காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நடை பெறும் கருடசேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஒரு விநாடி தரிசனம்!
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில்
நடை பெறும் கருடசேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கருட சேவையைக் கண்டு மகிழ்ந்த
ஆழ்வார்கள், அதை தனி மங்களா சாசனமே செய்துள்ளார்கள்.
கருட சேவையின்போது அலங்காரம் முடிந்து
பெருமாள் புறப்படும்
நேரம் கருடசேவையை ஒரு வினாடி திருக்குடைகளால் மறைப்பார்கள். இது இங்கு மட்டுமே நடைபெறும்.
இதற்கு 'ஒரு விநாடி தரிசனம்' என்று பெயர்.
இப்படிச் செய்யக் காரணம்..... முற்காலத்தில்
சோளிங்கர் நகரில் வாழ்ந்த தொட்டாச்சாரியார் என்னும் விஷ்ணு பக்தர் காஞ்சியில் நடைபெறும்
அனைத்து கருட சேவைகளையும் தவறாது தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்படி இருக்கையில்
ஒரு கருடசேவை நடைபெறும் நாளன்று சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் காஞ்சிபுரத்திற்குச்
செல்ல முடியவில்லை!
அப்போது அவர் மிகுந்த மனவேதனை அடைந்து
சோளிங்கரில் இருந்தபடியே வரதராஜரை மனமுருகப் பிரார்த்தித்தாராம். அப்போது தான் அந்த
அதிசய நிகழ்வு நடந்தது. வரதராஜ பெருமாள் தனது பக்தனின் உண்மையான பக்திக்கு இறங்கி, சோளிங்கரில் இருந்த தொட்டாச்சாரியாருக்கு
ஒரு விநாடி நேரம் கருடசேவை தரிசனம் தந்தார்.
இதனை நினைவு கூறும் பொருட்டே இன்றும்
கருட சேவை நடைபெறும்போது, கருட
சேவையை திருக்குடைகளால் ஒரு விநாடி மறைக்கிறார்கள்!.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : ஒரு விநாடி தரிசனம்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : One second darshan! - Perumal in Tamil [ Perumal ]