இனி நரம்பு மண்டலமும் மூளையும் எவ்வாறு இணைந்து செயற்படுகின்றன என்ற விவரத்தைச் சற்று சுருக்கமாகக் காண்போம்.
நரம்பு மண்டலமும் மூளையும்
இனி நரம்பு மண்டலமும் மூளையும் எவ்வாறு இணைந்து செயற்படுகின்றன
என்ற விவரத்தைச் சற்று சுருக்கமாகக் காண்போம்.
நரம்பு மண்டலத்தின் தலைமை நிலையமாக மூளை தான் இயங்குகிறது. நரம்பு
மண்டலம் என்னதான் நுணுக்கமாகச் செயற்படுவதாக இருந்தாலும் மூளையின் தொடர்பு இல்லாவிட்டால்
நரம்பு மண்டலத்தின் செயற்பாடு சரியாக இல்லாததோடு விபரீதமாகவும் அமைந்து விடும்.
மூளையினுடைய அமைப்பானது பெருமூளை, மூளைத் தண்டு, சிறுமூளை என்ற
மூன்று அமைப்புக்களைக் கொண்டதாகத் திகழ்கின்றது.
எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்று ஒரு பழமொழி உண்டல்லவா? இந்தப் பழமொழியில்
'சிரசு' என்று குறிப்பிடப்படுவது மூளையைத் தான்.
'எண் சாண் உடம்பிற்கு மூளையே பிரதானம்' என்று சொல்வதற்குப்
பதில்தான் 'சிரசே' பிரதானம் என்று நம்முன்னோர்
கூறினர்.
நமது உடல் உணர்வு தொடர்புடைய பல சிக்கலான பணிகளை மூளை செய்தாலும், நமது உடலில்
அதன் அளவு மிகவும் சிறியதாகத்தான் உள்ளது. உருவத்தில் சிறியதாக இருந்தாலும் ஏராள பொறுப்புக்களை
மூளை நிறைவேற்ற மூளையில் ஏராளமான மான வேண்டியிருப்பதால் வளைவுகளும் மடிப்புக்களும்
காணப்படுகின்றன.
பெருமூளை என்ற பகுதியானது இரண்டு அரைக் கோளங்களாக பிரிந்திருக்கிறது.
இந்த கோளங்கள் ஒவ்வொன்றும் நான்கு பகுதிகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு பாதியிலும் முன்
- பின் என இரண்டு பகுதிகள் உள்ளன.
மூளையின் இடது அரைக் கோளப் பகுதியானது உடலின் வலது பாகத்தையும், வலது அரைக்
கோளப்பகுதி உடலில் இடது பாகத்தையும் இயக்குகின்றன. இந்தத் தகவலை முன்னரே கூறியுள்ளோம்.
பொதுவாக மனிதனுடைய பேச்சாற்றலுக்கு மூளையின் இடது அரைக் கோளம்
பொறுப்பு வகிக்கின்றது. இந்த அரைக்கோளத்தின் மூளைபகுதி உடலின் அசைவுகள் - பகுத்தறியும்
செயல்முறை ஆகிய பணிகளுக்கு ஆதரவாக உள்ளன.
ஸ்பரிச உணர்வுக்கு இடது அரைக் கோளத்தின் மத்திய மேற்குபகுதி
ஆதாரமாக உள்ளது. இதே அரைக்கோளத்தின் மத்திய கீழ்ப்பகுதி மணமறிதல், ருசி உணர்தல், செவிமடலின்
செயற்பாடு, சமநினைவு பொதுவாக நினைவாற்றலுக்கு ஆதாரமாக உள்ளன. பார்வை ஆற்றலுக்கு
பின்பகுதி அடிப்படை வகிக்கிறது.
மூளையை நாம் கண்களால் காண முடியுமானால் அதன் வெளிப்புறம் சாம்பல்
வண்ணமாகக் காட்சியளிப்பது தெரியும். மூளையின் நடுப்பரப்பு வெண்மை நிறமாக இருக்கும்.
உட்புறமோ பள்ளமாக அமைந்திருக்கும்.
நரம்பு அணுக்கள் மூளையின் சாம்பல் நிறப்பகுதியில் பொருந்தியிருக்கின்றன.
நரம்பு நார்கள் வெண்மையான பகுதியில் அமைந்திருக்கின்றன.
சில பழுப்பு நிறக் கருவணுக்கள் ஆங்காங்கே வெண்மைப் பகுதியில்
காட்சி தருகின்றன. பள்ளமாக உள்ள பகுதியின் பக்க நீர் அறையில் நரம்பு மண்டல நீர் உற்பத்தியாகிறது.
மூளையின் மூளையும் இரண்டாவது பிரிவான சிறு இரண்டு அரைக் கோளங்களைக் கொண்டதாக உள்ளது.
இதிலும் பெரு மூளையைப் போன்றே நரம்பணுக்கள், கருவணுக்கள், நரம்பு நார்கள்
ஆகியவற்றைக் கொண்டனவாக உள்ளன.
மனிதனின் நினைவாற்றலுக்கு முக்கியமாக பொறுப்பேற்கிறது, சிறு மூளை.
உடலின் உறுதி, உடலின் சமநிலை ஆகியவற்றிற்கான அடிப்படையையும் வகிக்கின்றது.
வாசனைப் பொருட்கள் போதையைத் தரும் பொருட்கள் நமது உடலுக்குள்
புகும்போது பாதிப் புக்கு உள்ளாவது சிறுமூளைதான். போதைப் பொருட்கள் அளவுக்கு அதிகமாக
உடலுக்குள் புகும்போது சில சமயம் மனிதன் மயக்கத்துக்கு இலக்காகிறான் அல்லவா? சிறு மூளை
தீவிரமாகப் பாதிக்கப்படுவதன் விளைவு தான் இது. மூளைத்தண்டு என்பது பெருமூளை, சிறு மூளை, தண்டுவடம்
ஆகியவற்றை இணைக்கும் சாதனமாகத் திகழ்கின்றது.
