தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம் - திருவாரூர் வழித் தடத்தில் 'திருக்கணங்குடி' என்னும் திருத்தலம் அமைந்துள்ளது.
திருநீறு அணியும் பெருமாள்!
தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம்
- திருவாரூர் வழித் தடத்தில் 'திருக்கணங்குடி' என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு
அருள் பாலிக்கும் பெருமாள் சைவ, வைணவ
ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
அதாவது சிவனுக்கே உரிய அடையாளச் சின்னமாகத்
திகழ்வது விபூதி. பெருமாள் எப்போதும் நாமம்தான் அணிவார். ஆனால் இந்தக் கோவிலில் குடிகொண்டுள்ள
லோகநாதன் என்ற பெருமாள் திருநீறு அணிந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்!
அதாவது இங்கு நடைபெறுகின்ற 'திருநீறணி’ திருவிழாவின் போது மூன்றே
முக்கால் நாழிகை நேரத்திற்கு பெருமாள் திருநீறு அணிந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்
பாலிக்கின்றார். இங்கு உள்ள தாயாரின் பெயர் 'ஸ்ரீ லோகநாயகி’.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : திருநீறு அணியும் பெருமாள்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Perumal wears Thiruneiru! - Perumal in Tamil [ Perumal ]