சனிதோஷம் நீக்கும் பிரதோஷம்

ஆதி பிரதோஷ வழிபாடு ஆரம்பிக்கப்பட்ட இடம், பிரகலாத வரதன் அவதரித்த பிரதோஷம்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

Pradosha that removes Sanidosha - The place where Adi Pradosha worship started, Pradhosha incarnated by Pragalatha Varadhan in Tamil

சனிதோஷம் நீக்கும் பிரதோஷம் | Pradosha that removes Sanidosha

பக்தர்களை கிரகங்களின் பார்வையிலிருந்து காத்து அனுகிரகம் புரியும் அரனை, பிரதோஷ தினத்தில் போற்றி வணங்குவது, புனிதம் மிக்கது.

சனிதோஷம் நீக்கும் பிரதோஷம் 

பக்தர்களை கிரகங்களின் பார்வையிலிருந்து காத்து அனுகிரகம் புரியும் அரனை, பிரதோஷ தினத்தில் போற்றி வணங்குவது, புனிதம் மிக்கது.

குறிப்பாக, சனிதோஷம் நீக்கும் சக்தி மிக்கது பிரதோஷ வழிபாடு என்பது ஐதிகம். (அதிலும் சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷமாயின் மிக மிகச் சிறப்பு).

பிரதோஷ காலத்தில், கைப்பிடியளவு அறுகம்புல், கைப்பிடியளவு வன்னியிலை, வெல்லம் கலந்த காப்பரிசி இவைகளை நந்தி தேவருக்கு சமர்ப்பித்து, நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வர, சனிதோஷத்தின் உக்கிரம் குறைந்து, சந்தோஷம் கூடும்.


ஆதி பிரதோஷ வழிபாடு  ஆரம்பிக்கப்பட்ட இடம்

ஆலகால விஷத்தை உண்டபோது ஈசன் உடல் நீலமாகி விட்டது. அதைக் கண்ட நந்தி அகந்தையுடன், எடுத்து வந்த சுந்தரரையும் அதனை வாங்கி சிவனாரிடம் அளித்த தன்னையும் ஒன்றும் செய்யாத விஷம், ஈசனின் உடலை நீலமாக்கி விட்டதே! சிவனாரையும் தாங்கும் தானே உயர்ந்தவன் என மனதிற்குள் ஒருகணம் நினைக்க, அவரது சித்தம் அப்போதே கலங்கி பித்துப் பிடித்தவர் போல குறிகுதியென்று குறிக்கத் தொடங்கினார்.

நந்தியின் இந்த நிலையைக் கண்ட அன்னை இரக்கம் கொண்டு ஈசனிடம் முறையிட, "நீலே அவனுக்கு உதவிடும் என்று ஈசன் அருளினார், அன்னை, நத்தியின் சித்த பிரமையை நீக்கிட கோயம்பேடு தலத்திற்கு அனுப்பி, குசலவபுரீஸ்வரரை வலம் வரச் செய்தாள். தெளிவடைந்த நந்தி, ஆனந்தத்தில் ஈசனுக்கு பிரதோஷ விழா எடுத்துத் தன் இரு கொம்புகளுக்கிடையில் அவரை வைத்து வித விதமாய் ஆயிரமாயிரம் முறை ஆடி, நன்றி தெரிவித்தார். எனவே கோயம்பேடு திருத்தலத்தில் ஒரு பிரதோஷ விழாவை தரிசித்தாலே ஆயிரமாயிரம் மடங்கு பலன் தரும் என்பர்.

பலப்பல நன்மைகளைத் தரும் பிரதோஷ காலம், பரமனுக்கு மட்டுமன்றி, பரந்தாமனுக்கும் உரியது என்கின்றன புராணங்கள். அது எப்படி?


பிரகலாத வரதன் அவதரித்த பிரதோஷம்

கொடியவனான இரண்யனின் மகன், நெடியவனான திருமாலின் பக்தனான பிரக லாதன். "எங்கே இருக்கிறான் உன் ஹரி?" என்று கேட்ட அப்பாவிடம், "எங்கும் இருக்கிறான் என் நாராயணன் என்று நம்பிக்கையோடு சொன்னான், பிரக லாதன்.

"எங்கேயும் இருப்பான் என்றால், இங்கேயும் இருப்பானா?" என்று கேட்டு தூண் ஒன்றைத் தகர்த்தான், இரண்யன்.

பிரகலாத வரதன், நரஹரியாகத் தோன்றி 'நறநற' வென்று பற்களைக் கடித்து நகத்தாலேயே இரண்யனைக் கிழித்து எறிந்தார்.

பக்தனின் துயர் போக்கிட பரந்தாமன் அப்படி ஆளரியாக அவதரித்தது, பிரதோஷ வேளையில் தான். அதாவது மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தில்தான். எனவே, தீமைகளைத் தகர்த்திட தீதையாளன் தோன்றிய பிரதோஷ காலம், திருமால் திருத்தலங்களிலும் சிறப்பாகப் போற்றப்படுகிறது.

பிரதோஷ காலத்தில் நரசிம்மர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடப்பதும், பிற சன்னதிகள் கருவறை உட்பட திரையிடப்பட்டு விடுவதும் ஆளரிநாதனை ஆராதிக்க வேண்டிய காலம் பிரதோஷ காலம் என்பதையே குறிப்பிடுகிறது.

இன்னொரு விஷயம்... 

பிறைசூடன் பிரதோஷ காலத்தில் திருநடனம் புரிந்தபோது, வாணி வீணை இசைத்தாள். பிரம்ம தேவன் தாளமிட்டார். தேவராஜன் குழலிசைத்தான். திருமால் மிருதங்கம் வாசிக்க, திருமகள் பாடினாள். சகல உயிர்களும் ஈசனோடு ஒடுங்கி இருந்தன. தேவர்கள், முனிவர் கள், சித்தர்கள் அட்டதிக் பாலகர்கள் என யாவரும் சிவநாமம் சொன்னபடி சிவத்தில் லயித்துக் கிடந்தார்கள்.

எனவே, எல்லாமே ஒன்றான பரம்பொருளாக இறைவன் விளங்கும் பிரதோஷ காலத்தில் நாமும் ஆண்டவனை வணங்கி, நலமும் வளமும் பெறலாமே!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : சனிதோஷம் நீக்கும் பிரதோஷம் - ஆதி பிரதோஷ வழிபாடு ஆரம்பிக்கப்பட்ட இடம், பிரகலாத வரதன் அவதரித்த பிரதோஷம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Pradosha that removes Sanidosha - The place where Adi Pradosha worship started, Pradhosha incarnated by Pragalatha Varadhan in Tamil [ spirituality ]