வருட முழுவதும் கிடைக்கக் கூடியது பப்பாளிப் பழம்.
பப்பாளிப் பழம்
வருட முழுவதும் கிடைக்கக் கூடியது பப்பாளிப் பழம். பப்பாளிப்
பழத்தின் நுனி பாகம் குறுகியும், அடிபாகம் வரவர பெருத்துமிருக்கும். நன்றாகப் பழுத்த பழம் மஞ்சள், மஞ்சள் கலந்த
ஆரஞ்சு நிறத்திலிருக்கும்.
ஒரு கிலோ எடை முதல் 200 கிராம் எடை வரையிலுள்ள பழங்கள் கிடைக்கும்.
பழத்தை நறுக்கினால் அதன் சதைப் பாகம் சுமார் மூன்று சென்டி மீட்டர்
கனத்தில் ஆரஞ்சு பழ நிறத்திலிருக்கும். பழத்தின் நடுபாகம் வெளிராக இருக்கும். அதில்
மிளகு போன்ற சற்று நீளவடிவத்தில் கரு நிறமான விதைகள் நிறைந்திருக்கும். இந்த விதைகளின்
மேல் மெல்லிய ஒரு தோல் முட்டை போல மூடியிருக்கும். இந்த விதைகள் கரு நிற முத்துக்களைப்
போல அழகாக இருக்கும். இடைஇடையே பறங்கிக் காயிலுள்ள சடைபோல இருக்கும்.
பப்பாளிப் பழம் இனிப்பு ருசியாக இருக்கும். இதில் ஒரு விதமான
பால் வாசனை இருக்கும். சதைப் பாகம் தின்பதற்கு மிருதுவாக இருக்கும்.
பப்பாளிப்பழத்தின் அரிய குணத்தை மக்கள் இன்னும் சரிவர அறியாத
காரணத்தினால் அதற்கு ஆப்பிள் பழத்திற்குள்ள கிராக்கி ஏற்படவில்லை. வைட்டமின் A உயிர்ச்சத்து
நிறைந்த பழவகையில் முதலிடம் பெற்றிருப்பது மாம்பழம். மாம்பழத்திற்கு அடுத்து அதிக அளவில்
வைட்டமின் A உயிர்ச் சத்து பெற்றுள்ள பழம் பப்பாளிப்பழம் ஒன்று தான். உடலில் அதிக
இரத்தத்தை உண்டுபண்ணும். உடலுக்கு நல்ல பலம் தரும் என்று நினைத்து அதிகப் பணம் கொடுத்து
ஆப்பிள் பழத்தை சாப்பிடுகின்றனர். டாக்டர்கள் கூட வாங்கிச் ஆப்பிள் பழத்தைச் சிபாரிசு
செய்கின்றனர். ஆனால், அந்த ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து சிறிதளவு கூட
இல்லை. ஆனால், வைட்டமின் பி 1 மட்டும் அதிக அளவிலிருக்கிறது. வேறு எந்தப் பழத்திலுமில்லாத
அளவு வைட்டமின் பி 1 இந்த ஆப்பிள் பழத்திலிருக்கிறது.
வைட்டமின் பி 1 உயிர்ச்சத்து அதிக அளவில்
இருப்பதை வைத்துத்தான் டாக்டர்கள் ஆப்பிள் பழத்தைச் சிபாரிசு செய்கின்றனர் வைட்டமின்
ஏ உயிர்ச்சத்துக்காக அல்ல!
