சுவாமி சன்னதி அருகே உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கினால், குழந்தை இல்லாத தம்பதிகள் விரைவில் குழந்தை பெறுவர் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
நெல்லையில் உள்ள மற்ற கோவில்கள்
கோவிலுக்குள் விளங்கும் மஞ்சனை வடிவம்மன் கருமாரி, சுப்பிரமணிய சுவாமி தட்சிணாமூர்த்தி, அனவரதநாதன் பெரியசபாபதி, திருப்பணி ஆறுமுக நயினார். நெல்லையம்பல விநாயகர் முருகன், தேரடிக் கருப்பசாமி, மாயூர நாதர், ஆத்தியடி விநாயகர், கரும்பனை வீரச்சாத்தா, கீழ ரத வீதி குளத்தூர் சாத்தா. பூதத்தார் கோவில், வாகையடி அம்மன், சந்நிதி விநாயகர், கல்லணை அடைக்கல விநாயகர், பேட்டை மார்க்கம் ஆலடி விநாயகர், வேணுவனக்குமாரர், தடிவீரச் சாத்தா, கம்பா நதிக் காமாட்சி. புரட்டாபுரத்தி அம்மன், தொண்டர்கள் நயினார், குத்தப்புரை ஈசான விநாயகர், தெப்ப மண்டபம் மீனாட்சி சுந்தரேசுவரர், வலம்புரியம்மன், நிலத்தேர் சம்பந்தர், கீழப்புதுத்தெரு மாரியம்மன்,
திருப்பணி விநாயகர் ஆகிய இம்மூர்த்திகளின் கோவில்கள் நகரைச்
சுற்றிலும் அணி செய்கின்றன. நகருக்கு வெளியே, கருப்பந்துரை அழியாபதீசுவரர், சிக்கல் நரசய்யன்புரம் எட்டுக் கண்ணாறு துர்க்கை,
வீரராகவபுரம் அனுமார், மேலப்பாளையம் கற்பக விநாயகர் சேந்திமங்கலம் பிள்ளையார்,
நல்லாம்பிள்ளை பெத்தம்மன், திருப்பணி கரிசற்குளம் அனவரத விநாயகர்,
திருப்பணிச் செட்டிக்குளம் வடிவம்மன்,
வண்ணை நகர் பேராத்துச் செல்லி அம்மன் முதலிய ஆலயங்கள்
நகருக்கு சிறப்பைத் தருகின்றன.
சுவாமி சன்னதி அருகே உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கினால்,
குழந்தை இல்லாத தம்பதிகள் விரைவில் குழந்தை பெறுவர் என்றும்
பக்தர்கள் கூறுகின்றனர்.
இதில் குழந்தை இல்லாத தம்பதிகள் தங்களது வேண்டுதல் நிறைவேற,
சங்கடஹர சதுர்த்தியன்று பொல்லாப்பிள்ளையாருக்கு. 11 வகையான அபிஷேகம் செய்து, மோதகம் வைத்து, அறுகம்புல் மாலை சூடி வழிபட்டால், அத் தம்பதியின் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். இதே போல,
41 நாள்கள் கணவரும். மனைவியும் தொடர்ந்து
பக்தி சிரத்தையுடன், அர்ச்சனை
செய்து வழிப்பட்டால், குழந்தை
வரம் கிட்டும் எனப் பக்தர்கள் நம்புகின்றனர்.
நெல்லையப்பர் கோயிலில் உள்ள சுரதேவர் சந்நிதி மிகவும் சிறப்புடையது.
மூன்று தலைகள், மூன்று
கால்கள், மூன்று
கைகளுடன் இம்மூர்த்தி, கையில்
தண்டம், மணி,
சூலத்துடன் காட்சி தருகின்றார்.
எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால்
அபிஷேகம் செய்தால் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை. நடராஜர் நடனம் ஆடிய பஞ்ச
சபைகளுள் இத்தலம் தாமிரசபையாகும்.
இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராசர் 'தாமிர சபாபதி' என்றழைக்கப்படுகிறார். சபைக்கு மேலே தாமிரத் தகடு
வேயப்பட்டுள்ளது. இச்சபையின் உள்ளே ருத்திர விஷ்ணு. பேதங்கள். ரிஷிகளின் உருவங்கள்
உள்ளன. கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்டு ஏழு அடுக்குகளைக் கொண்டு
திகழும் இச்சபை, சித்திர
வேலைப்பாடுகளுடன் அருமையாகத் திகழ்கின்றது. பின்னால் உள்ள நடராஜர் சிலாரூபத்தில்
சந்தன சபாபதி என்றழைக்கப்படுகிறார்.
