அன்னாசிப் பழம் கோழி முட்டை வடிவத்தில் சுமார் 18 சென்டிமீட்டர் உயரம் 10 -12 சென்டிமீட்டர் கனத்தில் உருண்டு திரண்டிருக்கும்.
அன்னாசிப் பழம்
அன்னாசிப் பழம் கோழி முட்டை வடிவத்தில் சுமார் 18 சென்டிமீட்டர்
உயரம் 10 -12 சென்டிமீட்டர் கனத்தில்
உருண்டு திரண்டிருக்கும். இதன்மேல் சுமார் இரண்டு சென்டிமீட்டர் அகலமுள்ள செதில் மேல்
பக்கம் கூர்மையாகி, சிறிதளவு உப்பலாக இருக்கும்.
பழத்தின் உள் சதைப்பகுதி மஞ்சள் நிறமாக இருக்கும். பச்கவாட்டில்
சிறு சிறு அறைகள் போன்ற இடத்தில் சிறிய அளவில் கருநிறமான விதைகளிருக் கும். நடுபாகம்
கொஞ்சம் அழுத்தமான சதை பாகமிருக்கும்.
அன்னாசிப் பழம் என்றால் அநேகருக்குப் பிடிக்காது. அன்னாசிப்
பழம் அதிகச் சூடு, அது சீத பேதியை உண்டு பண்ணும், வயிற்று வலி
ஏற்படும் என்று சிலர் கருதி இதைச் சாப்பிட பயப்படுகின்றனர். உண்மையில் அன்னாசிப் பழம்
அதிக சூட்டை உண்டு பண்ணக்கூடியதேயல்ல!
அன்னாசிப் பழம், முந்திரிப்பழம், மாம்பழம், ஆரஞ்சுப் பழம்
இவைகளின் உஷ்ண அளவு ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இவைகளின் காலரி என்னும் உஷ்ண அளவு
14 தான்.
தினசரி நாம் குழம்பு, இரசம், சாம்பார் இவற
றிற்குப் பயன்படுத்தும் புளியம் பழத்தின் காலரி என்னும் உஷ்ண அளவு 82 ஆகும். இந்த
அளவின்படி பார்த்தால் அன்னாசிப் பழம் இதில் ஆறில் ஒரு பங்கு உஷ்ணத்தைத்தான் கொடுக்கக்கூடியதாக
இருக்கும்.
வைட்டமின் A உயிர்ச்சத்து – 17 மில்லி கிராம்.
வைட்டமின் B-1 A உயிர்ச்சத்து – இல்லவே இல்லை.
வைட்டமின் B-2 உயிர்ச்சத்து – .34 மில்லி கிராம்.
வைட்டமின் C உயிர்ச்சத்து – .18 மில்லி கிராம்.
சுண்ணாம்புச்சத்து - 6 மில்லி கிராம்.
இரும்புச்சத்து - 0.3 மில்லி கிராம்.
அன்னாசிப் பழத்தில் வைட்டமின் B2 உயிர்ச்சத்து
அதிக அளவிலிருப்பதால், அது உடலில் நல்ல இரத்தத்தை விருத்தி செய்யும், உடலுக்குப்
பலத்தைத் தரும். இந்த அன்னாசிப் பழம் பல வியாதிகளைக் குணப்படுத்தும் அரிய மருந்தாகவும்
பயன்படுகிறது.
