குபேரன் வழிபட்ட இடங்கள்

குபேரன் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: குபேரன் ]

Places where Kubera was worshipped - Kuberan - Spiritual notes in Tamil

குபேரன் வழிபட்ட இடங்கள் | Places where Kubera was worshipped

ராவணன் குபேரனுடன் போரிட்டு சங்க நிதி, பதும திதிகளை குபேர கலசங்களை எடுத்துச் சென்று விடுகிறார்.

குபேரன் வழிபட்ட இடங்கள்


ராவணன் குபேரனுடன் போரிட்டு சங்க நிதி, பதும திதிகளை குபேர கலசங்களை எடுத்துச் சென்று விடுகிறார். குபேரன் குபேர ஸ்தானத்தை இழந்தபோது தேவூர் தேவ புரீஸ்வரரை வழிபட்டு மீண்டும் குபேர பட்டம் பெற்றார். இவ்வூர் நாகை மாவட்டம், கீழ்வேளூருக்கு தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்விறைவனை வழிபட்டால் நீங்காச் செல்வத்தைப் பெறலாம். குபேரன் வழி பட்ட சுயம்பு லிங்கம் இதுவாகும்.


மேலும் திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையிலுள்ள திருக்கோளூர், கும்பகோணம் - காரைக்கால் சாலையிலுள்ள எஸ். புதூர், தஞ்சை வெண்ணாற்றங்கரையிலுள்ள தஞ்சபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் ஆகிய இடங்களிலும் குபேரன் வழிபட்டதாக கூறுவர்.


குபேரன் பிறந்த நாள் பூசம் நட்சத்திரம் கூடிய வியாழக்கிழமையாகும். பூரட்டாதி நட்சத்திரத்திற்கு இவர் அதிபதியாவார். திதி தேய்பிறை பிரதமை திதி ஆகும். ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் இவரை வழிபடுவது மிகச் சிறப்பு. தினசரி இவரை வழிபட்டால் பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்வு பெறலாம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: குபேரன் : குபேரன் வழிபட்ட இடங்கள் - குபேரன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual notes: Kuberan : Places where Kubera was worshipped - Kuberan - Spiritual notes in Tamil [ spirituality ]