கோலம் என்பது வெறும் பார்த்து ரசிக்கக்கூடிய கோடுகள் அல்ல. ஒவ்வொரு கோலத்திற்குள்ளும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் மறைந்து கிடக்கிறது.
♾♣எந்தெந்த தினங்களில்.. எந்தெந்த கோலம் போடலாம்?..
வாங்க பார்க்கலாம்...♾♣
♧♤♧கோலம் போடும் பழக்கம் எவ்வாறு வந்தது?♧♤♧
🌻 கோலம் என்பது
வெறும் பார்த்து ரசிக்கக்கூடிய கோடுகள் அல்ல. ஒவ்வொரு கோலத்திற்குள்ளும் ஆயிரமாயிரம்
அர்த்தங்கள் மறைந்து கிடக்கிறது.
🌻 ஆதி காலத்தில்
மனிதன் மரங்களிலும் குகைகளிலும் வாழ்ந்து வந்தான். பின்னர் காலங்கள் செல்லச் செல்ல
சிறு சிறு வீடுகளை கட்ட ஆரம்பித்தான். அவ்வாறு வீடு கட்டும்போது கண்ணுக்கு தெரியாத
பல நுண்ணுயிர்கள் மடிந்தன.
🌻 உயிர்களை கொல்வது
பாவச் செயலாகும். இது மனிதனை மிகவும் வதைத்தது. ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தான்.
வீடு கட்டி முடித்த பின்னர்இ அரிசி மாவை மணல் போல திரித்து அதில் வீட்டின் முன் கோலம்
போட ஆரம்பித்தான்.
🌻 கோலத்தில் இருக்கும்
அரிசியை சாப்பிட எறும்பு மற்றும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் வந்தன. இதனால் உயிர்களை
கொன்ற பாவங்கள் தீர்ந்து விட்டது என்று நிம்மதியாக இருந்தான். கோலமும் வீட்டின் முன்
மிகவும் அழகாக இருந்தது.
♾♣எந்த நாளில் எந்த கோலம் போட வேண்டும்?♾♣
🌟 சூரிய உதயத்திற்கு
முன் எழுந்து சாணம் தெளித்து கோலம் போட வேண்டும்.
🌟 நம் வீட்டு வாசலில்
லட்சுமி வாசம் செய்வதால் புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.
🌟 கோலத்தின் நடுவில்
பூசணி பூ வைப்பதால் செல்வம் சேரும்.
🌟 ஞாயிற்றுக்கிழமைகளில்
சூரிய கோலம் போடுவது நல்லது.
🌟 திங்கட்கிழமை
அல்லி மலர் கோலமும் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
🌟 செவ்வாய்க்கிழமை
வில்வ இலை போட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
🌟 புதன்கிழமை மாவிலைக்
கோலம் போடுவது சிறப்பாகும்.
🌟 வியாழக்கிழமை
மலர் கோலம் போடுவது நல்லது.
🌟 வெள்ளிக்கிழமை
தாமரைப்பூ கோலம் போடுவது நல்லது.
🌟 சனிக்கிழமை பவளமல்லி
கோலம் போட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
🌟 பௌர்ணமி நாளன்று
தாமரைப்பூ கோலம் போடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.
🌟 கோலத்தின் அனைத்து
பக்கத்திலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
🌟 இறந்தவர்களுக்கு
திதி கொடுக்கும் நாட்களிலோ அமாவாசை நாட்களிலோ கோலம் போடக்கூடாது.
🌟 இடது கையினால்
கோலம் போடுவது தவறாகும்.
🌟 பெண்கள் உட்கார்ந்து
கொண்டு கோலம் போடக்கூடாது. குனிந்து தான் போட வேண்டும்.
🌟 வீட்டில் உள்ளவர்கள்
வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டு விட வேண்டும்.
🌟 கோலம் போட்டு
முடித்த பிறகே அடுப்பு பற்ற வைக்க வேண்டும்.
🌟 இவ்வாறு ஒவ்வொரு
கிழமைக்கும் ஏற்றவாறு கோலமிட்டால் தீய சக்திகள் நம் வீட்டை நெருங்காது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : எந்தெந்த தினங்களில்.. எந்தெந்த கோலம் போடலாம்?..வாங்க பார்க்கலாம்... - குறிப்புகள் [ ] | Spiritual Notes : On which days..which kolam can be put?..buy and see... - Tips in Tamil [ ]