பிரதோஷம் என்பது வடச் சொல் 'ப்ர' என்றால் மிகவும் அதிகமான, 'தோஷம்' என்றால் தீமை என்றும் பொருள். அதாவது மிகவும் அதிகமான தீமை தரும் வேளை என்று பொருள்.
'பிரதோஷ வழிபாடு' பிரகாசத்தை கொடுக்கும் பிரதோஷம் என்பது வடச் சொல் 'ப்ர' என்றால் மிகவும் அதிகமான, 'தோஷம்' என்றால் தீமை என்றும் பொருள். அதாவது மிகவும் அதிகமான தீமை தரும் வேளை என்று பொருள். இந்த நேரத்தில் தான் தீமை விலகி நன்மை பெருக உலக நலன் குறித்து சிவன் ஆல கால விஷம் அருந்தி திருநீல கண்டனானார். அந்த நேரத்தில் வழிபடுவது சிறந்தது. பிரதோஷம் காலம் என்பது எது? பகல் முடிந்து அந்தி நேரம் ஆரம்பித்து வானில் நிலவு, நட்சத்திரங்கள் உதயமாகும் வேளை அது. மாலை 5.45 மணி முதல் 6.30 வரை. ஒவ்வொரு மாதமும் அமாவாசையிலிருந்து 13ம் நாளும் பெளர்ணமியிலிருந்து 13ம் நாளும் திரியோதசி திதியாகும். இவைதான் பிரதோஷ நாட்கள். மாதத்திற்கு இரண்டு. பிரதோஷத்தில் பத்து வகைகள் உண்டு. 1. நித்யபிர தோஷம் : தினமும் மாலை 4.30 முதல் 6.30 வரை வருவது. 2. நட்சத்திர தோஷம்: திரியோதசி திதியில் எந்த நட்சத்திரம் வருகிறதோ, அந்த நட்சத்திர வடிவமாய் இருக்கிற சிவனை வணங்குதல். 3. பட்ச தோஷம் : சுக்லபட்ச (வளர்பிறை திரியோதசி திதியில் மாலை நேரத்தில் பட்சி லிங்கம் வழிபாடு செய்வது. 4. மாத தோஷம்: கிருஷ்ணபட்ஷம் (தேய்பிறை) திரியோதிசி திதியில் மாலையில் எம்பெருமானை சந்திரக் கலையைக் கட்டி வழிபடுதல். 5. பூர்ண தோஷம்: திர யோதசி திதியும் சதூர்த்தி திதியும் பின்னப்படாமல் இருக்கும்போது ஈசன் வழிபாடு. சுயம்பு லிங்க தரிசனம் பலன் தரும். 6. திவ்ய தோஷம்: துவாதசியும் திரயோதசியும் அல்லது திரியோதசியும் சதுர்தசியும் இரட்டை திதிகள் சேர்ந்து வருவது. மரகத லிங்க வழிபாடு சிறந்தது. 7. அபய தோஷம்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் சப்தகிரி மண்டலத்தை திரியோதசி திதியில் வழிபடுவது. 8. தீபபிர தோஷம்: திரயோதசி திதியில் தீபதானங் கள் செய்து ஈசனுடைய ஆலயங்களை அற்புதமாக அலங் கரித்து பஞ்சாட்சர தீப ஆராதனை முறையாகச் செய்து வழிபடுவது. 9. சப்த தோஷம்: திரியோதசி திதியில் ஒளவுத நடனங்கள் காட்டி சாகா கலையை விளக்குவது. இது யோகிகளுக்கே உரித்தானது. 10. மகா தோஷம்: ஈசன் விஷ முண்ட நாள் கார்த்திகை மாதம் சனிக்கிழமை. ஆகவே சனிக்கிழமையும் திரியோதசி திதியும் சேர்ந்து வரும்போது நாம் செய்கிற வழிபாடே மகா பிரதோஷ வழிபாடு. பிரதோஷ நாளில் மட்டும் ஆலயத்தை வலம் வரும் போது அப்பிரதட்சணமாய் வலம் வருதல் நலம். முதலில் நந்தி தேவரை தரிசித்து இடதுபுறமாய் சென்று சண்டி கேசுவரை தரிசிக்கவும், வந்த வழியே மீண்டும் வந்து நந்தி தேவரை வழிபட்டு வலது புறமாய் சென்று கோமுகையை கடக்காமல் மீண்டும் வந்து நந்தி தேவரை வணங்க வேண்டும். பின்னர் இடதுபுறமாய்ச் சென்று கோமுகையை அடைந்து பிறகு நந்தி தேவரை வணங்க வேண்டும். 