இன்னல்கள், தடைகள் எல்லாவற்றையும் நீக்கி வளமும் நலமும் நம்மை வந்தடைய குபேரன் நிச்சயம் அருள் புரிவார்
குபேரன் துதி வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி! தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி! குறைவில்லா வாழ்வாளிப்பாய் குபேரனே போற்றி! உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி! சங்கநிதி, பதும நிதி சார்ந்து நிற்பாய் போற்றி! மங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி! பொங்கிடும் நலம் யாவும் உன்னருளே போற்றி! தங்கிட செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி! போற்றி! என்ற துதிகளைச் சொல்லி வணங்கிய பிறகு, தூப, தீப நைவேத்தியம் செய்ய வேண்டும். சாம்பிராணியைப் போட்டு, கற்பூரத்தைக் காட்ட வேண்டும். வாழைப்பழம், பசும்பால், பாயாசம் என்று உங்களால் முடிந்ததை நிவேதனம் செய்யலாம். பூஜை நிறைவுற்றதும் பூ, வெற்றிலை பாக்கு, பழத்தை சுமங் கலிகளுக்குக் கொடுக்க வேண்டும். தட்சணையை ஏழை களுக்குத் தர வேண்டும். இப்படி திருக்கதை படித்து, முறைப்படி குபேரனைப் பூஜித்தால் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடக்கூடிய இன்னல்கள், தடைகள் எல்லாவற்றையும் நீக்கி வளமும் நலமும் நம்மை வந்தடைய குபேரன் நிச்சயம் அருள் புரிவார். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: குபேரன் : குபேரன் துதி - குபேரன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual notes: Kuberan : Praise to Kubera - Kuberan - Spiritual notes in Tamil [ spirituality ]