பார்த்தசாரதி மகிமை

குறிப்புகள்

[ கிருஷ்ணர் ]

Parthasarathy glory - Tips in Tamil

பார்த்தசாரதி மகிமை | Parthasarathy glory

அர்ஜுனா .... இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும்,' என்று கூறி மறைந்த பார்த்தசாரதி என்பதை .......பற்றி விளக்கும் எளிய கதை

பார்த்தசாரதி மகிமை:


அர்ஜுனா .... இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும்,' என்று கூறி மறைந்த  பார்த்தசாரதி என்பதை .......பற்றி  விளக்கும் எளிய கதை

🌺 கவுரவர்களிடம் நாடிழந்து, வனவாசம் சென்ற போது, அர்ஜுனன் தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்தான். ஓரிடத்தில் அகத்தியர், கமண்டலத்தை அருகில் வைத்து தியானத்தில் இருப்பதை பார்த்தான்.

 

🌺 தியானம் முடிந்து கண்திறக்கும் வரை தன்னால் தாகத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்பதால் அகத்தியரின் தியானத்தை கலைத்து தனக்கு தண்ணீர் தருமாறு கேட்டான். அவரது அனுமதியுடன் கமண்டலத்தை திறந்தான்.

 

🌺 அதில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை. கேள்விக்குறியுடன் அகத்தியரின் முகத்தை பார்த்த அர்ஜூனனிடம், ""அர்ஜுனா! நீ எப்போதும் எது வேண்டினாலும் கொடுக்கும் கடவுளான கிருஷ்ணனிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்,' என்றார்.

 

🌺 தன் தவறை உணர்ந்த அர்ஜுனன், ""கிருஷ்ணா! கிருஷ்ணா!' என அழைத்தான். கிருஷ்ணனும் அர்ஜுனன் முன் தோன்றி தன்னிடமிருந்த கத்தியை அவனிடம் கொடுத்து, ""அர்ஜுனா....இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும்,' என்று கூறி மறைந்தார் பார்த்தசாரதி.

 

🌺 அர்ஜுனனும் அந்த கத்தியால் தரையில் கீறி கங்கையை வரவழைத்து தன் தாகத்தை தணித்து கொண்டான். இந்நிகழ்ச்சி நடந்த இடம் பார்த்தன்பள்ளி என புராணம் கூறுகிறது.

 

🌺 பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 40 வது திவ்ய தேசம். பார்த்தன் பள்ளி. ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத் தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம்.

 

🌺 முகவரி ;-🌹

    

அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்)-609 106. நாகப்பட்டினம் மாவட்டம்.

 

🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க

🌷🌹🌺


🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் *🌹🌺


இறைபணியில்

அன்புடன்....

🌷தமிழர் நலம்🌷

💥நன்றி!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்...

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

 

கிருஷ்ணர் : பார்த்தசாரதி மகிமை - குறிப்புகள் [ கிருஷ்ணர் ] | Krishna : Parthasarathy glory - Tips in Tamil [ Krishna ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்