"செ"செப்பறை'
என்றால், தாமிர அறை எனப் பொருள்படும். நடராஜரின் பஞ்சசபைகளில் ஒன்றான
தாமிரசபை இங்கு தான் முதலில் அமைந்ததாகச் சொல்லப் படுவதால்,
செப்பறை எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். இங்கு நெல்லையப்பர் -
காந்திமதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலைக் கட்டிய முழுதும்கண்ட
இராமபாண்டிய மன்னரே, செப்பறை
கோவிலையும் கட்டினார். திருநெல்வேலி அருகில் உள்ள மணப் படைவீடு என்னும் ஊரில்
அரண்மனை அமைத்துத் தங்கியிருந்தார் முழுதும் கண்ட இராமபாண்டியன். தினமும்
நெல்லையப்பர் கோவிலுக்கு நடந்தே சென்று ஆண்டவனை வந்த பின்னரே உணவருந்துவது அவரது வழக்கம்.
ஒரு நாள் தாமிரபரணியில் வெள்ளம் அதிகமாக ஓடியதால்,
ஆற்றைக் கடந்து கோவிலுக்குச் செல்ல இயலவில்லை. எனவே,
அன்று முழுவதும் உணவு உண்ணாமல், அரண்மனைக்குத் திரும்பி நெல்லையப்பரின் நினைவுடன்
உறங்கிவிட்டார். அவரது கனவில், ஒரு முனிவரின் வடிவில் நெல்லையப்பர் தோன்றி,
"என்னைத் தினமும் நடந்தே வந்து
தரிசிக்கும் உனக்கு வசதியாக, நீ தங்கியிருக்கும் இடத்தின் அருகிலேயே நான் கோவில்
கொள்ள உத்தேசித்துள்ளேன். நீ என்னை அங்கு பிரதிஷ்டை செய்து
வணங்கி வருவாயாக" என்று கூறி மறைந்தார்.
மறுநாள் கனவில் எழுந்தருளிய நெல்லையப்பர்,
"சிதம்பரத்திலிருந்து இரண்யவர்மன்
என்னும் சக்கரவர்த்தியிடம் பணிபுரிந்த சிற்பி ஒருவர்,
நடராஜ பெருமானின் சிலையைச் சுமந்து இங்கு வருவார்;
எந்த இடத்தில், அந்தச் சிலையை அவர் இறக்கி வைக்கிறாரோ,
அந்த இடத்தில் எனக்கும். காந்திமதி அம்மைக்கும்,
நடராஜருக்கும் சன்னதி அமைக்க வேண்டும். கோவில்
அமையும் இடத்தில் உள்ள குழிக்குள் எறும்புகள் சாரை,
சாரையாக ஊர்ந்து செல்லும். அதை அடையாளமாகக்
கொண்டு கோவில் அமைக்கலாம்" என்றார்.
இந்த நல்ல நாளுக்காகக் காத்திருந்தார் மன்னன். நெல்லையப்பர்
சொன்னபடியே, சிற்பி
ஒருவன் நடராஜர் சிலையைச் சுமந்துவர, ஒரு இடத்தில் கனம் அதிகரித்தது. அந்த இடத்தில் அவர் சிலையை
வைத்துவிட்டார். களைப்பின் காரணமாக உறங்கிய அவர், விழித்துப் பார்த்தபோது சிலையைக் காணவில்லை.
இதுபற்றி மன்னரிடம் அவர் முறையிட்டார். அதிர்ச்சியடைந்த
மன்னர் சிலையைத் தேடிச் செல்லவே, ஒரு இடத்தில் நடனமாடும் ஒலி கேட்கவே,
அங்குச் சென்று பார்த்தபோது திருத்தாண்டவம்
ஆடிக்கொண்டிருந்தார் நடராஜர். அவ்விடத்தை அடையாளமாகக் கொண்டு முழுதும் கண்ட
இஇராமபாண்டியன் கோவில் எழுப்பினார்; நெல்லையப்பரின் பெயரால் இந்தக் கோவில் அமைந்தாலும்
நடராஜருக்கே இங்கு முக்கியத்துவம். ஆனி மாதத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர்
கோவிலில் பிரம்மோற்சவம் நடக்கும்போது, இங்கும் அதே விழா நடக்கும். இயற்கை எழில்மிக்க இந்த கிராமம்
திருநெல்வேலி - மதுரை ரோட்டில் உள்ள தாழையூத்தில் இருந்து பிரியும் சாலையில்
பத்துக் கி.மீ.தொலைவில் உள்ளது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: சிவன் : நெல்லையில் உள்ள மற்ற கோவில்கள் - குழந்தை வரம் கிடைக்கும், காய்ச்சல் குணமாகும், கனவில் வந்த நெல்லையப்பர் [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : Other temples in Nellai - Child will be blessed, fever will be cured, Nellaiyapur in dream in Tamil [ spirituality ]