மனித உடல் வளர்ச்சியடையவும், உடல் பலம்
பெறவும், இரத்தத்தை விருத்தி செய்யும் நரம்புகளுக்கு உறுதியைக் கொடுக்கவும், கண்பார்வையைக்
கூர்மை படுத்தவும், பற்களைக் கெட்டிப்படுத்தி ஈறுகளுக்கு பலத்தைக் கொடுக்கவும், பல் சம்பந்தமான
நோய் வராமல் தடுக்கவும், தாதுவைக் கெட்டிப்படுத்தி புத்திர சந்தானத்தை உண்டு பண்ணவும், கர்ப்பஸ்திரீகளின்
வயிற்றிலுள்ள சிசு பலம் பெற்று வளரவும், சொறி சிரங்கு வராமல் தடுக்கவும், மூத்திரப்
பையில் உண்டாகும் கல்லைக் கரைக்கவும், ஜீரணத்தை உண்டு
பண்ணவும், இரப்பை, குடல், இவைகளைப் பாதுகாக்கவும், அறிவை வளரச்
செய்யவும், நல்ல ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் கூடிய அபார சக்தி வைட்டமின்
ஏ உயிர்ச்சத்துக்குத் தான் உண்டு!
இவைகளைவிட குறைந்த அளவில் சக்தியைக் கொடுப்பதுதான் வைட்டமின்
பி உயிர்ச்சத்து. அதிக அளவில் வைட்டமின் ஏ உயிர்ச் சத்துள்ள மாம்பழம், பப்பாளிப்பழம்
இவைகளைவிட்டு மக்கள் ஆப்பிள் பழத்தின் மேல் ஏன் இவ்வளவு மோகம் கொண்டிருக்கிறார்கள்? எந்ததெந்த
பழத்தில் எந்த அளவு வைட்டமின் உயிர்ச் சத்துக்களிருக்கின்றன என்ற விபரம் தெரியாததே
தான் இதற்குக் காரணம். இது போன்ற நூல்களை அவர்கள் படித்து விபரத்தை புரிந்து கொண்டால், பிறகு மாம்பழத்தையும்
பப்பாளிப்பழத்தையும் விடமாட்டார்கள் அதிகப் பணம் கொடுத்து ஆப்பிள் பழத்தையும் வாங்க
மாட்டார்கள்.
நமது உடலுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது வைட்டமின் ஏ உயிர்ச்சத்து
தான். உண்ணும் அரிசிச் சாதம், கறி, மீன், காய்கறி, பருப்பு நாம் வகைகளில் நமக்குத் தேவையான வைட்டமின் ஏ உயிர்ச்சத்து
கிடையாது. எனவே நாம் அதிக அளவில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகமுள்ள வேறு வகை உணவை
உட்கொள்ள வேண்டும். இதற்கு நாம் பப்பாளிப்பழத்தையும், மாம்பழத்தையும்
சாப்பிட்டு அதிக அளவு வைட்டமின் A உயிர்ச்சத்தையும் பெற வேண்டும். அதிக அளவில் பணச் செலவு செய்யாமல், ஒரு சில காசுகள்
செலவில் பப்பாளிப்பழத்தையும் மாம்பழத்தையும் வாங்கிச் சாப்பிட்டு தேவையான அளவு வைட்டமின்
ஏ உயிர்ச்சத்தைச் சுலபமாகப் பெறலாம்.
பப்பாளிப்பழத்தில் 573 மில்லிகிராம் உயிர்ச்சத்து இருக்கிறது. ஆனால் அதே அளவு ஆப்பிள்
பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச் சத்து சிறிதளவுமில்லை. பப்பாளிப்
பழத்தில் வைட்டமின் பி 1 உயிர்ச் சத்து 11 மில்லிகிராம் இருக்கிறது. ஆனால் ஆப்பிள்
பழத்தில் 36 மில்லிகிராம் இருக் கிறது.
பப்பாளிப்பழத்தில் வைட்டமின் பி 2 உயிர்ச் சத்து 71 மில்லிகிராம் இருக்கின்றது. ஆனால் ஆப்பிள் பழத்தில் வைட்டமின்
பி-2 உயிர்ச்சத்து 9 மில்லி கிராம்இருக்கிறது. பப்பாளிப்பழத்தில் வைட்டமின் C உயிர்ச்சத்து
13 மில்லிகிராம் இருக்கிறது. ஆனால், ஆப்பிள் பழத்தில்
வைட்டமின் C உயிர்ச் சத்து 1 மில்லிகிராம் தான் இருக்கிறது.
