நேர்மறையான எண்ணம்

ஒரு தத்துவக் கதை

[ ஊக்கம் ]

Positive thinking - A philosophical story in Tamil

நேர்மறையான எண்ணம் | Positive thinking

நம்முடைய வாழ்க்கை அழகாக அமைய வேண்டும் என்றால் நாம் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க வேண்டும் ஏனென்றால், "எண்ணம் போலவே வாழ்க்கை". என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

நேர்மறையான எண்ணம்:

 

நம்முடைய வாழ்க்கை அழகாக அமைய வேண்டும் என்றால் நாம் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க வேண்டும் ஏனென்றால், "எண்ணம் போலவே வாழ்க்கை". என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

 

ஆனால், பல நேரங்களில் நம்மால் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க முடியாமல் போய்விடுகிறது. நம்மால் ஏன் பல நேரங்களில் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க முடியாமல் போகிறது?

 

ஏனென்றால் நம்மை பாதிக்கும் எதிர்மறை எண்ணங்களால் தான். நமக்கு ஏன் எதிர்மறை எண்ணங்கள் வருகிறது?

 

கடுமையான சூழ்நிலைகள் அல்லது நாம் எதிர்பார்க்காத சில சூழ்நிலைகள் அல்லது நமக்குப் பிடிக்காத சூழ்நிலைகள் வரும் பொழுது, நம்மையும் மீறி நமக்குள் எதிர்மறை எண்ணங்கள் உருவாகுவது. இது அவ்வளவு பெரிய தவறு இல்லை அது அப்படித்தான் நிகழும் ஆனால், பலரும் அதைப் பார்த்து பயந்துவிடுகின்றனர்.

 

அந்த பயம் அவர்களுக்கு எதிர்மறையான எண்ணங்களை மேலும் மேலும் அதிகமாக்குகிறது. பிறகு எதிர்மறையான செயல்களை செய்யத் தூண்டுகிறது. எண்ணமும்,. செயலும் எதிர்மறையாக மாற மாற ஒரு கட்டத்தில் இதற்கு மேல் என்னால் முடியாது எண்ணம் வந்து நம்மை முடங்கச் செய்கிறது.

 

இதன் விளைவாகத் தான் வேலையில், தொழிலில் அல்லது குடும்ப உறவுகளில் பல தவறான முடிவுகளை பலரும் எடுத்து தவித்து வருகின்றனர். பல தவறான முடிவுகளின் பிரதான காரணம் அந்த பயம் தான்.

 

எதிர்மறை எண்ணங்களே வரக்கூடாது என்று சிந்திப்பது சரிதான் அதற்காக எதிர்மறை எண்ணங்களைப் பார்த்து பயந்து நம்மை நாமே வருத்திக் கொள்வது மிகவும் ஆபத்தானது.

 

முதலில் எதிர்மறை எண்ணங்கள் எப்போதும் வரும்? ஏன் வரும்? அது எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அப்படி புரிந்துகொள்வது தான் நம் பயத்தை சரிசெய்ய உதவும் சரியான வழி.

 

நாம் அதைப் புரிந்துகொள்ளும் பொழுது நமது மூளையில் அதற்கான விதையை விதைப்பது போலாகும். அந்த விதை மரமாகும் பொழுது எதிர்மறை எண்ணம் வந்த கணத்திலேயே அதை சரிசெய்து விடுவோம்.

 

அந்த விதை எப்போது மரமாகும் தெரியுமா?

 

ஆம் நண்பர்களே எந்த ஒரு கடினமான சூழலாக இருந்தாலும் உங்களுடைய மூளை செய்தியை அனுப்பும். முன்னதாகவே விதையை விதைத்து உள்ளதால் சரியான நேரத்தில், உங்களுக்கு இந்த நேரத்தில் இதுபோன்ற எண்ணங்கள் ஏற்படும் என்கிற விழிப்புச் செய்தியை தானாகவே அனுப்பிவைக்கும்.

 

அதன் விளைவால் உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் வந்த அந்த கணத்திலேயே நீங்கள் விழிப்படைய ஏதுவாகும். எந்த ஒரு தவறான முடிவையோ, தேவையற்ற செயலையோ அல்லது முடங்கிக் போகும் அளவிற்கு உங்களை நீங்களே வருத்திக்கொள்ளாமல் அந்த சூழலை நேர்மறையாக கையாள உங்களால் முடியும்.

