அடக்கம் உடைமை

அதிகாரம்: 13

[ திருக்குறள்: பொருளடக்கம் ]

Possession of modesty - Authority: 13 in Tamil



எழுது: சாமி | தேதி : 15-07-2023 09:52 pm
அடக்கம் உடைமை | Possession of modesty

121. அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் உடைமை

அதிகாரம்: 13

121. அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும். 

அடக்கம் ஒருவனைத் தேவர் உலகத்திற்குக் கொண்டு சேர்க்கும். அடக்கம் இல்லாமை துன்ப இருளில் சேர்க்கும். 

122. காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம்

அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு.

உயிருக்கு அடக்கமே சிறந்த செல்வமாகும். எனவே அடக்கத்தைச் சிறந்த செல்வமாகக் காக்க வேண்டும். 

123. செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின். 

அடக்கமே அறிவுடைமை என்பதை அறிந்து நடப்பவனின் நற்பண்பு நல்லவர்களால் அறியப்பட்டு அவருக்குப் பெருமையை உண்டாக்கும். 

124. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது. 

அடக்க நிலையிலிருந்து மாறுபடாமல் இருப்பவனின் தோற்றம், வலிமை மலையை விட மிகவும் பெரியதாகும். 

125. எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்: அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து. 

பணிவுடைமை எல்லோருக்கும் நன்மை தருவதாகும். என்றாலும் செல்வர்களின் பணிவுடைமை மேலும் ஓர் செல்வமாகும்.

126. ஓருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து.

ஒரு பிறவியில் ஆமைப்போல ஐம்பொறிகளையும் அடக்கப் பெற்றால் அது ஏழுபிறவிக்கும் பாதுகாப்பாகும்.

127. யாகாவார் ஆயினும் நாகாக்க: காவாக்கால் 

சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு.

மனதையும், செயலையும் ஒருவன் அடக்காவிட்டாலும் நாவையாவது அடக்க வேண்டும். அடக்காவிட்டால், சொல் குற்றத்தால் துன்பம் அடைவான். 

128. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றுஆகா தாகி விடும்.

தீய சொல் பேசி ஒரு பொருளைப் பெற்று நன்மை அடைந்தாலும், பிறர் துன்பமடைய வருமாயின், அது அறச் செயலாகாது. 

120. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.

தீயினால் சுட்டபுண் மனதினுள் மறைந்து விடும். ஆனால் நாவினால் சுட்ட சுடுசொல்லாகிய வடு மறையாது.

130. கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி 

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

சினம் ஏற்படாமல் பாதுகாத்து அறநூல்களை கற்று அடக்கமுடையவனாக இருப்பவனுடைய நெறியில் நுழைத்து தருமதேவதை அவனை எதிர்பார்த்திருக்கும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

திருக்குறள்: பொருளடக்கம் : அடக்கம் உடைமை - அதிகாரம்: 13 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Possession of modesty - Authority: 13 in Tamil [ Tirukkural ]



எழுது: சாமி | தேதி : 07-15-2023 09:52 pm