நரம்பு தொடர்பான பிணிகள் இரண்டு வகையில் தோன்றக் கூடும். உடலியல் கோளாறு காரணமாகத் தோன்றும் நரம்பு நோய்கள் ஒருவகை.
நரம்பியல் பிணிகளும் பொதுவான சிகிச்சையும் நரம்பு தொடர்பான பிணிகள் இரண்டு வகையில் தோன்றக் கூடும். உடலியல் கோளாறு காரணமாகத் தோன்றும் நரம்பு நோய்கள் ஒருவகை. மனவியல் கோளாறுகள் காரணமாகத் தோன்றும் நரம்பு நோய்கள் மற்றொரு வகை உடலியல் கோளாறு காரணமாகத் தோன்றும் நரம்புப் பிணிகளை தக்க மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் தான் குணப்படுத்திக் கொள்ள முடியும். என்றாலும் உடல் நிலையில் ஏற்படக்கூடிய எந்தவிதமான பாதிப்பு காரணமாக நரம்புத் தளர்ச்சி போன்ற பிணிகள் தோன்றுகின்றன, என்பதை நாமாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப சில பல நடவடிக்கைகளை மேற்கொண்டு நரம்பு நோய்களைத் தடுக்க முயற்சிக்கலாம். நோய் வந்து விட்டாலும் அது மேலும் அதிகப்படாதவாறு கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கலாம். நேரடியாக நரம்புப் பிணிகள் ஏற்படாமல் வேறு ஏதாவது ஒரு பிணிக்கு நாம் இலக்காகும் போது நமது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக நரம்பு நோய்கள் ஏற்படலாம். கடந்த சில பக்கங்களில் நமக்கு ஏற்படுகிற பிணிகள் எவ்வாறு நரம்புப் பிணிகள் தோன்றுவதற்குக் காரணமாக அமைகின்றன என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறோம். வாசக அன்பர்கள் கவனத்துடன் அந்தப் பகுதிகளைப் படித்துப் பயன் பெறுவார்களாக. தற்கால சூழ்நிலையில் நரம்பு தொடர்பான பிணிகள் மனவியல் குறைபாடுகள் காரணமாகத் தான் அதிக அளவில் தோன்றுகின்றன. இன்றைய வாழ்க்கை முறையானது மனத்திலே கிளர்ச்சியையும் அதிர்ச்சியையும் தோற்றுவிக்கும் வகையிலேயே இருப்பதால் மனவியல் மூலமாக நரம்புத் தளர்ச்சி நோய்கள் தோன்றுவதை தவிர்க்க முடியாது. என்றாலும் மன நிலையினை ஒரு கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் மனக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுத்து அதன் மூலம் நரம்பியல் பிணிகள் ஏற்படாமல் தற்காப்பு செய்துக்கொள்ளலாம். நமது வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்துக் கொள்வதன் மூலம் நரம்பு தொடர்பான பிணிகள் தோன்றாமலே தடுக்க முடியும். முற்காலத்தில் நம் முன்னோர் வாழ்க்கையை ஒழுங்கு முறையுடன் கூடிய நியதியின் அடிப்படை யில் நடத்தினர். அன்று அவர்கள் நடத்திய வாழ்க்கை ஆன்மிகக் கண்ணோட்டத்தில் வழி வழி வந்த வழக்கமாக பழக்கமாக இருந்தது. சூரியன் உதிக்குமுன்னரே படுக்கையினின்று எழுவது, காலைக் கடன்களை முடித்து நீராடி சூரிய உதயத்தின் போது சூரியனை வணங்கி வழிபடுவது என்று தொடங்கும் வாழ்க்கை, அதற்குப் பிறகு அன்று இரவு உறங்கச் செல்லும் வரை ஒரு நியம நியதியுடன் திட்டமிட்டபடி நடந்து வந்தது. அந்தக் கால வாழ்க்கையில் பரபரப்புக்கு இடமில்லை. அவசர அவசரமாக அரைகுறையாக அன்றாட அலுவல்களைக் கவனிக்க வேண்டிய நிர்பந்தம் அந்தக் காலத்தில் இல்லை. உண்ணுவதிலிருந்து உறங்குவது வரை மிகவும் நிதானமாக அவசர ஆவேசம் இல்லாமல் ஒழுங்கு முறையுடன் முன்னோர் செயற்பட்டனர். இந்தக் காரணங்களால்தான் பழங்காலத்தில் நரம்பு தொடர்புடைய பிணிகள் அனேகமாக இல்லை என்ற ஒரு நிலை அமைந்திருந்தது. தற்கால வாழ்க்கை முறை குழப்பமும் சீர்கேடுகளும் நிரம்பியதாக உள்ளது. ஒரு வரைமுறைக்கு உட்பட்டு வாழ்க்கை நடத்துபவர்களை இப்போது விரல் விட்டு எண்ணி விடலாம். அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக அன்றைய பணிகளைக் கவனிப்பவர்கள் இப்போது மிகவும் குறைவு. காலை ஆறுமணி வாக்கில் படுக்கையைவிட்டு எழுந்திருப்பவர்கள்தான் தற்காலத்தில் அதிகமாக உள்ளனர். இவ்வாறு காலங்கடந்து எழுந்திருப்பதன் காரணமாக அலுவலகத்துக்கோ, மற்ற இடங்களுக்கோ குறித்த நேரத்தில் செல்வதற்கு அவர்களுக்கு அவகாசம் போதுமானதாக இல்லை. ஆகவே அவசரத்துடனும் பரபரப்புடனும் அவர்கள் செயற்பட வேண்டி உள்ளது. காலைக் கடன்களை முடிப்பதிலே அவசரம், குளிப்பதிலே அவசரம், காலைச் சிற்றுண்டி உட்கொள்வதிலே அவசரம், அலுவலகம் செல்ல பள்ளியில் படிக்க