
பிறப்பு - வாழ்வு - இறப்பு - மறுபிறவி நான் ஒரு அழிவற்ற ஆத்மா என்றவுடன் கீழ்க்கண்ட கேள்விகள் என் மனத்தில் எழுகின்றன. இந்த உடலுக்குள் பிரவேசம் ஆகும் முன்பாக ஆத்மா எங்கிருந்தது? உடலைவிட்டுப் பிரிந்த பிறகு ஆத்மா எங்கு செல்கிறது? அனாதி (Eternal) என்பதின் நோக்கம் தான் என்ன?
நமது உண்மையான வீடு.
பிறப்பு - வாழ்வு - இறப்பு - மறுபிறவி
நான் ஒரு அழிவற்ற ஆத்மா என்றவுடன்
கீழ்க்கண்ட கேள்விகள் என் மனத்தில் எழுகின்றன.
இந்த உடலுக்குள் பிரவேசம் ஆகும் முன்பாக
ஆத்மா எங்கிருந்தது?
உடலைவிட்டுப் பிரிந்த பிறகு ஆத்மா எங்கு
செல்கிறது?
அனாதி (Eternal) என்பதின் நோக்கம்
தான் என்ன?
மனித இனம் இத்தகைய கேள்விகளை
நெடுங்காலமாகவே கேட்டு வருகின்ற போதிலும் இவற்றிற்கான பதில்கள் திருப்தியான வையாக
இதுவரை இல்லை.
ஆகாயத்துக்கு அப்பால், சொர்க்கம்; பூமிக்கு அடியில் பாதாளத்தில் கொடூரமான நரகம் இருப்பதாகவும், பல தர்மங்கள் குறிப்பிட்டு வருகின்றன. ஆனால், அந்த
சுகம் நிறைந்த சொர்க்கம்; துக்கம் தரும் நரகம் எவ்வாறு எங்கே
இருக்கும் என்பதை மனித மனம் ஊகிக்க இயலவில்லை.
இறைவனின் படைப்பில் பிழை ஏதும் இருக்க
முடியாது என நம்பினாலும், மனிதன் சரீர உணர்வில் இருப்பதால், அதனால்
ஏற்படுகின்ற பல ஆசைகளின் பிடியில் சிக்குண்டிருப்பதால், குழப்பத்தில்
ஆழ்ந்திருக்கின்றான். எதையும் தெளிவாக உணரமுடிய வில்லை. மரணத்தைத் தழுவும்போது
தான், இறப்புக்கு அடுத்ததாக வரும் பிறப்பைப் பற்றி சிறிது
உணரத்தலைப் படுகின்றான். தான் அன்பு செலுத்திவந்த ஒருவரின் மறைவை இடுகாட்டில்
காணும்போது உடலின் தாற்காலிக நிலையைக் கண்டு ஓரளவு இடுகாட்டு வைராக்கியம்
மனிதர்களுக்கு ஏற்படுகிறது. உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா சொர்க்கத்தைச் சென்றடைய
வேண்டும், நரகத்துக்குச் செல்லக்கூடாது என அனைவரும் விரும்புகின்றனர்.