இதைக் கொண்டு பப்பாளிப் பழத்திற்கும்
ஆப்பிள் பழத்திற்குமுள்ள உயிர்ச்சத்து விபரங்களை நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். நமது
அரசாங்கத்தாரால் வெளியிடப்படும், 'ஹெல்த் புல்லட்டீன் நம்பர் 23-ல் இதைக் காணலாம்.
பப்பாளிப்பழம் வயிற்று வலியைத் தரும். சீதபேதியை
உண்டாக்கும் என்று தவறாக நினைத்து அதைச் சாப்பிடப் பயப்படுகின்றனர் அநேகர்.
பப்பாளிப்பழம் உஷ்ணம், நெருப்பு, பொல்லாத சூடு, என்று சிலர்
சொல்லுவார்கள். அதே நேரத்தில் மாம்பழத்தை அதிக அளவில் சாப்பிடுவார்கள்.
இவர்கள் எந்தப் பழம் சூடு, எந்தப் பழம் குளிர்ச்சி என்பதையே அறியாதவர்கள்.
பப்பாளிப் பழத்தின் காலரி என்ற உஷ்ண அளவு - 11.
மாம்பழத்தின் காலரி என்ற உஷ்ண அளவு - 14.
இதிலிருந்து எந்தப் பழம் அதிக உஷ்ணம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
பப்பாளிப் பழத்தில் தினசரி தொடர்ந்து 40 நாட்கள் வரை ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு இரவுபடுக்கு முன்
ஒரு டம்ளர் அளவு காய்ச்சிய பசுவின் பால் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.
உடல் பலம் பெறும். நரம்பு களில் முறுக்கு ஏறும். ஆண் தன்மை அதிகரிக்கும். உடற் சோம்பல்
மாறி சுறுசுறுப்பு உண்டாகும். மனதில் ஒரு விதமான புதிய உணர்ச்சியும், மகிழ்ச்சியும்
ஏற்படும். மலச்சிக்கல் ஏற்படாது. மாக, மலம் சுலப சரளமாக இறங்கும்.
பல் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். பல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படாது, பற்களுக்கு
உறுதி ஏற்படும்.
மாதவிடாய் தடைப்பட்டு கஷ்டப்படும் பெண் மணிகள் மூன்று நாட்களுக்கு
தினசரி பப்பாளிப் பழத்தை தின்று வந்தால் மாதவிடாய் ஏற்படும், பிறகு ஒழுங்காக
வெளியேறும்.
சொறி சிரங்கு குணமாகும். உடலிலுள்ள புண்கள் சீக்கிரமாக ஆறும். அடிக்கடி பப்பாளிப்
பழத்தைச் சாப்பிட்டு வரு பவர்கள் எந்த வகையான வியாதிகளுக்கும் ஆளாக வேண்டி இருக்காது.
எந்த வகையான தொற்று நோய் பரவினாலும் இவர்களை அது தாக்காது.
பப்பாளிப் பழத்தில் இயற்கையாகவே விஷக் கிருமிகளைக் கொல்லும்
ஒரு வகைச் சத்து நிறைந்திருப்பதால், பப்பாளிப் பழத்தைச சாப்பிடுகிறவர்களின் இரத்தத்தில் கலக்கும்
எந்த வகையான நோயை உண்டு பண்ணும் விஷக்கிருமிகளும் இறந்து விடும். எனவே பப்பாளிப் பழம்
சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதே நல்லது. எந்த நோய்க்கும் பயப்படத் தேவையில்லை.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
ஆரோக்கியம் குறிப்புகள் : பப்பாளிப் பழம் - பலன்கள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Papaya fruit - benefits in Tamil [ Health ]