பெருங்குளம் (சனி) - நவதிருப்பதி

ஆன்மீக குறிப்புகள், தல வரலாறு

[ ஆன்மீக குறிப்புகள் ]

Perungulam (Saturday) - Navathirupati - Spiritual Notes, Head history in Tamil

பெருங்குளம் (சனி) - நவதிருப்பதி | Perungulam (Saturday) - Navathirupati

திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் கிழக்கே 5 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் உள்ளது.

பெருங்குளம் (சனி) - நவதிருப்பதி

 

திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் கிழக்கே 5 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் உள்ளது. பேருந்து வசதி உண்டு. கருடன் (ஆடல் பறவை) ஏக ஆசனத்தில் உஸ்தவருடன் எழுந்தருளியுள்ளார். வாசத்தடம் என்ற குளம் தேவபிரசன்னத்தில் செய்யப்பட்டுள்ளது. கோவிலின் தென்புறத்தில் கழுநீர் தொட்டியான் கண்டுபிடிக்கப்பட்டு என்னும் சன்னதி உள்ளது. திருமடப்பள்ளியிலிருந்து வரும் பிரசாத கழிவுநீர் இவர் பாதம் வழியாக செல்கிறது. 9.12.98ல் மகாசம்ப்ரோஷணம் (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.

 

தல வரலாறு :

இங்கு வசித்து வந்த வேதசாரண் குழுத வல்லி தம்பதியினரின் தவப்புதல்வியான கமலாவதி மானிடர் யாரையும் மணந்து வாழ மாட்டேன். இப்பெரு மாளையே மணம்புரிவேன் என்று கடும் தவம் கொண்டாள். பெருமாளும் நேரில் தோன்றி அவளின் ஆசைப்படி தன் மார்பில் ஏற்றுக்கொண்டார். இன்றும் இப்பெருமாளின் நெஞ்சில் கமலாவதியைக் காணலாம். இதனால்தான் பெரும்பாக்கியம் அடைந்ததாக நினைத்த வேதசாரண வேங்கடவானுக்கு நித்ய ஆராதனை செய்து வந்தார். இவருடைய மனைவியானவள் குமுதவல்லி குளிக்க செல்லும் வழிகளில் அச்மசாரன் என்கிற  அரக்கன் ஆனவன் அவர் மனைவியை கவர்ந்து சென்று இமயத்தில் மேலே சிறை வைத்து இருந்தான். இதை அறிந்த வேதசாரண் பெருமாளிடம் அருள்புரிய வேண்டினார். பெருமாளும் குமுதவல்லியை இமயமலையிலிருந்து தனது கருட வாகத்தில் மீட்டு வந்தார். அச்மசாரன் இங்கு வந்து பெருமாளுடன் போர்புரிய அவன் மீது நர்த்தனம் செய்து அவனை வதம் செய்தார்.இதனால் பெருமாளுக்கு ஸோர (அரக்கன்) நாட்டியன் தமிழில் மாயக்கூத்தன் என்ற திருநாமம் ஏற்பட்டது. தனக்கு உதவிபுரிந்த கருடனுக்கு உஸ்தவமூர்த்தியுடன் ஏக ஆசனம் அளித்துள்ளார்.

 

மூலவர் - வேங்கடவானன் நின்ற திருக்கோலம் கீழக்கு பார்த்த திருமுகமண்டலம்.

உற்சவர் - மாயக்கூத்தன். தாயார் - அலர்மேலு மங்கை, குளந்தை வலலி - (தனி சன்னதி இல்லை) தீர்த்தம் - பெருங்குளம் விமானம் - ஆனந்த நிலையம்.

பிரத்யட்சம் - பிரகஸ்பதிக்கு. ஆகமம் - வைகானஸம். சம்பிரதாயம் - தென்கலை.

 

நம்மாழ்வார் மங்களாஸாஸனம்

கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன்? கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்.

பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தன்

மாடக்கொடிமதின் தென்குளத்தை வண்குட பால் நின்ற மாயக்கூத்தன்

ஆடல் பறவை உயர்த்த வெல்லோர் ஆழிவலவனை ஆதரித்தே

 

                                                - பாடல் 3461 


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : பெருங்குளம் (சனி) - நவதிருப்பதி - ஆன்மீக குறிப்புகள், தல வரலாறு [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Perungulam (Saturday) - Navathirupati - Spiritual Notes, Head history in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்