நேர்மறை சிந்தனை

ஊக்கம்

[ ஊக்கம் ]

Positive thinking - Encouragement in Tamil

நேர்மறை சிந்தனை | Positive thinking

நேர்மறை சிந்தனை ( Positive thought ) என்பது 'நல்லவைகளை மனதில் எண்ணி கொண்டே இருப்பதும், அதை நோக்கி செயல்படுவதும் ஆகும்.

 

'நேர்மறை சிந்தனை...!

 

நேர்மறை சிந்தனை என்பது என்ன...?

 

நேர்மறை சிந்தனை ( Positive thought ) என்பது 'நல்லவைகளை மனதில் எண்ணி கொண்டே இருப்பதும், அதை நோக்கி செயல்படுவதும் ஆகும்.

 

முதலில் இந்த நேர்மறை சிந்தனை என்பதைப் பற்றி சரியாக நாம் புரிந்து வைத்திருக்கிறோமா!, என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது...

 

பொதுவாக, நமக்கு எப்போதும் நல்லதே நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும். கெடுதல் எதுவும் நமக்கு வராது, நடக்காது என்று முழுதுமாக மனதில் நம்புவது... மேலும் எது நடந்தாலும் சிறிதளவு கூட நம் மனதை பாதிக்காவண்ணம் மனதை வலிமையுடன் முன்னோக்கிய சிந்தனைகளில் மனதை செலுத்துவது. நம்மை எதுவும் பாதிக்காது என்று நம்புவதும் ஆகும்.

 

நம்மை விடச் செல்வச் செழிப்பில் கீழே இருப்பவர்களைக் கண்டு அவர்களை விட நாம் நன்றாக இருக்கிறோம் என்று மகிழ்ச்சி கொள்வது...

 

இதுபோல் எண்ணுவது தான் நேர்மறை சிந்தனை என்று நம்புகிறோம். உண்மையில் இது  சரி தானா...? இல்லை, இல்லவே இல்லை...

 

வெளிப்படையாகக் கூற வேண்டுமானால் எல்லாருக்கும் வெற்றி, தோல்வி உண்டு. தோல்வி அடையாத நபர்களை நாம் பார்க்க முடியாது. அப்படி இருப்பவர்கள் எதையும் செய்ய முயற்சி செய்திருக்க மாட்டார்கள். மேலும் அவர்கள் வாழ்க்கையை வாழாதவர்கள் என்றே அர்த்தம். வெற்றி மட்டுமே நம் தோட்டத்தில் விளையும். நான் எப்போதும், எதையும் நேர்மறையாகவே சிந்திப்பவன் என்று இதுபோல் வெறும் பகல் கனவுகளை மட்டும் கண்டுகொண்டு, செயல் ஏதும் செய்யாமல் இருந்தால், உறுதியாக தோல்வி மட்டுமே தொடர்ந்து வரும்...

 

ஒரு குழந்தையை கவனியுங்கள். நடை பயில்கையில் எத்தனை முறை கீழே விழுகிறது. ஆனால்!, அது தன் முயற்சியைக் கைவிடுகிறதா என்றால்...? இல்லையே...!

 

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க முயல்கிறது. முடிந்தால் அந்தக் குழந்தையின் முயற்சியைத் தடுத்துப் பாருங்கள்.  அவ்வளவு ஏன்?, ஒரு எறும்பின் வழியில் தடையை ஏற்படுத்திப் பாருங்களேன்...

 

சின்னஞ்சிறு எறும்பு, நடை பயிலும் குழந்தை  இவர்களது முயற்சியில் கால் பங்கு இருந்தாலும் போதும். உலகில் எவ்வளவோ சாதனைகளை நாம் புரியலாம்...

 

இதுதான் நேர்மறை சிந்தனை. வெற்றியா?, தோல்வியா!, எதைப்பற்றியும் கவலைப்படாமல் செய்ய வேண்டியதைத் தொடர்ந்து முழு வீச்சுடன் செய்யுங்கள்...

 

ஆம் நண்பர்களே...!

 

நம் மனதை எப்போதும் நேர்மறை எண்ணங்களால் நிரப்பி வைத்திருந்தால் நல்லவையே உங்களை சூழ்ந்து நிகழும். நல்லவர்களே உங்களை நாடி வருவார்கள்...!

 

நல்லவையே உங்களை வந்தடையும். மகிழ்ச்சியுடன் நிறைவாக வாழலாம். உங்களுக்கு வெற்றி கிட்டும் வரை அயராது உழையுங்கள், என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து செயல்படுங்கள்...!!

 

என்னால் முடியும் என்று நம்புங்கள். பலனில் கவனம் வைக்காதீர்கள். செயலில் மட்டும் ஈடுபாட்டுடன் சிறப்பாக செயல்பட முயலுங்கள் போதும். எந்தவொரு சிந்தனையிலும், இச்செயலை செய்ய முடியும், ஆனால்!, தடைகள் பல வரும். அதைச் சீராக்க வழிகள் பிறக்கும் என்கிற தெளிவு இருக்கிறதே!, அதுவே நேர்மறை சிந்தனை...!!!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

🌹🌹💐 🙏🏻 💐💐💐🌹🌹🌹

ஊக்கம் : நேர்மறை சிந்தனை - ஊக்கம் [ ஊக்கம் ] | Encouragement : Positive thinking - Encouragement in Tamil [ Encouragement ]