அப்போது மட்டுமே நாம் அனைவரும் ஆத்மாக்கள்தான்; பிறப்பு,
வாழ்கை, இறப்பு ஆகிய அனைத்தும் வெவ்வேறு
கட்டங்கள்தான் என்பதை உணர்கின்றனர். ஆத்மா ஒரு உடலில் பிரவேசம் ஆகி, ஒரு குறிப்பட்ட காலம் வரையில் அந்த உடலின் ஆதாரத்தில் வாழ்ந்து, செயலாற்றிவந்து, அக்காலம் முடிவு பெற்றவுடன்,
அந்த உடலைத் துறந்து வேறு உடலில் பிரவேசம் ஆகி, தொடர்ந்து தன் பாகத்தைச் செய்துவருகிறது. உடலில் ஆத்மா இருக்கும் வரையில்,
செடி கொடிகள் போல் உடலும், குழந்தையாக இருந்து
வாலிபம், முதுமைப்பருவம் என வளர்ந்துவருகிறது. இறுதியில் அந்த
உடல் நலிவடைந்து பலமிழந்து எதற்கும் உபயோகப்படாத ஒன்றாகி விடுகிறது. ஆத்மா உடலை
விட்டுப்பிரிந்தவுடன், இறுதியில் உடல் ஒரு கட்டை
போலாகிவிடுகிறது. இறுதியில் உடல் அழுகி, மண்ணோடு
மண்ணாகிவிடுகிறது. மீண்டும் ஆத்மா கருப்பையில் வளரும் சிசுவின் உடலில் பிரவேசம்
ஆகின்றது. சிறிது காலத்திற்குப் பிறகு பச்சிளம் குழந்தையாக பிறவி எடுத்து. அது
வளர்ந்து வரும்போதே அதன் முற்பிறவியின் குணங்களை சுபாவங்களை வெளிக்
கொண்டுவருகிறது. அதே ஆத்மா மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு உடல் கூறுகள் ஒன்றாகி
புதிய உடலாக வடிவெடுக்கின்றன, ஆனால் அது ஒரு புதிய உடலில்
இப்போது வசித்துவருகிறது. ஆகவே இறப்பு என்பதன் மூலமாக ஆத்மாவின் இடம் சூழ்நிலை
ஆகியவையும் மாறிவிடுகின்றன. காலம் ஆத்மாவைக் கொல்வதில்லை. பஞ்ச தத்துவங்களால்
உருவாகின்ற, உடல்தான் காலப்போக்கில் பழையதாகி அழுகி
மறைகின்றது. உடல் மீண்டும் பஞ்ச தத்துவங்களில் கலந்து விடுகிறது.
பிறப்பு, வாழ்வு, இறப்பு
என்பதும் நிரந்தரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இது தொடர்ந்து நடைபெற்றுக்
கொண்டே இருக்கும். ஆத்மா உடலில் பிரவேசம் ஆகி, தன்
கர்மக்கணக்குக்கு ஏற்ப, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு,
இன்ப, துன்பத்தை அனுபவம் செய்துவந்து, உடலை விட்டுப் பிரிந்து மீண்டும் வேறு உடலில் பிரவேசம் ஆகி தன்
பிரயாணத்தைத் தொடர்கிறது. தன் இல்லமான ஆத்ம உலகிலிருந்து கீழே இறங்கி, இந்த மண் உலகிற்கு வந்து, பல பிறவிகளை எடுத்துப்
பிறகு மீண்டும் ஆத்ம உலகிற்குச் சென்று சிறிது ஓய்வு எடுக்கிறது. மீண்டும் மண்
உலகிற்கு வந்து தன் பாகத்தை செய்கிறது இவ்வாறு இந்த பிறப்பு இறப்புச் சக்கரம்
தொடர்ந்து சுழன்று வருகிறது.
ஆத்மா ஏன் அமைதி, அன்பு
மற்றும் சுகத்தைத் தேடுகிறது?
நற்பண்புகளைத் தேடி அலைவது என்பது
நிரந்தரமான ஒரு மனித முயற்சியாகும். சரீர உணர்வுடன் இருக்கும்போது, இந்த ஸ்தூல உலகம், மற்றும் உடலைச் சார்ந்த உறவுகள்தான் நமக்கு அன்பு அமைதி மற்றும்
ஆனந்தத்தைக் கொடுக்கவல்லவை என்று தவறாக நாம் புரிந்துகொண்டுள்ளோம். உலகிய
பொருட்கள் மூலமாகவோ, நபர்கள் மூலமாகவோ நாம் இந்த அன்பு,
அமைதி மற்றும் ஆனந்தத்தை அடையமுடியாது. இவையாவும் சூட்சுமமான
ஆத்மாவின் சுய தர்மம் ஆகும். இதை உணர்வது மிக அவசியம் ஆகும்.
