சற்குரு சாயிநாதா ஆரத்தி சுற்றுகிறோம் தீப ஆரத்தி சுற்றுகிறோம் பஞ்ச தத்துவ தீபங்களை ஆரத்தி சுற்றுகிறோம்
இரவு ஆரத்தி
இன்பம் சிறக்கும் இரவு ஆரத்தி
(1)
சற்குரு சாயிநாதா ஆரத்தி சுற்றுகிறோம் தீப
ஆரத்தி சுற்றுகிறோம் பஞ்ச தத்துவ தீபங்களை ஆரத்தி சுற்றுகிறோம்
உயிர்கள் அனைத்திலும் நிறைந்தவரே தனித்தும்
வாழ்கின்றீர் உலகிலும் நிறைந்துள்ளீரே உமக்கு தீப ஆரத்தி சுற்றுகிறோம் சற்குரு
சாயிநாதா ஆரத்தி சுற்றுகிறோம் தீப ஆரத்தி சுற்றுகிறோம் பஞ்ச தத்துவ தீபங்களை
ஆரத்தி சுற்றுகிறோம்
ராஜஸ தாமஸ சத்துவ குணங்கள் மாயையால் உருவானது
பின் அந்த மாயையிலிருந்து எம்மை நீக்கி குருவரா நீர் காக்கின்றீர் சற்குரு
சாயிநாதா ஆரத்தி சுற்றுகிறோம் தீப ஆரத்தி சுற்றுகிறோம் பஞ்ச தத்துவ தீபங்களை
ஆரத்தி சுற்றுகிறோம்
ஏழு கடல் தனையும் உமது விளையாட்டுத் தலமாக்கி
உம் திருவிளையாடலை அதற்கு மேலும் விரிவுபடுத்திய வித்தகரே சற்குரு சாயிநாதா ஆரத்தி
சுற்றுகிறோம் தீப ஆரத்தி சுற்றுகிறோம் பஞ்ச தத்துவ தீபங்களை ஆரத்தி சுற்றுகிறோம்
கண்களுக்குக் காட்சிப் பொருளாய் பெரிய உலகையே
ஆக்கியவர் கபடமில்லாத அருள் நோக்குடைய ஸ்வாமியாம் சற்குரு நாதர் என்று துக்காராம்
கூறுகிறார் தீப ஆரத்தி சுற்றுகிறோம் சற்குரு சாயிநாதா ஆரத்தி சுற்றுகிறோம் தீப
ஆரத்தி சுற்றுகிறோம் பஞ்ச தத்துவ தீபங்களை ஆரத்தி சுற்றுகிறோம்
(2)
ஆரத்தி ஞான ராஜா சக்தி கைவந்த ஒளியே
சாதுக்கள் கரம் குவித்து எப்போதும் உம்மைத் துதிக்க ஆரத்தி ஞான ராஜா
அனைவருடைய அஞ்ஞானத்தையும் போக்க
பாண்டுரங்கனாய் அவதரித்தீரே ஆரத்தி ஞான ராஜா
தங்கத் தட்டுக்களைக் கோபியர்கள் ஏந்த
நாரதரும் தும்புருவும் இன்னிசை பாட ஆரத்தி ஞான ராஜா
பிரம்மமாகிய ரூபம் தன்னை உணர்த்திய
ஜனார்த்தனா உமது பாதங்களை வணங்குவோம் ஆரத்தி ஞான ராஜா சக்தி கைவந்த ஒளியே
சாதுக்கள் கரம் குவித்து எப்போதும் உம்மைத் துதிக்க ஆரத்தி ஞான ராஜா
(3)
ஆரத்தி துகாராமா சுவாமி சத்குரு ரூபா
சச்சிதானந்த மூர்த்தி சுவாமி சத்குரு தேவா ஆரத்தி துகாராமா
சேது பந்தனம் செய்த ஸ்ரீராமரைப் போல
மோக்ஷத்தின் பாதையை துக்காரமிற்கு அருளிய ஆரத்தி துகாராமா
பிரம்மத்தின் ரூபமே சாயிபாபா எங்கும்
நிறைந்து ஒளிரும் சாயி ஜோதியே ஆரத்தி துகாராமா சுவாமி சத்குரு ரூபா சச்சிதானந்த
