மொகல்சராய் (காசி-வாராணஸி) லக்னௌ ரயில் மார்க்கத்தில் பைசாபாத் ஸ்டேஷனிலிருந்து வண்டியில் போக வேண்டும்.
வடநாட்டுத் திருப்பதிகள் - 11
65) திருவயோத்தி (அயோத்யா)
மொகல்சராய் (காசி-வாராணஸி) லக்னௌ ரயில் மார்க்கத்தில்
பைசாபாத் ஸ்டேஷனிலிருந்து வண்டியில் போக வேண்டும். அங்கிருந்து அயோத்தி சுமார் 5 கி.மீ. உள்ளது. இவ்வூரில் தங்குவதற்கு பல சத்திரங்களும்
சாப்பாட்டுக் கடைகளும் உள்ளன.
மூலவர் : ஸ்ரீராமன். சக்கரவர்த்தித் திருமகன்,
வீற்றிருந்த திருக்கோலம்
66) திருநைமிசாரண்யம்
கல்கத்தா - டேராடூன் ரயில் மார்க்கத்தில் பாலமாவ்
ஜங்ஷன்வந்து அங்கிருந்து சீதாப்பூர் போகும் கிளை ரயிலில் ஏறி வழியிலுள்ள
நைமிசாரண்யா ஸ்டேஷனில் இறங்கி 4 கி.மீ. தூரம் வண்டியில் அல்லது நடந்து சென்று இவ்வூரை
அடையலாம். தில்லி-லக்னோ ரயில் பாதையில் ஹர்தோய் என்ற ஸ்டேஷனில் இறங்கியும் இவ்வூரை
அடையலாம்.
மூலவர் : தேவராஜன் (ஸ்ரீஹரி), நின்ற திருக்கோலம்.
67) திருப்பிருதி (ஜோஷிமட் - நந்தப்ரயாக்)
ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள
ஜோஷிமட் என்ற இடந்தான் திருப்பிருதி என்பது பொதுவான அபிப்ராயம். ஹரித்வாரிலிருந்து
246 கி.மீ.
மூலவர் : பரமபுருஷன், புஜங்கசயனம்
68) திருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்ரயாகை)
ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் 70 கி.மீ. தூரத்திலும், ஹரித்வராரத்திலிருந்து பத்ரிக்குச் செல்லும் மார்க்கத்தில் 80 கி.மீ.லும் உள்ளது. பத்ரியிலிருந்து திரும்புகையில் இறங்கி
ஸேவித்துவிட்டு அடுத்த பஸ்ஸில் வரலாம். ரகுநாத்ஜீ மந்திர் என்றால் தெரியும்.
மூலவர் : நீலமேகப்பெருமாள். நின்ற திருக்கோலம்
69) திருவதரியாச்ரமம் (பத்ரிநாத்)
டெல்லியிலிருந்து எஸஹாரன்பூர், லக்ஸார் வழியாக அல்லது கல்கத்தா - டேராடூன் எக்ஸ்பிரஸில்
ஹரித்வார் ஸ்டேஷனுக்கு வந்து அங்கிருந்து ரிஷிகேசில் தங்கி,
அங்கிருந்து 300 கி.மீ. பஸ்ஸில் ஹிமாலய மலையில் பிரயாணம் செய்து,
பத்ரிநாத்தை அடைய வேண்டும். இங்கு ஏராளமான சத்திரங்களம் பல
வசதிகளும் உண்டு.
மூலவர் : பத்ரி நாராயணன், வீற்றிருந்த திருக்கோலம்
70) திருச்சாளக்ராமம் (ஸாளக்ராமம் முக்திநாத்)
இந்த திவ்ய தேசம் நேபாள நாட்டில் உள்ளது. இந்திய எல்லையைக்
கடப்பதற்கு ஸனோலி, ராக்ஸால்
என்ற இரண்டிடங்கள் தான் சிறப்பானவை. போகும் வழியில் எங்கும் தங்குமிடமோ. உணவு
வசதிகளோ கிடையாது. மலையேறுபவர்கள் சொந்த வசதிகளுடனே கூட்டமாகச் செல்லவேண்டும்.
போக்ராவிலிருந்து 1
மணி நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம் அடையலாம்.