ஒரு காட்சியை கற்பனை செய்துப் பாருங்கள்; உங்களைச் சுற்றிலும்,
நீங்கள் விரும்பும் அறுசுவை உணவு, செவிக்கின்பம்
அளிக்கும் கீதம், கண்ணுக்கினிய இயற்கைக் காட்சிகள், இனிய நண்பர்கள் ஆகிய அனைத்தும் இருக்கின்ற வேளையில், திடீரென்று உங்களுக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் உடலை நீத்துவிட்டார்
என்கிற தொலைபேசி செய்தி வந்தால், மேற்கூறிய அனைத்தும்
மனதிற்கு சுவாராஸ்ய மற்றும் சுவையில்லாமலும் போய்விடுகிறதே! அச்செய்தி ஆத்மாவை
நிலைகுலையச் செய்துவிடுகிறது. மேற்கூறியவற்றை ஆத்மா ரசிக்க இயலுவதில்லை. ஏனெனில்
போதியளவு புரிந்து கொள்ளும் ஞானமும், சக்தியும் இல்லாததே
காரணம். வாழ்க்கை என்பது இது போன்ற பல அனுபவங்களைக் கொண்டது ஆகவே அன்பு அமைதி
மற்றும் ஆனந்தம் ஆகியவை ஆத்மாவின் நிரந்தரமான குணங்கள் என்பது தெளிவாகிறது. அவை
ஆத்மாவிற்குள் உள்ளேயே (ஞானம் மற்றும் சக்தியின் உருவில்) உள்ளன. ஆனால் இதுவரை
அவற்றை வெளியில் ஸ்தூலத்தில் தேடிவந்து அவற்றை அடைய முடியாமல், மனிதன் களைத்து மனம் தளர்ந்து விட்டான். எனவேதான் ஆத்மா மீண்டும் சுய
இயல்புகளை, நற்குணங்களை ஏற்கனவே அனுபவம் ஆன, அனுபவித்த ஒன்றை மீண்டும் அடைய விரும்புவது மனித இயல்பு, மாம்பழத்தை இதுவரை ருசித்திராதவருக்கு மாம்பழத்தை ருசிக்க வேண்டும் என்கிற
ஆவல் இருக்காது. ஆனால் ஏற்கனவே ருசித்தவருக்கோ மிகுதியாக இருக்கும் அனுபவம்
செய்யவிழைகிறது. ஆக அன்பு, அமைதி.... ஆத்மாவின் இயற்கையான
இயல்புகள். இந்த மண் உலகம் மற்றும் இதற்கு அப்பால் உள்ள உலகங்கள். இந்த பௌதீக
உலகம். இந்த மண் உலகமாவது, அதாவது இந்த பூமி ஒரு பெரிய நாடக
மேடை. இதில் ஜீவாத்மாக்கள் பல தத்தம் பார்ட்டை தொடர்ந்து நடித்துவருகின்றன. இந்த
பூமி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஒரு சிறிய பகுதிதான். பஞ்ச பூதங்களால் உருவாக்கப்
பட்டுள்ளது. இந்த உலகமும் இந்த உலகில் உள்ள ஜீவராசிகள் மற்றும் ஜடப்பொருட்களும்
இந்த பஞ்ச தத்துவங்களால் உருவாகின்றன. இந்த உலகானது பௌதீக, இராசயன
மற்றும் தாவர-உயிரியலின் நிர்ணயிக்கப்பட்ட சட்டத்தின் கீழ் இயங்குகிறது. இந்த பூமி
ஒரு கர்மக்ஷேத்திரம் என்று பாரதம் இதை வர்ணிக்கின்றது. ஏன் எனில் இங்குதான் சகல
ஆத்மாக்களும் தத்தம் கர்மங்களைச் செய்துவந்து பிறகு அவற்றின் வெவ்வேறு பலன்களை
அனுபவிக்கின்றன. இந்த பூமியில் வாழ்ந்துவரும் மனிதர்களின் மனோபாவனைக்கு ஏற்பவே,
பூமியின், இயற்கையின் நிலையும் அமைகிறது.
