பிரதோஷம் இந்தப் பெயரைச் சொன்னதுமே, உங்களில் பலர், "ஓ தெரியுமே!" என்று உரக்கச் சொல்வது கேட்கிறது.
அனைத்து பாவ தோஷங்களை போக்கும் பிரதோஷ வழிபாடு பிரதோஷம் இந்தப் பெயரைச் சொன்னதுமே, உங்களில் பலர், "ஓ தெரியுமே!" என்று உரக்கச் சொல்வது கேட்கிறது. மாதத்திற்கு இருமுறை வளர்பிறை, தேய்பிறையில் வரும் திரயோதசி தினமே பிரதோஷம் என்ற பெயரில் சிவ ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகிறது என்பதும், அன்றைய தினம் சிவ வழிபாடும் தரிசனமும் சிறப்பான பலன்களைத் தரும் என்பதும் அநேகமாக உங்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அன்றைய தினம் சிவ வழிபாட்டை எப்படி செய்தால் என்ன பலன் கிட்டும்? பிரதோஷ தினத்துக்கும் நந்தி பகவானுக்கும் என்ன தொடர்பு? நந்தியை வழிபட வேண்டிய முறை என்ன? அவருக்கு உகந்த நிவேதனம் எது? பிரதோஷ தினத்தன்று சிவாலயத்தில் பிரத்யேகமாக பிரதட்சணம் வருவது எதனால்? இப்படிப்பட்ட பலப்பல கேள்விகளுக்கு நீங்கள் பதில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அர்த்தம் புரிந்து கொண்டு ஆண்டவனை வழிபட்டால் ஆயிரமாயிரம் பலன்கள் கிட்டும் என்பது நிச்சயம். அதுமட்டுமல்ல, அரனுக்கு மட்டுமே உரித்தானது பிரதோஷ காலம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலர், ஹரிக்கும் உகந்தது பிரதோஷ வழிபாடு என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? ஏற்றங்கள் பலவும் அளிக்க வல்லதும், வளமும் நலமும் அளிக்கக்கூடியதுமான பிரதோஷ விரதத்தினைக் கடைப் பிடிக்க பிரத்யேகமாக உங்களுக்கு வழிகாட்டப் போகிறது இந்த கட்டுரைகள். வாருங்கள், ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 'பிர' என்றால், அளவிட முடியாத... மிக மிக அதிகமான என்று அர்த்தம். தோஷம் என்பதற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை, தீவினைகள் என்று பொருள். 'பிரதோஷம்' என்றால், அதீதமான தீவினைகள் தோன்றக்கூடிய நேரம் என்று அர்த்தம். 'என்ன இது...! பிரதோஷ காலம் மிக மிக உயர்வானது என்றல்லவா நினைத்தோம்! இப்படிச் சொல்கிறீர்களே...! என்று உங்களில் சிலர் கேட்பது புரிகிறது. அதைத் தெரிந்து கொள்ள நீங்கள், பிரதோஷம் பிறந்த கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்பிரதோஷம் என்றால் என்ன?
பிரதோஷ தினத்திற்கு அப்படி என்ன சிறப்பு?
ஆன்மீக குறிப்புகள்: சிவன் : அனைத்து பாவ தோஷங்களை போக்கும் பிரதோஷ வழிபாடு - பிரதோஷம் என்றால் என்ன? [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Pradosha worship which removes all sins - What is pradosha? in Tamil [ spirituality ]