மாதுளம் பழம்

மாதுளம் பழத்தினால் ஏற்படும் நன்மைகள்

[ ஆரோக்கியம் குறிப்புகள் ]

Pomegranate fruit - Benefits of Pomegranate Fruit in Tamil

மாதுளம் பழம் | Pomegranate fruit

மாதுளம் பழம் பந்து போல உருண்டு திரண்டு லேசாக சற்று நீண்ட வடிவத்திலிருக்கும்.

மாதுளம் பழம்

 

மாதுளம் பழம் பந்து போல உருண்டு திரண்டு லேசாக சற்று நீண்ட வடிவத்திலிருக்கும். சிகப்பும் மஞ்சளும் கலந்த நிறத்துடன் இருக்கும். மாதுளம் பழத்தை மற்றப் பழங்களைப் போல துண்டு துண்டாக நறுக்கிச் சாப்பிட முடியாது. பழத்தின் மேல் பகுதியை நான்கு பாகங்களாக கத்தியினால் கீறிவிட்டு பழத்தை பிளந்தால் உள்ளே கெம்புக் சுற்கள் போன்று சிவந்த நிறத்துடன் நான்கு, ஐந்து பட்டை களுடன் கூடிய, நுனியில் அகன்ற பாகத்தில் பல முத்துக்கள் வரிசை வரிசையாகப் பதிந்திருப்பதைக் காணலாம்.

இந்த முத்தினுள் நடுபாகத்தில் 5 மி. மீ கனத்தில் 7.8 மி.மீ நீளமுள்ள ஒரு வெண்ணிறமான விதை இருக்கும். இந்த விதையைச் சுற்றிலும் இனிப்பும், புளிப்பும் கலந்த கெட்டியான ஒருவகை நீர்ப்பாக மிருக்கும். பல முத்துகள் சேர்ந்து ஒரு கூட்டமாக அமைந்திருக்கும். அடுத்து மற்றொரு கூட்டமிருக்கும். ஒரு கூட்டத்திற்கும் மறு கூட்டத்திற்கும் இடையே மஞ்சள் நிறமான மிக மெல்லிய தோல் இடையே இருக்கும். ஒரு பழத்தில் இது போன்ற பல கூட்டமிருக்கும். பழத்தின் மையத்தில் மஞ்சள் நிறமான சதைப்பற்று இருக்கும்.

சிலர் முத்துக்களை வாயிலிட்டு, சாரத்தை உறிஞ்சிக் கொண்டு விதைகளைத் துப்பி விடுவார்கள். இது தவறு. விதைகளுடன் மென்று தின்பதுதான் நல்ல முறையாகும். விதைகளை மென்றால் அது முந்திரிப் பருப்பின் ருசிபோல இருக்கும்.

 

மாதுளம் பழத்தினால் ஏற்படும் நன்மைகள்

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கி வெளி யேற்றும் சக்தி உண்டு. எனவே மலச்சிக்கலால் கஷ்டப்படுகிறவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அரைப்பழம் வீதம் தினசரி பகல் உணவிற்குப் பின் சாப்பிட்டு வந்தால் போதும். அது முதல் மலச்சிக்கல் ஏற்படாது. வறட்டு இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

அடிக்கடி மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உண்டாகும். அதன் காரணமாக உடல் பலம் பெறும். அறிவு விருத்தியாகும். நல்ல ஞாபக சக்தி உண்டாகும். எலும்புகள், பற்கள் உறுதியாகும். பித்த சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.

மேலே கண்டவற்றில் பலன் பெற மாதுளம்பழ முத்துகளைத் தான் சாப்பிட வேண்டுமென்பதில்லை. வேறு வகையிலும் சாப்பிடலாம். இதிலும் குணம் காணலாம்.

நன்றாகப் பழுத்த மாதுளம் பழத்தை வாங்கி வந்து நறுக்கிப் பிளந்து உள்ளேயுள்ள முத்துக்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான கையினால் நன்றாகப் பிசைந்து, விதைகளை, எடுத்து விட்டு அந்தச் சாறு இருக்கும் அளவில் நான்கிலொரு பங்கு சர்க்கரையைச் சேர்த்தும் சாப்பிடலாம்.

இந்தச் சாற்றுடன் தேக்கரண்டியளவு சுத்தமான தேன் சேர்த்து, காலை ஆகாரத்திற்கு பின், தொடர்ந்து 21 நாள் சாப்பிட்டு வந்தால், மலம் நன்றாக இறங்கும். உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். உடல் பலம் பெறும். வியாதி அகன்று உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறலாம்.