மூர்த்தி சுவாமி சத்குரு தேவா ஆரத்தி துகாராமா
(4)
சாயிநாதா உமதருளாலே உம் குழந்தைகள் எங்களைக்
காப்பற்றுவீரே சாயிநாதா உமதருளாலே உம் குழந்தைகள் எங்களைக் காப்பற்றுவீரே
இவ்வுலகம் முழுதும் பொய்யால் நிறைந்தது என்று
நீர் அறிவீரே இவ்வுலகம் முழுதும் பொய்யால் நிறைந்தது என்று நீர் அறிவீரே சாயிநாதா
உமதருளாலே உம் குழந்தைகள் எங்களைக் காப்பற்றுவீரே
ஞானமற்றவர் குருடர் எங்களுக்குத் தரிசனம்
தந்தருள்வீரே ஞானமற்றவர் குருடர் எங்களுக்குத் தரிசனம் தந்தருள்வீரே சாயிநாதா
உமதருளாலே உம் குழந்தைகள் எங்களைக் காப்பற்றுவீரே
நாவு சோர்ந்துவிட்டதினி என்ன செய்வேன் என்று
பணிகிறார் தாஸ்கணுமகராஜ் நாவு சோர்ந்துவிட்டதினி என்ன செய்வேன் என்று பணிகிறார்
தாஸ்கணுமகராஜ் சாயிநாதா உமதருளாலே உம் குழந்தைகள் எங்களைக் காப்பற்றுவீரே சாயிநாதா
உமதருளாலே உம் குழந்தைகள் எங்களைக் காப்பற்றுவீரே
(5)
ஜய ஜய சாயி நாதா, நித்திரை வேளை நேரமிது ஏற்றுக் கொள்வீர்
அன்போடு நாங்கள் செய்யும் ஆரத்தியை ஜய ஜய சாயி நாதா
குழந்தைகள் எம்மை மகிழ்விக்கும் தாயே இனிய
சொற்களால் மகிழ்விப்பீரே துன்பங்கள் நோய்களை நீர் ஏற்று உம் பக்தரை விரைந்து
காக்கின்றீர்
விரைந்தோடி வந்து எம்மைக் காக்கும் உம்மை
துயரங்களை ஏற்கச் செய்கின்றோம் மலர்மஞ்சத்தில் அமர்ந்து பூஜைதனை அருள்கூர்ந்து
ஏற்பீரே ஜய ஜய சாயி நாதா, நித்திரை வேளை நேரமிது ஏற்றுக் கொள்வீர்
அன்போடு நாங்கள் செய்யும் ஆரத்தியை ஜய ஜய சாயி நாதா
பஞ்சப் பிராணனே ஆரத்தி ஆகும் அடியவர் பக்தியே
நறுமணமாகும் சாயி உமது ஆசியே அது மஹாப் பிரசாதம் பக்தருக்கே
பிரசாதம் பெற்று வீட்டுக்குச் செல்வோம்
சென்றவர் மீண்டும் காலை வருவோம் மஞ்சத்தில் அமர்ந்து பூஜைதனை அருள்கூர்ந்து
ஏற்பீரே ஜய ஜய சாயி நாதா, நித்திரை வேளை நேரமிது ஏற்றுக் கொள்வீர்
அன்போடு நாங்கள் செய்யும் ஆரத்தியை ஜய ஜய சாயி நாதா ஜய ஜய சாயி நாதா ஜய ஜய சாயி
நாதா
(6)
சாயி நாதா பக்தி தூதா நித்திரை கொள்ளுங்கள் சாயி
நித்திரை கொள்ளுங்கள் இன்ப மயமான சுகம் தரும் நிலையில் நித்திரை கொள்ளுங்கள்.
நீர் படுக்கும் இடம்தனை வைராக்கியம் என்றும்
துடைப்பத்தால் தினம் பக்தியுடனே சுத்தம் செய்தோம் அதன்மீது அன்பு என்ற நீரைத்
தெளித்தோம் சாயி நாதா பக்தி தூதா நித்திரை கொள்ளுங்கள்.
