அனுமன் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். தலைவன் இட்ட பணியைச் சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல்வீரனை இந்த உலகில் பார்ப்பது கடினம்.
பத்துக் கை ஆஞ்சநேயர்
அனுமன் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். தலைவன் இட்ட
பணியைச் சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல்வீரனை இந்த உலகில் பார்ப்பது
கடினம். அனுமனை வழிபாடு செய்பவர்களுக்கு எந்தக் கிரக பாதிப்பும் தோஷமும்
இருக்காது. இராமாயணத்தில் ஒவ்வொரு தெய்வமும் ஒரு பாத்திரம் ஏற்றுக் கொண்டது போல்,
சிவன் ஏற்றுக் கொண்ட பாத்திரம் அனுமன். எனவே இவரைச் சிவனின்
அம்சம் என்பார்கள். மார்கழி மூல நட்சத்திரத்தில் பிறந்த அனுமன்,
நாகை அனந்தமங்கலத்தில் 10 கைகளுடன் அருள் பாலித்து வருகிறார்.
விநாயகருக்கு ஐந்து கரம். பத்துக் கரம் உள்ளவர் யார்?
ஆஞ்சநேயர் தான். இரண்டு கைகள் கொண்ட ஆஞ்சநேயரைத் தான்
நீங்கள் தரிசித்திருப்பீர்கள். ஆனால், பத்து கைகள், மூன்று கண்கள் கொண்ட ஆஞ்சநேயரைத் தரிசிக்க வேண்டுமானால்,
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள
அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
இலங்கையில் யுத்தம் முடிந்து இராமர் அயோத்தி திரும்பும்
வழியில், பரத்வாஜ
முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். அப்போது அங்கே வந்த நாரதர் இராமனிடம்,
"இலங்கையில் யுத்தம் இன்னும்
முடிவடையவில்லை. உனது வில்லுக்கு இன்னும் வேலை உள்ளது. அரக்கர்களின் வாரிசுகள்
சிலர் உயிருடன் உள்ளனர். அவர்கள் இராவணனின் அழிவால் மிகுந்த கோபத்துடன் உள்ளனர்.
பழிக்குப்பழி வாங்கும் வகையில் உன்னை அழிப்பதாகச் சபதம் செய்துள்ளனர். இரக்கபிந்து,
இரக்தராட்சன் என்ற அசுரர்கள் கடலுக்கடியில் தவம் செய்து
கொண்டிருக்கின்றனர். இந்தத் தவம் பூர்த்தியானால் இறந்து போன அனைத்து அசுரர்களும்
உயிர் பெறுவார்கள். எனவே நீ அவர்களை அழித்து தவத்தை முற்றுப்பெறாமல் செய்ய
வேண்டும்."என்றார். உடனே இராமன், "மகரிஷியே! அந்த அரக்கர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் தான்.
ஆனால், குறிப்பிட்ட
காலத்திற்குள் அயோத்தி திரும்பாவிட்டால், தம்பி பரதன் தீக்குண்டத்தில் இறங்கி உயிரை விட்டு விடுவான்.
எனவே நீங்கள் வேறு யார் மூலமாவது அசுரர்களை அழிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.
அதற்கு நாரதர் தன்னுடன் இலட்சுமணனை அனுப்பும்படி கேட்டார். "இலட்சுமணன் என்
நிழல் போன்றவன். அவனை அனுப்ப என்னால் முடியாது. இதற்கெல்லாம் சரியான நபராக ஒருவர்
இருக்கிறார். அழியா வரம் பெற்றவரும், அளவிலா ஆற்றல் பெற்றவரும், அஷ்டமா சித்திகள் கற்றவருமான அனுமனை அனுப்புகிறேன்."
என்றார்,
திருமால் அனுமனுக்கு சங்கு, சக்கரத்தைக் கொடுத்தார். பிரம்மா பிரம்ம கபாலத்தைக்
கொடுத்தார். ருத்ரன் மழு (கோடரி)தந்தார். இராமன் வில்லையும் அம்பையும் கொடுத்தார்.
இந்திரன் வஜ்ராயுதத்தைக் கொடுத்தார். கருடன் தனது பங்கிற்கு இறக்கைகளைக்
கொடுத்தார். இப்படித் தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர் பத்துக்
கரங்களில் பத்து விதமான ஆயுதங்களுடன் காட்சிதந்தார். சிவன்,
தனது சிறப்புக்குரிய நெற்றிக்கண்ணை வழங்கினார். இந்த
ஆயுதங்களுடன் அனுமன் புறப்பட்டுக் கடலுக்கடியில் தவமிருந்த அசுரர்களை அழித்து
அயோத்தி திரும்பினார். திரும்பும் வழியில் கொண்டு சென்ற ஆயுதங்களுடன் ஆனந்தமயமாக
இத்தலத்தில் தங்கியதால் "ஆனந்தமங்கலம் என பெயர் பெற்றது. நாளடைவில்
அனந்தமங்கலம் ஆனது.
வெற்றிலை மாலை, வடைமாலை என்பன அனுமனுக்குப் பிடித்தமானவை. இவைகளைச் சாற்றி
வழிபட்டால், நமது
குறைகள் வெண்ணை உருகுவதுபோல் உருகிவிடும்.
மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில்
திருக்கடையூரை அடுத்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் அனந்தமங்கலகம் உள்ளது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: ஆஞ்சநேயர் : பத்துக் கை ஆஞ்சநேயர் - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | spirituality: Anjaneya : Patuchai Anjaneya - Notes in Tamil [ spirituality ]