 

இதை சரியாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பயன்படுத்தி நேர்மறையாக வாழுங்கள். நேர்மறை எண்ணங்கள் மற்றும் செயல்களின் ஊடாக உங்கள் வாழ்க்கையை அழகாக, அற்புதமாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு தத்துவக் கதை:

கடவுள் வந்தார்...!

“என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..

 

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

 

முதல் மனிதன் : “எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!”

இரண்டாம் மனிதன்: “நான்  உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”

மூன்றாம் மனிதன் : “உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”

நான்காம் மனுஷி: “உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

 

இப்படீ.. இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!

 

கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!

 

பத்தாவது மனிதன் கேட்டான்: “உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மனநிம்மதியோடும் மனநிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

 

ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

 

“ மனநிம்மதி, மன நிறைவு… நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால்  மனநிறைவு் கிடைத்து விடுமே..?”

 

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் : “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து : "நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..  சிறிது  நேரம் கழித்து வருகிறேன்..”  என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

 

இப்போது, அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..! கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..!

 

அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..! நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..! தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!

 

பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

 

நாம் ஒன்பதில் ஒன்றா..? இல்லை, பத்தாவது மனிதனா..?

 

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்..

பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் நடக்கும் ஓட்டப்பந்தயம்.

          வாழ்க்கை என்பது ஒட்டப்பந்தயமா?

 

 இன்பங்களும் துன்பங்களும் கலந்ததுதான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது இன்பம் மட்டும் துன்பமா?

 

• சிலர் இங்கு பாசத்துக்காக ஏங்குகின்றனர்...

 

• சிலர் பணத்திற்காக ஏங்குகின்றனர்....

 

• சிலர் பதவி, பொன், பொருள் ஆகியவற்காக ஏங்குகின்றனர்...

 

• சிலர் உடுத்த உடை இன்றி ஏங்குகின்றனர்....

 

• சிலர் உண்ண உணவின்றி ஏங்குகின்றனர்...

 

இப்படி ஏங்கி ஏங்கியே சிலரின் வாழ்க்கை முடிந்து விடுகின்றது. வாழ்க்கை என்பது ஏக்கமா?

 

• பணக்காரனோ பணம் இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடுகிறான்.

 

• ஏழையோ பணமே நம்மிடம் இல்லை என்று பணத்தை தேடி ஓடுகிறான்…

 

                வாழ்க்கை என்பது பணமா?

 

• சிலர் வாழ்க்கையில் எதையேனும் சாதிக்கவேண்டும் என்று ஓடுகின்றனர். வாழ்க்கை என்பது சாதனை செய்வதா?

 

• சிலர் வாழ்க்கைக்கு நல்ல கல்வி, அறிவு வேண்டும்(அவசியம்) என்கின்றனர். வாழ்க்கை என்பது கல்வியும் அறிவும் மட்டும் தானா?

 

• சிலர் மீது நம்பிக்கை வைத்தே ஏமாந்து போகின்றோம் நம்மில் சிலர். வாழ்க்கை என்பது ஏமாற்றமா?

 

• சென்றவர்களை எண்ணியே மனமுடைந்து கண்ணீர் விடுகின்றோம். வாழ்க்கை என்பது கண்ணீர் வடிப்பது மட்டும்தானா?

 

• இங்கு நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு பாடத்தினை காண்பிக்கின்றனர். வாழ்க்கை என்பது பாடம் கற்பதா?

 

• சிலர் கனவுகளை துரத்தி செல்ல இயலாமல் இருக்கின்றனர். வாழ்க்கை என்பது கனவு மட்டும் தானா?

 

ஓடி ஆடி முடித்த பின்பு இங்கு ஓய்வெடுக்க மிஞ்சுவது கல்லறையே!!

 

• இருபதிலும் வாழ்க்கையை தொலைத்தவர் இங்கு உண்டு, அறுபதிலும் இங்கு வாழ்க்கையை பெற்றவரும் உண்டு…

 

வாழ்கின்ற வாழ்க்கையை..

சந்தோஷமாக வாழ பழக்கி கொள்ளுங்கள் சுவாமி யானந்தா போல்......

இதுபோன்ற பல பயனுள்ள தன்னம்பிக்கை தகவல்களுடன் நமது  ஆன்மீக பயணம் தொடரும்!

இறைபணியில்

அன்புடன்....

🌷தமிழர் நலம்🌷

💥நன்றி!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்...

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

 

ஊக்கம் : நேர்மறையான எண்ணம் - ஒரு தத்துவக் கதை [ ஊக்கம் ] | Encouragement : Positive thinking - A philosophical story in Tamil [ Encouragement ]