தலை சம்பந்தப்பட்ட வியாதிகளைக் குணப்படுத்த
அதாவது, ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத்தலை
வலி, கண்ணில் பீழை சேர்தல், கண் குத்தல், கண் எரிச்சல், கண்ணில் சிவப்பு
படர்தல், கண்ணில் சதா நீர் வடிதல், மாலைக்கண், கண்பார்வை
மங்கல், கண்ணில் உறுத்தல், காதுவலி, காது இரைச்சல்,காதில் சீழ்
வடிதல், காது மந்தம், பீனிசம், ஜலதோஷம், பல் வலி, பல்லில் இரத்தம் வருதல், பல்லில் சீழ்வருதல், எகிர்வீக்கம், எகிர் அரிப்பு, பல்லசைவு, தொண்டைக் கம்மல், தொண்டையில்
கர கரப்பு, இருமல், தொண்டையில் வலி, தொண்டைப்புண், வாய்ப்புண், கடவாய்ப் புண், நாக்கில் வேக்காடு, மூளைக் கோளாறு, ஞாபக சக்திக்
குறைவு, அடிக்கடி ஏற்படும் கிறுகிறுப்பு இது போன்ற கோளாறுகளினால் கஷ்டப்படுகிறவர்கள்
அன்னாசிப்பழத்தைக் கீழ்க்கண்ட முறையில் தயாரித்து தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
நன்றாகப் பழுத்த ஒரு பெரிய அன்னாசிப் பழத்தை வாங்கி வந்து, அதன் மேல்தோலை
சுத்தமாகச் சீவி எடுத்துவிட்டு, உள் சதை பாகத்திலுள்ள விதைகளையும் நீக்கிவிட்டு அதைச் சிறு துண்டுகளாக
வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர்
விட்டு, கையினால் அதை நன்றாகப்பிசைந்து ஒரு மாச்சல்லடையின் மூலம் சாற்றை
வடிகட்டி, அதை அளந்து அந்த அளவிற்கு சர்க்கரையைச் சேர்த்து, எல்லாம் கலந்து
நிற்கும் அளவிற்கு அதில் தண்ணீர்விட்டு, இதை ஒரு களிம்பு ஏறாத பாத்திரத்தில்
விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்ச வேண்டும்.
இது கொதித்துச் சுண்டி தேன் பதத்திற்கு வரும் பொழுது அந்த அளவில்
கால் பங்கு சுத்தமான தேன் விட்டு, நன்றாகக் கலக்கி இறக்கி வைத்து தணிந்தபின் ஒரு வாயகன்ற, மூடியுள்ள
சுத்தமான சீசாவில் விட்டு நன்றாக மூடிமேலே "அன்னாசிப் பழ சர்பத்'' என்று எழுதி
ஒட்டி வைத்துக் கொள்ளவேண்டும். மேலே கூறப்பட்ட எந்த நோயைக் குணப்படுத்த விரும்பினாலும், காலை ஆகாரம்
சாப்பிட்டவுடன் ஒரு டம்ளரில் சர்பத்தில் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டியளவு விட்டு, டம்ளர் நிறையும்
வரை தண்ணீர் விட்டுக் கலக்கிக் குடித்துவிட வேண்டும். இதுபோல தொடர்ந்து
40 நாட்கள் சாப்பிட்டு வந்தால்
மேலே சொன்ன கோளாறுகள் யாவும் குணமாகும்.
உடல் பலம் பெற, பித்த சம்பந்தமான கோளாறுகள்
குணமாக
தேகத்தில் போதுமான இரத்தமின்றி பலஹீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம்
டானிக் போல பலம் கொடுக்கும். அன்னாசிப் பழத்தைக் கீழ்க்கண்ட முறையில் தயாரித்து தொடர்ந்து
சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல இரத்தம் உற்பத்தியாகும். உடல் பலம் பெறும்.
பித்த உபரி காரணமாக காலையில் வாந்தி எடுத்தல், பித்தக் கிறு
கிறுப்பு, நாவில் கசப்பு ருசி, பசி மந்தம்
இது போன்ற கோளாறுகளினால் கஷ்டப் படுகிறவர்கள் அன்னாசிப் பழத்தை கீழ்க் கண்ட முறையில்
தயாரித்துச் சாப்பிட்டு வந்தால் பூரண குணம் காணலாம்.
நன்றாகப் பழுத்த ஒரு அன்னாசிப் பழத்தை வாங்கிவந்து அதன் மேல்
தோலைச் சீவி விட்டு, அதை சுமார் 1 சென்டி மீட்டர் கனம் வைத்து
குறுக்காக வட்ட வட்டமாக நறுக்கி எடுத்து, அதிலுள்ள விதைகளை நீக்கி விட்டு
மறுபடி ஒவ்வொரு வில்லைகளையும் நான்கு சம துண்டுகளாக வெட்டி ஒரு தட்டில் தனித் தனியே
பரவலாக வைத்து, மேலே மெல்லிய துணியை வேடு கட்டி வெய்யிலில் வைத்து, அது வற்ற லாகும்
வரைக் காய வைத்து, ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு நன்றாக மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
தினசரி இரவு ஆகாரம் முடிந்து படுக்கப் போக ஒரு மணி நேரம் இருக்கும்
பொழுது, காய்ச்சிய பசுவின் பாலில் ஒரு டம்ளர் அளவு எடுத்து அதில் இந்த உலர்ந்த
அன்னாசிப் பழ வற்றலில் நான்கு துண்டுகளை எடுத்துப் போட்டு மூடி வைத்து விட வேண்டும்.
