ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலிருந்து பவானி செல்லும் சாலையில் ஐந்து கி.மீ தொலைவில் இருக்கிறது வாவிக்கடை. இங்கே தான் பஞ்சமுக காளி கோயில் இருக்கிறது.
பஞ்சமுக காளி!
ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலிருந்து பவானி செல்லும்
சாலையில் ஐந்து கி.மீ தொலைவில் இருக்கிறது வாவிக்கடை. இங்கே தான் பஞ்சமுக காளி கோயில்
இருக்கிறது.
காளியன்னை கரியகாளியம்மன், கொங்காலம்மன், வெக்காளியம்மன், பத்ரகாளி, வன பத்ரகாளி எனப் பலவகைப் பெயர்களால்
வழிபடப்படுகின்றாள்.!
தீமையையும், தீயவர்களையும் அழித்து நல்லவர்களைப்
பாதுகாக்கும் வாவிக்கடை தலத்தில் ஐந்து முகங்களோடு பஞ்சபூதங் களையும் கட்டுக்குள் வைத்திருக்கும்
பஞ்சமுக காளியம்மனாக இங்கே கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள்)
மேற்குத்திசை நோக்கி அன்னையின் கருவறை
அமைந்துள்ளது. பக்தர்கள் ஒவ்வொருவராகக் கருவறை வரை சென்று வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.
அப்போது பக்தர்கள் எழுப்பும் ஜெய்... ஜெய்....மகா காளிஸ்வரி!' என்ற கோஷம் எங்கும் எதிரொலிக்கின்றது!
கருவறையின் நுழைவாயிலில் இரண்டு காவல்
தெய்வங்களைக் காணமுடிகிறது. கோயிலின் முன்பு பெரிய நாக உருவமும்,வேல், ஊஞ்சல் ஆகியவையும் காணப்படுகின்றன.
குபேர விநாயகர் மற்றும் கன்னிமார்களுக்கு தனித்தனியே சன்னிதிகள் உள்ளன.
தெற்கு நோக்கி யோக முனியப்பசுவாமி, யோக கருப்பண்ண சுவாமி, பாம்பாட்டி சித்தர் மற்றும் தன்னாசியப்ப
சுவாமி ஆகியோர் திருவுருவச் சிலைகள் கம்பீரமாகத் தோற்றமளிக்கின்றன.
இத்தலத்தின் அருகே வசித்து வந்த பக்தர்
ஒருவரின் கனவில் தோன்றி அன்னை ஸ்ரீ காளீஸ்வரி வழங்கிய கட்டளையின்படியே இந்த இடத்தில்
கோவில் உண்டாகி இருக்கிறது!
இங்கு முக்கிய நாட்களில் குபேரயாகம், சண்டி யாகம், துர்க்கா லட்சுமி யாகம் ஆகியவை நடைபெறுகின்றன.
அமாவாசை பௌர்ணமி நாட்களில் காளியம்மனுக்கு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகின்றன.
கோயில் காலை எட்டு மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
இந்த பஞ்சமுகக் காளியை வழிபடும் பக்தர்களின்
கோரிக்கைகள் எதுவானாலும் அதை உடனுக்குடன் பரிசீலித்து அவற்றைச் சிறப்பாக நிறைவேற்றித்
தருகின்றாள் அன்னை. நோய்நொடிகளை இந்த அன்னையின் திருக்கோயிலில் தரப்படுகின்ற அருட்பிரசாதம்
குணப்படுத்துகின்றது.
மேலும், தொழிலில் மேன்மை ஏற்பட்டு வளம் கிடைக்க
மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொழிலதிபர்கள் இங்கே வந்த வண்ணம் இருக்கக் காணலாம்.
சொர்ண பஞ்சமுக கொளியம்மனை இங்கே வந்து பிரார்த்திக்கும் பெண்களுக்கு மழலைச் செல்வமும்
திருமண வரமும் கட்டாயம் கிடைக்கிறது என்று பக்தர்கள் சொல்கிறார்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : பஞ்சமுக காளி! - வாவிக்கடை பத்ரகாளி [ அம்மன் ] | Amman: History : Panchamukha Kali! - Wavikadai Bhadrakali in Tamil [ Amman ]