'ஸ்ரீ' என்கிற மஹாலட்சுமி துதி!

அம்மன்

[ அம்மன்: வரலாறு ]

Praise for 'Sri' Mahalakshmi! - Amman in Tamil

'ஸ்ரீ' என்கிற மஹாலட்சுமி துதி! | Praise for 'Sri' Mahalakshmi!

இந்தத் துதி சகலவிதமான நற்பேறுகளையும், பாக்யங்களையும், எல்லாவிதமான இன்பங்களையும் தரவல்லது

'ஸ்ரீ' என்கிற மஹாலட்சுமி துதி!

 

இந்தத் துதி சகலவிதமான நற்பேறுகளையும், பாக்யங்களையும், எல்லாவிதமான இன்பங்களையும் தரவல்லது. ஒவ்வொரு இல்லத்திலும், குறிப்பாக வீட்டில் பூஜையறையில் இந்தத் துதியைத் தினம் ஒருதடவை படிப்பது மேன்மையைத் தரும்.. கஷ்டங்களும் தரித்திரமும் விலகி ஓடி, இல்லறத்தில் அனைவர்க்கும் இன்பம் சேர்க்கும்!.

 

"லக்ஷ்மியின் திருநாமம், எல்லாவிதமான சௌபாக்கியங்களையும் தரவல்லது.

 

தாமரையைத் தாங்கியவளாய், பிரகாசமான முகத்தை உடையவளாய், சகல போக போக்கியங்களையும் அளிப்பவளாய், பலவிதமான இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவளாய், இந்திரன், சிவபெருமான், பிரம்மன் ஆகியோர்களால் வணங்கப் பட்டவளாய், அனைத்து மகா சக்திகளையும் தன்னுள்ளே கொண்டவளாய் பரிபாலிக்கும் ஸ்ரீமஹா லஷ்மியை நான் வணங்குகிறேன்.

 

தாமரை போன்ற கண்களை உடையவளே, தாமரையைக் கரத்தில் சுமப்பவளே, வெண்மையான ஆடையும் சந்தன மாலையும் உடையவளே, அனைவரின் மனத்தையும் ஈர்ப்பவளே, மூவுலகத் தையும் வளம் பெறச் செய்பவளே, எனக்கு அருள்பாலிப்பாயாக.

 

பகவதியே, பகவான் ஸ்ரீஹரிக்குப் பிரியமானவளே, செல்வத்தின் தேவதையே, வேண்டியதை அளிக்கும் காமதேனுவே உன்னை வணங்குகிறேன்.

 

லாவண்யமான ஒளியினால் அனைத்தையும் பிரகாசிக்கச் செய்பவளும், பூமிமாதாவாக இருப்பவளும், பாற்கடலில் தோன்றியவளும். அருளையும் பொருளையும் கொடுப்பவளும், பக்தர்களின் சோகத்தைப் போக்குபவளும், கருணை வடிவானவளும், பத்மநாபனின் துணைவியும், கருணை செய்வதையே கருத்தாகக் கொண்டவளும், மங்கள சொரூபியுமான ஸ்ரீ'யே உன்னை வணங்குகிறேன்.

 

தன்னை அடைந்த பக்தர்களின் வாழ்வில் ஒளி தருபவளே, வில்வமரத்தில் வசிக்கும் உன்னதமானவளே, எங்களின் பாவங்களை மன்னித்து எங்களுக்கு இல்லறத்தில் மேன்மையைத் தருபவளே உன்னை வணங்குகிறேன்.

 

திருமாலின் திருமார்பில் நித்தியமாய் வசிப்பவளே, ஸ்ரீமகா லிஷ்ணுவின் பத்தினியே, ஸ்ரீ நாரயணனை விட்டு ஒருபோதும் பிரியாதவளே, எல்லா உபத்திரவங்களிலிருந்தும் எங்களைக்காப்பவளே, முக்காலத்தையும் அறியும் ஞானத்துடன் கூடியவளே, எல்லா உலகங்களுக்கும் இறைவியாக இருப்பவளே, ஸ்ரீரங்கத்து நாச்சியாக, ஸ்ரீ சௌந்திர நாயகியாகத் திகழ்பவளே வணங்குகிறேன் உன்னை!.

 

நவதுர்க்கா, மகா காளி, திரிமூர்த்தி சொரூபமானவளே, வேண்டுவோர்க்கு அருள்பவளே, எனக்கு அருள்வாயாக. எப்போதும் உன்னை நான் நமஸ்கரிக்கிறேன்" ஸ்ரீ மஹாலட்சுமி அஷ்டோத்தரஸத நாம ஸ்தோத்ரம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

அம்மன்: வரலாறு : 'ஸ்ரீ' என்கிற மஹாலட்சுமி துதி! - அம்மன் [ அம்மன் ] | Amman: History : Praise for 'Sri' Mahalakshmi! - Amman in Tamil [ Amman ]