படுப்பதற்கு முன் இந்த பழத்துண்டுகளை எடுத்துச் சாப்பிட்டு விட்டு, அந்தப் பாலையும்
குடித்து விட்டுப் படுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விதமாகத் தொடர்ந்து நாற்பது நாட்களுக்கும் சாப்பிட்டு வந்தால்
உடலில் நல்ல இரத்தம் உற்பத்தியாகும். உடல் பலம் பெறும். பித்த சம்பந்த மான கோளாறுகளினால்
கஷ்டப்படுகிறவர்கள் இந்த விதமாகச் சாப்பிட்டு வந்தால், பித்த சம்பந்தமான கோளாறுகள்
பூரணமாகக் குணமாகும். பித்த சம்பந்தமான கோளாறுகள் குணமாக வேறு முறை நன்றாகப் பழுத்த
அன்னாசிப் பழத்தை வாங்கி வந்து, பகல் உணவுக்குப் பின் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பித்த சம்பந்தமான
எல்லா வியாதிகளும் குணமாகும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைநோய் குணமாக அன்னாசிப் பழத்தின்
மேல் தோலைச் சீவிவிட்டு அதைத் துண்டுகளாக நறுக்கி, விதை இருக்கும்
கடின மான பகுதிகளையும் எடுத்துவிட்டு, மிருதுவான சதைபாகமாக எடுத்து
சுத்தமான பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, வாணலியை அடுப்பில் வைத்து பழச்சதை
உள்ள அளவு சர்க்கரையை அதில் போட்டு உடனே பழத்துண்டுகளையும் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
சர்க்கரையும் பழமும் சேர்ந்து வெந்து லேகியம் போல வரும், அந்தச் சமயம், இந்த லேகிய
அளவில் எட்டில் ஒரு பங்கு சுத்தமான நெய்யை விட்டு நன்றாகக் கிளறி விட்டு, அதே அளவு தேனையும்
விட்டுக் கிளறி இறக்கி மத்தைக் கொண்டு கடைந்து. ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக்
கொள்ள வேண்டும். இரவு படுக்கைக்குப் போகுமுன் தேக்கரண்டியளவு லேகியத்தை எடுத்து வாயில்
போட்டு சுவைத்துச் சாப்பிட்டு வெந்நீர் குடித்து விட வேண்டும். இந்த விதமாக 24 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் வெள்ளை நோய் குணமாகும்.
உடல் நல்ல பலம் பெற்று தேகத்தில் தேஜஸ் ஏற்பட
நன்றாகப் பழுத்த அன்னாசிப் பழத்தை வாங்கி வந்து தோலைச் சீவி
எடுத்து விட்டு, சதைப்பாகத்தில் சுமார் இரண்டு ரூபாயெடையளவு எடுத்து. அத்துடன்
தேக்கரண்டியளவு தேன் சேர்த்து பகல் ஆகாரத்திற்கு மேல் சாப்பிடவேண்டும். இந்த விதமாகத்
தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்
தால் உடல் நல்ல பலம் பெறும். தேகத்தில் ஒரு விதமான தேஜஸ் உண்டாகும்.
நன்றாகப் பழுத்த அன்னாசிப் பழத்தை வாங்கி வந்து தோலைச் சீவி
விட்டு, பழத்தை மிகப் பொடியாக நறுக்கி ஒரு வாயகன்ற கண்ணாடிச் சீசாவில்
போட்டு பழம் உள்ள அளவில் சரிபாதி சர்க்கரையையும் சேர்த்து, மொத்த அளவில்
மூன்று பங்கு தண்ணீரையும் விட்டு, சீசாவை ஒரு மணி நேரம் வெய்யிலில் வைத்துவிட வேண்டும். பிறகு
நன்றாகக் கலக்கி நீரை மட்டும் வடிகட்டி தேவையான அளவு சாப்பிட வாசனையாகவும், ருசியாகவுமிருக்கும்.
தாகத்தை தணித்து விடும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
ஆரோக்கியம் குறிப்புகள் : அன்னாசிப் பழம் - கோடைக் காலத்தில் தாகத்தை தடுக்க [ ஆரோக்கியம் ] | Health Tips : Pineapple fruit - To prevent thirst during summer in Tamil [ Health ]