ஊட்டச்சத்து நிறைந்த கேழ்வரகு உருண்டை

சமையலறையில் வெற்றி பெறுவதற்கான குறிப்புகள்

[ சமையல் குறிப்புகள் ]

Nutrient rich kelp balls - Tips for Success in the Kitchen in Tamil

ஊட்டச்சத்து நிறைந்த கேழ்வரகு உருண்டை | Nutrient rich kelp balls

கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம். வாரம் இருமுறை, கேழ்வரகில் செய்த உணவுகளை சாப்பிட்டுவந்தால் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை இனிப்பு உருண்டையாக செய்துகொடுக்கலாம்.

ஊட்டச்சத்து நிறைந்த கேழ்வரகு உருண்டை

 

கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம். வாரம் இருமுறை, கேழ்வரகில் செய்த உணவுகளை சாப்பிட்டுவந்தால் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை இனிப்பு உருண்டையாக செய்துகொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு- 1 கப்

நிலக்கடலை - ¼

தேங்காய்த்துருவல் - 1/2 கப்

வெல்லம் (பொடித்தது) - 1/2 கப்

ஏலக்காய்- ஒரு சிட்டிகைஉப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் கேழ்வரகு மாவை மிதமான தீயில் வறுத்து, ஒரு பாத்திரத்தில் ஆறவிடவும். பிறகு நிலக்கடலையை வறுத்து தோலை அகற்றிவிட்டு, மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி கரகரப்பாக திரித்து, ஆறவைத்த கேழ்வரகு மாவுடன் சேர்க்க வேண்டும். கூடவே தேங்காய் துருவலையும் சேர்க்க வேண்டும். பின்னர் ஏலக்காயை பொடித்துப்போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரையை அரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து, கொதித்து சர்க்கரை கரைந்ததும் இறக்கி வடிகட்டி இந்த மாவுடன் ஊற்றவும். நன்றாக கிளறி சப்பாத்தி மாவு பக்குவத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மாவினை உருண்டைகளாக உருட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். மிகவும் சுவையான, சத்தான கேழ்வரகு உருண்டகளை குழந்தைகள் உள்பட அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

சமையல் குறிப்புகள் : ஊட்டச்சத்து நிறைந்த கேழ்வரகு உருண்டை - சமையலறையில் வெற்றி பெறுவதற்கான குறிப்புகள் [ ] | cooking recipes : Nutrient rich kelp balls - Tips for Success in the Kitchen in Tamil [ ]