ஒன்பதுவித பக்தி என்ற விரிப்பினை உமது
பாதமலர்களுக்கு அடியில் வைத்தோம் ஞானம் என்ற தீப ஜோதியை ஏற்றி வணங்குகிறோம். சாயி
நாதா பக்தி தூதா நித்திரை கொள்ளுங்கள்
இதயமதையே கட்டிலாய் ஆக்கி இறைவா உம்மை
அழைத்தோம் மனம் என்ற மலர் விரிப்பால் படுக்கை செய்தோம் சாயி நாதா பக்தி தூதா
நித்திரை கொள்ளுங்கள்.
இரண்டு மனத்தை ஒன்றாய் மாற்றி நாம் ஒன்றாய்
ஆனோம் துர்புத்தி திசையை நீக்கி உம்மை அடைந்தோமே சாயி நாதா பக்தி தூதா நித்திரை
கொள்ளுங்கள்.
ஆசைகள் ஏக்கங்கள் கற்பனைகள் நீங்கி பொறுமை
சாந்தி என்ற புண்ணியப் பெண்கள் பெருமை மிக்க உமக்கு சேவை தினமும் செய்கின்றார்.
சாயி நாதா பக்தி தூதா நித்திரை கொள்ளுங்கள்.
பற்று அற்ற தியானம் என்ற மிருதுவான சால்வையை
அணிவித்து நெஞ்சம் நிறைந்த சற்குரு சயனம் நன்றே கொள்கின்றார் சாயி நாதா பக்தி தூதா
நித்திரை கொள்ளுங்கள் சாயி நித்திரை கொள்ளுங்கள் இன்ப மயமான சுகம் தரும் நிலையில்
நித்திரை கொள்ளுங்கள்.
(7)
பிரசாதத்தை ஏற்று நீங்கள் தூங்கச் செல்வீரே
நீங்கள் தூங்கச் செல்வீரே
எங்கள் குற்றத்தைப் போக்கி பாபா துன்பத்தை
மன்னித்து எங்கள் துன்பத்தை மன்னித்து காத்தருள்வீரே பாபா -என்றும் காத்தருள்வீரே
பாபா பிரசாதத்தை ஏற்று நீங்கள் தூங்கச் செல்வீரே நீங்கள் தூங்கச் செல்வீரே
நாங்கள் ஒன்றில் ஒன்றாய் ஐக்கியமாக அருள்தர
வேண்டுகிறோம் பாபா அருள்தர வேண்டுகிறோம் உம் உணவைப் பிரசாதமாகப் பெற்று வீடு
திரும்புகிறோம் பிரசாதத்தை ஏற்று நீங்கள் தூங்கச் செல்வீரே நீங்கள் தூங்கச் செல்வீரே
(8)
சீரடித் தலத்தில் வசிக்கும் சாயிநாத சுவாமியே
எமது விருப்பங்களை மங்களகரமாக நிறைவேற்றி அருள வேண்டும்.
உம்மைத் துதிக்கும் பக்தர்களை உலகம் எங்கும்
வியாபித்து ரட்சிப்பீரே. விஷ ஜந்துக்களின் தீண்டுதலிலிருந்து காத்து ரட்சித்து
மங்களம் உண்டாக அருள வேண்டும்.
உம் வடிவாமகவே நினைத்து உம்மைத் துதி பாடும்
பக்தர்களுக்கு முக்தி உண்டாகும் வழியைக் காட்டி மங்களமுண்டாக அருளவேண்டும்.
உண்மைகளின் தத்துவங்களைப் போதிக்கும்
சாதுக்களுக்குத் தினம் தினம் மங்களம் உண்டாக அருள்புரிய வேண்டும்.
ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாத மகராஜ் கி ஜேய்
(9)
சாயி மகராஜின் சமஸ்தானம் சீரடி சமதர்மப்
பேருலகம் சீரடி சீரடி சாயி மகராஜின் சமஸ்தானம் சீரடி சமதர்மப் பேருலகம் சீரடி
சீரடி
வேம்பு இனித்ததும் சீரடி வேதம் தழைத்ததும்
சீரடி காந்தமாய் சாயி கவர்ந்த இடம் சீரடி கடவுளாய் காட்சி தந்த இடம் சீரடி சாயி
மகராஜின் சமஸ்தானம் சீரடி சமதர்மப் பேருலகம் சீரடி சீரடி
கீதையின் சாரமெல்லாம் சீரடி மேதைகள் போற்றும்
இடம் சீரடி அற்புதங்கள் நிகழ்ந்த இடம் சீரடி அதிசயங்கள் மலர்ந்த இடம் சீரடி சீரடி
சாயி மகராஜின் சமஸ்தானம் சீரடி சமதர்மப் பேருலகம் சீரடி சீரடி
தாயாகச் சாயி வாழ்ந்த இடம் சீரடி தக்கபடி
குழந்தைகளைக் காத்த இடம் சீரடி பொற்பதங்கள் போற்றும் இடம் சீரடி
பூவுலகின் சொர்க்கம் அது சீரடி பூவுலகின்
சொர்க்கம் அது சீரடி சீரடி சாயி மகராஜின் சமஸ்தானம் சீரடி சமதர்மப் பேருலகம் சீரடி
சீரடி
சாயி மகராஜின் சமஸ்தானம் சீரடி சமதர்மப்
பேருலகம் சீரடி சீரடி
(10)
சாயி நாதனின் ஆரத்தி சீரடி சாயி நாதனின்
ஆரத்தி சற்குரு பரணின் ஆரத்தி சாந்த சொரூபனின் ஆரத்தி சத்திய சீலனின் ஆரத்தி ஆனந்த
ரூபனின் ஆரத்தி அஞ்ஞானம் போக்கும் ஆரத்தி சாயி நாதனின் ஆரத்தி சீரடி சாயி நாதனின்
ஆரத்தி
காலைப் பொழுதும் ஆரத்தி உச்சிப் பொழுதும்
ஆரத்தி மாலைப் பொழுதும் ஆரத்தி இரவுப் பொழுதும் ஆரத்தி நான்கு வேளையும் ஆரத்தி
நன்றே நடக்கும் ஆரத்தி சாயி நாதனின் ஆரத்தி
சீரடி சாயி நாதனின் ஆரத்தி
நானிலம் வணங்கும் ஆரத்தி மங்கலம் பொங்கும்
ஆரத்தி மகிழ்ச்சி தந்திடும் ஆரத்தி மகிழ்ச்சி தந்திடும் ஆரத்தி சாயி நாதனின்
ஆரத்தி சீரடி சாயி நாதனின் ஆரத்தி
நினைத்ததை நடத்தும் ஆரத்தி நிர்மல ரூபனின்
ஆரத்தி நீல கண்டனின் ஆரத்தி நிம்மதி தந்திடும் ஆரத்தி சாயி நாதனின் ஆரத்தி சீரடி
சாயி நாதனின் ஆரத்தி
ஆயிரம் மலர்களால் அர்ச்சனைகள் அன்பர்களின்
ஜெய ஜெய முழக்கங்கள் கற்பூர ஜோதியில் காட்சி தந்திடும் பொற்பூவாம் பொன்மேனித்
தேவனின் சாயி நாதனின் ஆரத்தி சீரடி சாயி நாதனின் ஆரத்தி
பஞ்சையைப் போலக் காட்சி தந்து பக்தர்களின்
மனங்களில் குடி கொண்டு தற்பெருமை என்பதே இல்லாது தயாபரனாய் என்றும் வாழ்ந்து வரும்
சாயி நாதனின் ஆரத்தி சீரடி சாயி நாதனின் ஆரத்தி
முனிவர்கள் போற்றும் மாயவன்
மும்மூர்த்திகளுக்கும் தூயவன் ஏழ் உலகமும் வணங்க ஏற்றவன் இணையற்ற பாசத்தால் நமைக்
காக்கின்ற சாயி நாதனின் ஆரத்தி சீரடி சாயி நாதனின் ஆரத்தி சற்குரு பரணின் ஆரத்தி
சாந்த சொரூபனின் ஆரத்தி சத்திய சீலனின் ஆரத்தி ஆனந்த ரூபனின் ஆரத்தி அஞ்ஞானம் போக்கும்
ஆரத்தி சாயி நாதனின் ஆரத்தி சீரடி சாயி நாதனின் ஆரத்தி சாயி நாதனின் ஆரத்தி சீரடி
சாயி நாதனின் ஆரத்தி
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
Night aarti of pleasure : இரவு ஆரத்தி - இன்பம் சிறக்கும் இரவு ஆரத்தி [ ] | Spiritual References: Sai Baba : Night Aarti - Night aarti of pleasure in Tamil [ ]