு ஓரளவுக்கு குறையலாம்
என்றாலும் உறங்கும் நேரத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஆழ்ந்து உறங்குவது முக்கியம்.
எக்காரணத்தை முன்னிட்டும் இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருக்கக் கூடாது.
இரவில் தூக்கம் பிடிக்கவில்லையென்றால் நரம்பு மண்டலத்தில் ஏதோ
கோளாறு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து நல்ல மருத்து வரை நாடி வேண்டும். தகுந்த சிகிச்சை
மேற்கொள்ள வேண்டும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
மருத்துவ குறிப்புகள் : உறக்கக் கேடும் நரம்பு நோய்களும் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Nervous diseases that disturb sleep - Medicine Tips in Tamil [ Medicine ]