புஷன் முத்திரை செய்தால் நரம்பு மண்டலம் நன்கு செயல்படும்...

செய்முறை

[ யோக முத்திரைகள் ]

Nervous system works well if pushan seal is applied... - recipe in Tamil

புஷன் முத்திரை செய்தால் நரம்பு மண்டலம் நன்கு செயல்படும்... | Nervous system works well if pushan seal is applied...

சூரியனுக்கு அர்ப்பணிக்கும் ஒரு முத்திரையாக இந்த முத்திரை உள்ளது. ஊட்டச்சத்தை அளிக்கும் தெய்வத்துக்கு அர்ப்பணிக்கும் விதமாகவும் இந்த முத்திரை அமைந்துள்ளது.

புஷன் முத்திரை செய்தால் நரம்பு மண்டலம் நன்கு செயல்படும்...

சூரியனுக்கு அர்ப்பணிக்கும் ஒரு முத்திரையாக இந்த முத்திரை உள்ளது. ஊட்டச்சத்தை அளிக்கும் தெய்வத்துக்கு அர்ப்பணிக்கும் விதமாகவும் இந்த முத்திரை அமைந்துள்ளது. மேலும், ஜீரண சக்தியை அளிக்கவும், கழிவுகளை வெளியேற்றவும் உதவுவதுடன், நரம்பு மண்டலத்தைத் தூண்டி நன்கு செயல்படவும் வைக்கிறது.

இது சுவாசத்தைச் சீராக்கி, அதன்மூலம் சாப்பிடும் உணவைச் செரிக்கச் செய்து, பிராண வாயுவை எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளியேறச் செய்கிறது. இதன்மூலம், நுரையிரல் சீராக இயங்கும். மேலும், மேல் வயிற்றுப் பகுதி, கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை ஆகியவை தடையின்றி முறையாகச் செயல்படவும் வைத்து, உடலில் இருந்து கெட்ட நீரை வெளியேற்றுகிறது.

வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லை, குமட்டல், அதனால் ஏற்படும் நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

செய்முறை

வலது கை

கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடு விரல் ஆகியவற்றின் நுனிப் பகுதிகள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். மோதிர விரலும் சுண்டு விரலும் நீட்டியபடி இருக்க வேண்டும்.

இடது கை

கட்டை விரல், நடு விரல், மோதிர விரல் ஆகியவற்றின் நுனிகள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஆள் காட்டி விரலும் சுண்டு விரலும் நீட்டியபடி இருக்க வேண்டும்.

நேர அளவு

தினமும் ஐந்து நிமிடங்கள் வீதம் நான்கு முறை செய்ய வேண்டும். நின்ற நிலையில் இதைச் செய்வது நல்லது. சுவாசம் ஒரே சீராக இருக்க வேண்டும்.

பலன்கள்

1. நரம்பு மண்டலம் நன்கு செயல்படும்.

2. படபடப்பு இல்லாமல் அமைதியாக இருக்க முடியும்.

3. ஆதாரச் சக்கரங்கள் தூண்டப்பட்டு, உயிர்த் துடிப்பு பரசமரிக்கப்படும்.

4. வேலைப் பளுவினால் ஏற்படும் கோபம், படபடப்பு ஆகியவை சரியாகும்.

5. ஜீரண உறுப்புகளுக்கு சக்தி கிடைத்து, விஷத்தன்மையுள்ள கழிவுப் பொருள்கள் வெளியேறும்.

6. சாப்பிட்ட பிறகு தீவிரமான குமட்டல், வாயுத் தொல்லை, அதனால் ஏற்படும் நோய்கள் குணமாகும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : புஷன் முத்திரை செய்தால் நரம்பு மண்டலம் நன்கு செயல்படும்... - செய்முறை [ ] | Yoga Mudras : Nervous system works well if pushan seal is applied... - recipe in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்