ஆத்மா அமைதியோடு நல்லிணக்கத்தையும் அனுபவம் செய்துவரும் போது, இயற்கையும் அமைதியாக இருக்கிறது. ஆத்மா அமைதியை இழந்து குழப்பத்தில்
ஆழ்ந்திருந்தால், இயற்கையும் அதையே பிரதிபலிக்கிறது.
இந்த உலகம் ஒரு பெரிய நாடகமேடை. இதற்கு
சூரியனும் சந்திரனும் ஒளியூட்டுகின்றன. இதில் நந்தவனங்கள், பாலைவனங்கள், மலை, கடல் ஆகியவையும் உள்ளன. இதில் நடித்துவரும்
நடிகர்களான ஆத்மாக்கள், ஆரம்பத்தில், அன்பு,
அமைதி, தூய்மை, சுகத்தை
அனுபவம் செய்துவந்து பிறகு இப்போது துன்பம், அசாந்தி,
அபவித்திரத்தை அனுபவித்து வருகின்றன. காலத்தின் இறுதி கட்டத்தில்
சரித்திரத்தில் இக்காட்சிகள் ஒரு முடிவுக்கு வருகின்றன. பிறகு ஆத்மாக்கள் மற்றும்
இயற்கையின் நிலையும் மாறி ஆரம்பத்தில் இருந்த உயர்ந்த ஸ்திதியை அடைகின்றன. இவ்வாறு
சிருஷ்டி சக்கரம் தொடர்ந்து இந்த பூமியில் சுழன்று வருகின்றது.
இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சம் மற்றும்
கிரகங்களுக்கு அப்பால் ஒளியால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு உலகம் இருக்கிறது. இது
சூட்சும உலகம் எனப்படும். இதை பௌதீக ரீதியாக அணுக முடியாது. இது இந்த
பூமியிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதையும் எந்த அளவு கோலாலும்
அளக்கமுடியாது. இது ஸ்தூல வரம்புகளுக்கு உட்பட்ட உலகம் அல்ல. மூன்றாம் கண் என்கிற
திவ்ய பார்வை மூழ்கியிருக்கும் போது இதை உணரமுடியும். ஆழ்ந்த தியானத்தில் மூலமாகவே
ஒரு ஆத்மா இந்த இடத்தைச் சென்றடைவதோடு பௌதீக உலகின் ஈர்ப்பு களைக் கடந்து நிற்க
முடியும். இங்குதான் இறைவனின் 3 முக்கிய தொழில்களான படைப்பு, காத்தல், மற்றும் அழித்தல் ஆகியவை நடைபெறுகின்றன. இங்கு நடைபெறுவதை அதிர்ஷ்ட
சாலிகளான ஒரு சில குழந்தைகளே டிரான்ஸ் (தன்னை முற்றிலும் மறந்த ஆழ்தியானம்) மூலம்
காணும் பாக்கியத்தை பெற்றுள்ளனர். அவர்களின் அனுபவத்தின் மூலமாகவே இங்கு நடைபெறும்
காட்சிகளை மற்றவர்கள் அறிகின்றனர். இங்கு ஒலி கிடையாது. அசைவுகள், மட்டுமே இருக்கும் உடல்கள் ஒளியால் உருவாக்கப்பட்டுள்ளன; பஞ்ச தத்துவங்களால் அல்ல. இங்கு, எண்ணங்கள் மற்றும்
சமிக்ஞைகள் மூலமாகவே கருத்துப் பரிமாற்றங்கள் நடை பெறுகின்றன. இந்த உலகம் காலம்
மற்றும் பௌதீக கனபரிமாணங்களுக்கு அப்பாற்பட்டது ஆகும். ஒளி என்கிற சக்தியின்
மூலமாகவே இந்த உலகம் இயங்கிவருகிறது.
ஆன்மீக பணியில்!
தமிழர் நலம்
நன்றி...🙏
ஞானம் : நமது உண்மையான வீடு. - இந்த பூமிக்கு அப்பால் உள்ள சூட்சும உலகம். [ ஞானம் ] | Wisdom : Our true home. - Suksuma world beyond this earth. in Tamil [ Wisdom ]