நரம்புகள் பலவற்றின் தொடக்கப்பகுதி மூளைத்தண்டு தான். இடைமூளையென்று
மூளைத்தண்டின் முன் பகுதி அழைக்கப்படுகின்றது. நினைவு மையம், உணர்ச்சி மையம், உயர் நிலைச் செயல்களின் மையம், ஆகியவை இந்த
இடை மூளைப் பகுதியில் உள்ளன. நாளமில்லாச் சுரப்பியின் தலைமை இடம் எனக் கருதப்படும்
பிட்யூட்டரல் சுரப்பியும் இந்த இடை மூளையுடன்தான் இணைந்துள்ளன. ஒரு மூளையை அடுத்துள்ள
பகுதியைமூளைப் பாலம் எனக் கூறுவர். முகுளம் என்ற. பகுதி கடைசியில் அமைந்திருக்கிறது
மூளைப்பாலம் என்பது சிறுமூளையையும் பெருமூளையையும் இணைக்கும்
சாதனமாகத் திகழ்கின்றது. இதனால்தான் இதற்கு மூளைப் பாலம் என்ற பெயர் அமைந்தது.
நாக்கு - தொண்டை தொடர்பான செயல் நரம்புகள் நாவசைப்புக்கு ஆதாரமான
நரம்புகள் ஆகியவற்றின் கருவணுக்கள், நெஞ்சுத்துடிப்பு, இரத்தவோட்டம், சுவாசம், விழுங்குதல்
போன்ற உயிராதார இயக்கங்களுக்கு அடிப்படையான அம்சங்கள் முகுளத்தில் அமைந்துள்ளன. முகுளத்தில்
தொடர்ச்சியாக முதுகெலும்பின் ஊடே தண்டுவடம் செல்லுகிறது. இது உடல் உறுப்புக்களுக்கும்
மூளைக்கு மிடையே தொடர் வழியாக அமைந்துள்ளது.
தடங்கள் உள்ள வெண்மைப் பகுதியும், மையப் பகுதியும்
பக்கத்தில் நரம்பணுக்கள் நிறைந்த சாம்பல் நிறப் பகுதியும் இவற்றுக்கு இடையே நீரோட்ட
நரம்பும் அமைந்துள்ளன. தண்டு வடத்தின் வலப்புறமாகவே உடலின் வலப்புற உணர்வு செல்லுகின்றது.
ஸ்பரிச உணர்ச்சி, வலி, வெப்பம், குளிர் உணர்ச்சி
போன்ற உணர்வுத் தடங்கள் அனேக மாக வெண்மைப் பகுதியின் வெளிப்பிரிவில் முக் கியமாக அமைந்துள்ளன.
இவை ஓரளவு முன் பிரிவிலும் அமைந்துள்ளன.
உடலின் இடப்புற உணர்வு தொடர்பான நரம்புச் சாதனங்கள் தண்டுவடத்தின்
இடப்புறமே செல்லுகின்றன. மூன்று விதமான சவ்வுகள் தண்டுவடத்தை போர்வைகள் போன்று சூழ்ந்து
உள்ளன. தண்டுவடத்தின் வெளிப்புறம் அமைந்திருப்பது கடின சவ்வு எனப்படும். நடுப்பகுதியில்
மெல்லிய சவ்வு அமைந்திருக் கின்றது. உட்புறமாக மிக மெல்லிய சவ்வு அமைந்திருக்கின்றது.
மெல்லிய மிகமெல்லிய சவ்வுகளுக்கு இடையேதான் நரம்பு மண்டல நீர்
செல்கின்றது. உணவுச் சத்துக்களை நரம்பு மண்டலத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் இந்த நீர்தான்
எடுத்துச் செல்லுகின்றது. செல்லுமிடங்களில் உள்ள கழிவுகளையும் இந்த நீர்தான் அகற்றுகின்றது.
மூளையின் பல்வேறு பகுதிகளில் அமைந் துள்ள அறைகளில் இந்த நீர் சுரக்கின்றது. இந்த நீர்
மண்டை ஓட்டினுள் இருக்கும் மேல் மத்திய பெருஞ்சிரைக்குள் உறிஞ்சப்பட்டு இரத்த ஓட்டத்தில்
கலக்கிறது. இந்த நீர் அளவுக்கு அதிகமாகச் சுரந்தாலோ, தேவைக்கும்
குறைவாகச் சுரந்தாலோ பலவித மான நரம்புப் பிணிகள் ஏற்படக்கூடும்.
நரம்பு மண்டலத்தில் இரத்த ஓட்டம் சரியான அளவில் இல்லாவிட்டால்
பலவிதமான பக்க வாத நோய்கள் தோன்றும். இருபுஜங்களிலும் தமனிகள் மூலம் இரத்தம் மூளைக்குச்
செல்லுகின்றது.
இந்தத் தமனிகள் நான்கு. இந்த நான்கு இரத்தக் குழாய்களும் தனித்
தனியாகப் பிரிந்து செயற்பட்டாலும் ஏதாவது ஒரு நோய் காரணமாக ஒரு இரத்தக் குழாய் பாதிக்கப்பட்டாலும்
மற்ற மூன்று குழாய்களும் தீவிரமாக இயங்கி இரத்த ஓட்டத்தில் குழப்பம் ஏற்படாமல் பார்த்துக்
கொள்கின்றன.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
மருத்துவ குறிப்புகள் : நரம்பு மண்டலமும் மூளையும் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Nervous system and Brain - Medicine Tips in Tamil [ Medicine ]