நவகிரகங்களில் புத்திக்கும் வித்தைக்கும் அதிபதியாக திகழ்பவர் புதன் பகவான்.
புதன் மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு!
நவகிரகங்களில் புத்திக்கும்
வித்தைக்கும் அதிபதியாக திகழ்பவர் புதன் பகவான்.
ஒருவரது ஜாதகத்தில் புதன் சிறப்பாக
இருந்தால் அவர்கள் தன் புத்தி கூர்மையால் தான் செய்யும் தொழிலில் படிப்படியாக
வளர்ந்து உச்சத்தை அடைவார்.
அதே சமயம் புதன் பகவான் ஒருவரது
ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் தொழிலில் வெற்றிகாண்பது மிகவும் கடினமாக ஒன்றாக
இருக்கும். ஆனால் கவலை தேவை இல்லை.
புதன் பகவானை வணங்கி அவருக்குரிய
கீழ்க்கண்ட மந்திரத்தை ஜபித்து வர அவர் நன்மைகளை வாரி வழங்குவார்
ப்ரியங்கு கலிகாச்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்
ஸௌம்யம் சௌம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம்யஹம்
புதனுக்கு உரிய இந்த மந்திரத்தை
தினமும் 108 முறை ஜபிப்பது நல்லது.
தினமும் ஜபிக்க முடியாதவர்கள் புதன்
கிழமைகளில் ஜபிக்கலாம்.
இதை ஜபித்தால் செய்யும் தொழில்
தழைத்தோங்கும். அறிவும் ஆற்றலும் பெருகும். நாக்கு மற்றும் மூளை சம்மந்தமான
நோய்கள் அகலும்.
புதன் கிழமைகளில் புத பகவானுக்கு
வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை கூறுவது மேலும் சிறப்பு சேர்க்கும்.🌹
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : புதன் மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Praying Buddha mantra has many benefits - Tips in Tamil [ ]