'ஹர ஹர மகாதேவா' என்று ஜபித்துக் கொண்டே லிங்கேஸ்வரர் ஆகிய சிவனை தொழ வேண்டும். இவ்வாறு மூன்று தடவை பிரதட்சணம் செய்வதே முறை. திருப்பாற்கடலை கடையும்போது ஆலகால விஷத்தின் புகைமண்டலம் தேவர்களை சூழ, இடது பக்கமாக ஒடி கயிலையை அடைந்தார்களாம். அதன்படித்தான் அப்பிரதட்சணம் பின்பற்றப்படுகிறது. பிரதோஷ நாளில் மூன்று முறை அம்பாள் உலா நடத்தப்படும். வேத பாராயணத்துடன் முதல் கற்று. திருமுறை பாராயணத்துடன் இரண்டாவது கற்று. வாத்திய இசை யுடன் மூன்றாவது சுற்று. * அதிகாலை துயில் எழ வேண்டும் * நன்னீராடி உடுத்திக் கொள்ள வேண்டும். * திருநீர், சந்தனம், குங்குமம் தரிக்க வேண்டும். * கழுத்தில் ருத்திராட்ச மணிமாலை அணிய வேண்டும். * முழு உபவாசம் இருந்தல். சிவ சிந்தனை வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி சிவ சின்னங்கள் தரிக்கவும். * இல்லத்தில் நந்தி தேவருடன் கூடிய சிவலிங்கம் இருக்குமாயின் வில்வ பூக்களால் அர்ச்சனை பண்ணலாம். இல்லையெனில் பிரதோஷ வேளையில் சிவாலயம் செல்ல வேண்டும். சிவனுக்கும், நந்திக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்டுகளிக்கவும். * நந்திதேவருக்கு அருகம் புல் அல்லது கரும்புத் துண்டுகளால் ஆன மாலை அணிவிக்கவும். * மாவிளக்கு அமைத்து பசு நெய்விட்டு பஞ்சுத் திரி போட்டு விளக்கு ஏற்றவும். * கார் அரிசியில் வெல்லம் இட்டு பிசைந்து நந்தி தேவருக்கு நிவேதனம் படைக்க வேண்டும். * தீபாராதனை முடிந்த பின்னர் நந்தி தேவருக்கு காதில் நம் குறையை கூற வேண்டும். அது பிறருக்குக் கேட்கக்கூடாது. குறை விலகி நிம்மதி கிடைக்கும். இவ்வாறு பன்னிரெண்டு பிரதோஷ நாட்களில் கூறி வந்தால் பலன் கிடைக்கும். பின்னர் வீடு திரும்பியதும் ஒருவருக்கேனும் அன்னம் இட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். 'ஹரஹர மகாதேவா! 'சாம்ப சதாசிவா! உலக நலனுக்காக விடம் உண்ட கண்டனே! ஏகாம்பரனே! எங்கள்இடர் களைந்து வாழ்வில் இன்பம் ஊட்டிக் காப்பாயாக!' மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்பிரதோஷ நாட்கள் என்னென்ன?
வலம் வரும் முறை
மூவருவர்
கடைபிடிக்க வேண்டியவை
வேண்டுதல்
ஆன்மீக குறிப்புகள்: சிவன் : பிரதோஷ வழிபாடு பிரகாசத்தை கொடுக்கும் - பிரதோஷ நாட்கள் என்னென்ன?, வலம் வரும் முறை, கடைபிடிக்க வேண்டியவை, வேண்டுதல் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Pradhosha worship gives radiance - What are Pradosha days?, crawling method, observances, supplications in Tamil [ spirituality ]