கரூர் அருகே உள்ளது 'தான்தோன்றி மலை' இத்தலத்தில் அருள்கிறார் ஸ்ரீகல்யாண வெங்கடேச ரமண சுவாமி.
கனவில் வந்து காலணி கேட்கும் பெருமாள்
கரூர் அருகே உள்ளது 'தான்தோன்றி மலை' இத்தலத்தில் அருள்கிறார் ஸ்ரீகல்யாண
வெங்கடேச ரமண சுவாமி. இந்தப் பெருமாளுக்கு 'செம்மாளி' எனும் செருப்பு சமர்ப்பிக்கப்படும் நிகழ்ச்சி ஒரு முக்கிய நிகழ்வாக நடக்கின்றது.
இந்தப் பெருமாளுக்கு வேண்டிக் கொண்டவர்கள்
பெரிய செருப்பு ஒன்றைத் தைத்து அதற்கு அலங்காரம் செய்து நாமம் சார்த்தி, பூமாலை சூட்டி, ஒரு பலகையில் வைத்து, தலை மேல் சுமந்து மேள தாளங்கள் முழங்க
ஊர்வலமாக வந்து சமர்ப்பிப்பார்கள். அந்தச் செருப்பின் அளவை பெருமாளே பக்தர்களின் கனவில்
வந்து சொல்லி அற்புதம் நிகழ்த்துகிறார்! அந்த வகையில் பல ஜோடி செருப்புகள், காணிக்கைப் பொருளாகக் காட்சியளிக்கின்றன.
நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் இத்தலத்தில்
யந்திர ஸ்தாபனம் செய்துள்ளார். சனிக்கிழமைகளில் இந்தப் பெருமாளைத் தரிசிக்க நூற்றுக்கணக்கான
பக்தர்கள் வருகிறார்கள். இங்கு பாறையைக் குடைந்து ஒரு சன்னதியை அந்தக் காலத்திலேயே
உண்டாக்கி, ஆஞ்நேயரையும் பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார்கள்.
அவர் ‘குகை ஆஞ்சநேயர்' என்று
அழைக்கப்படுகிறார்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : கனவில் வந்து காலணி கேட்கும் பெருமாள் - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Perumal comes in a dream and asks for shoes - Perumal in Tamil [ Perumal ]