இந்தக் காலத்தில் கடைகளில் எத்தனையோ வகையான கண் மைகள் விற்கப்படுகின்றன. அந்தக் காலத்தில் கடைகளில் கண் மை கிடைக்காது. வீட்டிலுள்ள பாட்டிமார்கள் தங்கள் குழந்தைகளுக்காக சுயமான முறையில் சுத்தமான கண்மை தயாரித்துக் கொள்வார்கள்.

இப்போது கூட ஒரு சில குடுப்பத்திலுள்ள பாட்டிமார்கள் கடையில் விற்கும் கண்மையை வாங்க விட மாட்டார்கள். சுயமான கண்மையைத் தான் கண்களுக்கு இட வேண்டும் என்று கூறி அவர்களே கண் மை தயாரித்துக் கொடுக்கிறார்கள். சுயமான கண் மை தயாரிக்கும் முறையை இதன் கீழ் கூறுவோம். தேவையானவர்கள் இதன் முறையில் தயாரித்து பயன் படுத்தலாம்.

 

சுயமான கண் மை தயாரிக்கும் முறை

இந்த மை தயாரிக்க புளிப்பு மாதுளம் பழம் தான் தேவைப்படும். இரண்டு அல்லது மூன்று புளிப்பு மாதுளம் பழத்தை வாங்கி வந்து அதன் முத்துகளை உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகப் பிசைந்து விதைகளை எல்லாம் எடுத்துவிட்டு, சுத்தமான மெல்லிய வெள்ளைத் துணியை கைக்குட்டை அளவில் துண்டாகக் கிழித்து இந்தச் சாற்றில் துணியை நனைத்து, தூசு தும்பு இல்லாத இடத்தில் வெய்யிலில் போட்டு உலர்த்த வேண்டும். நன்றாகக் காய்ந்த பின் அந்தத் துண்டுத் துணியை மறுபடி அந்த சாற்றில் போட்டு நனைத்து மறுபடி காய வைக்க வேண்டும். இந்த முறையில் அந்தச் சாற்றை அந்தத் துண்டுத் துணியில் ஏற்றி விட வேண்டும்.

பிறகு அந்தத் துணியை சிறு துண்டுகளாகக் கிழித்து, அகல் விளக்குத் திரி போல திரிகளாக உருட்டி வைத்துக் கொண்டு, ஒரு சுத்தமான அகல் விளக்கை எடுத்து, அதில் சுத்தமான விளக்கெண்ணெயை விட்டு அதில், இந்தத் திரியைப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

மேடு பள்ளமில்லாத அடி பாகமுள்ள ஒரு சுத்தமான பித்தளைப் பாத்திரத்தை எடுத்து, அடி பாகத்தை நன்றாக துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அகல் விளக்கிலுள்ள திரியைப் பற்ற வைத்து, பித்தளைப் பாத்திரத்தின் அடிப்பக்கம் சிறிதளவு பசுவின் வெண்ணெயை லேசாகத் தடவி எரியும் விளக்கின் மேல் புகை படியும்படி பாத்திரத்தைப் பிடித்துக் கொண்டிருந்தால் அந்தப் பாகத்தில் புகை படியும். கையில் பிடித்துக் கொண்டேயிருப்பதற்குச் சிரமமாக இருக்கும். ஆகையால் விளக்கைச் சுற்றி மண் உதிராத மூன்று கற்களை அடுப்பு போல வைத்து அதன் மேல் சட்டியை வைத்து புகை படியும் படிச் செய்யலாம்.

நன்றாக புகை படிந்தவுடன் அதை எடுத்து பாத் திரத்திலுள்ள புகையை விரலினால் வழித்து ஒரு சுத்த மான சிறிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு பாத்திரத்தின் அடி பாகத்தில் பழையபடியும் வெண்ணெயைத் தடவி மறுபடி புகை பிடிக்க வேண்டும்.

இந்த விதமாகத் திரி இருக்கும் வரை எரிய விட்டுக் கிடைத்த புகையைக் கடைசியில் நன்றாகக் குழப்பி ஒரு சிமிழியில் அடைத்து வைத்துக் கொண்டு குழந்தை முதல் பெரியோர் வரை கண்களுக்கு உபயோகப் படுத்தலாம். இதுவே சுயமான ஆரோக்கிய மையாகும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

ஆரோக்கியம் குறிப்புகள் : மாதுளம் பழம் - மாதுளம் பழத்தினால் ஏற்படும் நன்மைகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Pomegranate fruit - Benefits of Pomegranate Fruit in Tamil [ Health ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்