வெஃகாமை

அதிகாரம்: 18

[ திருக்குறள்: பொருளடக்கம் ]

Pride - Authority: 18 in Tamil



எழுது: சாமி | தேதி : 16-07-2023 08:21 pm
வெஃகாமை | Pride

171. நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றி குற்றமும் ஆங்கே தரும்.

வெஃகாமை

அதிகாரம்: 18

171. நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றி

குற்றமும் ஆங்கே தரும்.

ஒருவன் நடுநிலையை விட்டு பிறன் பொருளை விரும்பினால், குடும்பம் கெடுவதோடு பல கேடுகளையும் அடைவான்.

172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.

நடுநிலை தவறுதற்கு அஞ்சுபவர், அதனால் வரும் பயனை விரும்பிப் பழிச் செயலைச் செய்யார்.

173. சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே

மற்றுஇன்பம் வேண்டு பவர்.

அறச்செயலால் வரும் நிலையான இன்பத்தை விரும்புவர் நிலையற்ற செல்வத்தால் வரும் இன்பத்தை விரும்பி பிறருக்கு அநீதி செய்யமாட்டார்கள்.

174. இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.

ஐம்புலன்களை வென்ற அறிவுடையோர் வறுமைக்கு அஞ்சி பிறர் பொருளை விரும்பமாட்டார்கள்.

175. அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மட்டும்

வெஃகி வெறிய செயின்.

பொருளாசையால் அறிவிற்குப் பொருந்தாத செயலைச் செய்பவர். நுணிகி ஆராய்ந்து கற்ற கல்வியினால் என்ன பயன் காண்பார்.

176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்.

அருளை விரும்பி அறநெறியில் நடப்பவன் பிறர் பொருளை விரும்பி தீயவழியை நாடினால் கெட்டுவிடுவான்.

177. வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம்; விளைவியின்

மாண்டதற்கு அரிதாம் பயன்.

பிறரின் செல்வத்தால் வரும் பயனை விரும்பக்கூடாது; பயன்படும் காலத்தில் நன்மை தராது.

178. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.

பிறர் பொருளை நாடாதிருப்பதே. தம் பொருள் குறையாதிருப்பதற்கு வழியாகும்.

179. அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன்அறிந்து ஆங்கே திரு.

அறநெறியை அறிந்து பிறர் பொருளை நாடாதவரின் திறமறிந்து செல்வம் சேரும்.

180. இறல்ஈனும் எண்ணாது வெஃகின்; விறல்ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு.

பிறர் பொருளைப் பற்றக் கருதினால் கேடு உண்டாகும். பிறர் பொருளை விரும்பாதவருக்கு வெற்றி உண்டாகும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

திருக்குறள்: பொருளடக்கம் : வெஃகாமை - அதிகாரம்: 18 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Pride - Authority: 18 in Tamil [ Tirukkural ]



எழுது: சாமி | தேதி : 07-16-2023 08:21 pm