மூலவர் : ஸ்ரீமூர்த்தி, முக்தி நாராயணன், நின்ற திருக்கோலம்
71) திரு வடமதுரை (மதுரா)
(ப்ருந்தாவனம், கோவர்த்தனம்
அடங்கியது)
டெல்லியிலிருந்து ஆக்ரா போகும் ரயில் பாதையில் மதுரை என்ற
ஜங்ஷனிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் ஊரும் கோயில்களும் உள்ளன. இங்கு தங்கும்
வசதிகள் இல்லாததால் 10
கி.மீ தூரத்திலுள்ள பிருந்தாவனம் என்ற ஊரில் தங்கிக் கொள்ளலாம்.
மூலவர் : கோவர்த்தநேசன், நின்ற திருக்கோலம்
72) திருவாய்ப்பாடி (கோகுலம், கோகுல்)
மதுரா ஜங்ஷனிலிருந்து வண்டி பிடித்துக்கொண்டு 41/2 கி.மீ தூரமுள்ள யமுனைப் பாலத்தைக் கடந்து அங்கிருந்து 7 1/2 கி.மீ. பஸ்ஸில் சென்று இவ்வூரை அடையலாம். வசதிகள்
ஒன்றுமில்லை.
மூலவர் : மனமோஹன கிருஷ்ணன், நின்ற திருக்கோலம்
73) திருத்வாரகை (துவரை, துவாரபதி)
பம்பாய், ஆமதாபாத், வீரம்காம், ராஜ்கோட், ஜாம்நகர் வழியாக ஓகா துறைமுகம் செல்லும் ரயில் பாதையில்
துறைமுகத்துக்கு சுமார் 32 கி.மீ. தூரத்தில் துவாரகா ரயில்வே ஸ்டேஷன் உள்ளது.
அங்கிருந்து 4 கி,மீ. வண்டியில் போய், கோயிலை அடையலாம். வசதிகள் எல்லாம் உண்டு.
ஆமதாபாத்திலிருந்தும் நேராக துவராகைக்கு பஸ்கள் செல்கின்றன.
மூலவர் : கல்யாண நாராயணன், நின்ற திருக்கோலம்
74) திருச்சிங்கவேள் குன்றம் (அஹோபிலம்)
சென்னை - பம்பாய் ரயில் பாதையிலுள்ள கடப்பா ஸ்டேஷனில்
இறங்கி, அங்கிருந்து
பஸ்ஸில் (பஸ் ஸ்டாண்டு 2 கி.மீ. தூரத்தில் உள்ளது) 85 கி.மீ. தூரம் சென்று அர்லகட்டா என்ற ஊரில் இறங்கி,
அங்கிருந்து வேறு பஸ்ஸில் 1 மணி நேரத்தலி 25 கி.மீ தூரத்தில் உள்ள அஹோபிலம் போய்ச் சேரலாம். நந்தியாலில்
இருந்து 65 கி.மீ
ஹைதாரபாதிலிருந்து பஸ்ஸில் வரலாம். இவ்வூரில் திருப்பதி தேவஸ்தானத்தாரால்
நடத்தப்படும் விடுதி ஒன்றும் உள்ளது.
மூலவர் : ப்ரஹ்லாதவரதன், வீற்றிருந்த திருக்கோலம்
75) திருவேங்கடம்
(திருப்பதி,
திருமலை,
ஆதிவராஹ க்ஷேத்ரம்)
சென்னை - பம்பாய் ரயில் பாதையிலுள்ள ரேணிகுண்டாவிலிருந்து
சுமார் 12 கி.மீ.
தூரத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷன் திருப்பதி சென்னையிலிருந்து நேராக வரும் ரயில்
வண்டிகளும் உண்டு.
1) கீழ்த்திருப்பதி: கோவிந்தராஜப் பெருமாள் கோவில்,
மூலவர் : கோவிந்தராஜப்பெருமாள், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
2) திருமலை
மூலவர் : திருவேங்கடமுடையான். நின்ற திருக்கோலம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : வடநாட்டுத் திருப்பதிகள் - 11 - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Northern Tirupati - 11 - Spiritual Notes in Tamil [ spirituality ]