அவசர அவசரமாக ஓட வேண்டும். பஸ் குறித்த நேரத்தில் கிடைக்காததால் காலதாமதமாக அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறதே என்பதற்காக அலுவலகத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் செல்ல வேண்டியிருக்கிறது. அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னரே படுக்கையை விட்டு எழுந்திருந்தால் இவ்வளவு பரபரப்பு அவசரத்திற்கு இடமே இருக்காது. நிதானமாகவும் திருத்தமாகவும் வீட்டு வேலைகளை முன்னதாகவே முடித்து விட்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டு காலத்தோடு அலுவலகத்தைச் சென்றடைய முடியும். காலங்கடந்து படுக்கையை விட்டு எழுந்திருப்பதுதான் நாகரிகம் என்று கருதும் மக்களைக் கொண்ட இந்த சமுதாயத்தில் பரபரப்பாகவும், செயற்படுவதே ஒரு நாகரிகம் என்றாகி விட்டது. நரம்புத் தளர்ச்சி நோய் வராமல் முன்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமானால் நமது வாழ்க்கையை மிகவும் அமைதிகரமாக அமைத்துக் கொள்ள வேண்டும். ● அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து நீராடி முடிப்பதை ஒரு கட்டாய நடவடிக்கையாக மாற்றிக் கொள்ள வேண்டும். ● அதிகாலையில் எழுந்திருக்கும் போது நமது உடல் நலம் சிறப்படைகிறது என்பதுடன் நமது காலை நேர அலுவல்களைக் கவனிப்பதற்கு நல்ல அவகாசம் கிடைக்கிறது. இதனால் அன்றாடப் பணிகளை அவசரக் கோலத்தில் செய்து பரபரப்பாக அலுவலகத்தை நோக்கி ஓட வேண்டிய அவசியம் இருக்காது. ● உணவு நேரத்தை திட்டமிட்டு அமைக்க வேண்டும். இன்றுள்ள காலச் சூழ்நிலையில் திட்டமிட்ட நேரப்படி உணவு கொள்ள முடிவ தில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் உணவு கொள்வதுதான் தற்போது வழக்கத்தில் உள்ளது. காலா காலத்தில் உணவு கொள்ளாத காரணத்தால் ஜீரண உறுப்புக்களில் பலவிதமான சீர் கேடுகள் ஏற்பட்டு அதன் விளைவாக ஏற்படும் பிணிகள் தொடர்பாக நரம்பு மண்டலப் பாதிப்பு ஏற்பட வேண்டிய நிர்பந்தம் அமைந்து விடுகிறது. ● சற்று முன்னதாகவே அலுவலகத்திற்குச் செல்லும் பேருந்துகளைப் பிடிக்கப் புறப்பட்டு விட்டால் அதன் விளைவாக ஏற்படக்கூடிய மன உளைச்சல் குறைவதற்கு வழி ஏற்படும். ● காலத்தோடு செல்ல அலுவலகத்திற்குக் முடிவதால் அது காரணமாக ஏற்படக் கூடிய மனப் பதைபதைப்பு இல்லாமல் போய்விடுகிறது. ● உடல் நலத்தைக் கண்ணுங்கருத்துடன் கவனிப்பதன் மூலம் நரம்பியல் தொடர்பான பல பிணிகள் வராமல் தடுக்க முடியும். ● குறிப்பாக நமது உடலில் ஜீரணப்பணி குழப்பமில்லாமல் நடக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ● முக்கியமாக மலச்சிக்கல் இருக்கக் கூடாது. மலச்சிக்கல்தான் பிணிகள் தோன்றுவதற்கு மூல காரணமாக இருக்கிறது. காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழித்தல், தங்குதடையில்லாமல் அந்தந்த நேரத்தில் சிறுநீர் கழித்தல் போன்றவை மிகவும் சாமானியப்பணிகள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மேற்கண்ட செயல்களில் ஏற்படும் சீர்கேடுகள் தான் மிகவும் கடுமையான பல பிணிகளுக்கு வழி அமைத்துக் கொடுக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்ளவேண்டும். ● நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நமது மன உணர்ச்சியைப் பாதிக்கக்கூடிய பல நிகழ்ச்சிகளை நாம் சந்தித்தாக வேண்டியுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் காரணமாக நமது மன உணர்வுகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்த மட்டில் உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலே நாம் சொன்ன விஷயங்கள் நரம்பு நோய்கள் வராமல் தடுப்பதற்கான ஒரு முன்தடுப்பு சிகிச்சை என்றே கொள்ளலாம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்பின் தொடர வேண்டிய முக்கிய வேலைகள்
மருத்துவ குறிப்புகள் : நரம்பியல் பிணிகளும் பொதுவான சிகிச்சையும் - பின் தொடர வேண்டிய முக்கிய வேலைகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Neurological complications and General Treatment - Important Tasks to follow in Tamil [ Medicine ]