21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.
நீத்தார் பெருமை 21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. ஒழுக்கத்தால் பற்று நீங்கியவர் பெருமையைக் கூறுவதே நூலின் சிறப்பாகும். 22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. பற்றற்ற சான்றோர் பெருமையைக் கூறுவது உலகத்தில் இறந்தவர்களை எண்ணுவது போன்றதாகும். 23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. இம்மை மறுமை வகைகளை ஆராய்ந்து இங்கு அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே உயர்ந்தது. 24. உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரன்எனும் வைப்பிற்குஓர் வித்து. மனவலிமை என்னும் கருவியால் ஐம்பொருளாகிய யானைகளை அடக்கிக் காப்பவன் பெருமைக்கு வித்தைப் போன்றவன். 25. ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான் இந்திரனே சாலும் கரி. ஐம்பொருளால் தோன்றும் ஆசைகளை அவித்தவன் வல்லமைக்கு அகன்ற வானத்தில் உள்ளோரின் தலைவனான இந்திரனே சான்றவான். 26. செயற்கரிய செய்வார் பெரியர்: சிறியர் செயற்கரிய செய்கலா தார். மக்களால் செய்வதற்குரிய செயலைச் செய்பவர்கள் பெரியவர். சிறியவர்கள் அரிய செயல்களைச் செய்யாதவர்கள். 27. சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து பொறிகளின் குணங்களை அறிந்தவன் கண் உலகம் அடங்கும். 28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். உறுதி மிக்க சான்றோர் பெருமை உலகத்தில் அவர்கள் கூறும் மறைமொழிகள் காட்டிவிடும். 29. குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. குணமாகிய குன்றின்மீது ஏறி நின்றவர்களின் சினத்தைக் கண நேரமும் காத்தல் அரிதாகும். 30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். எல்லா உயிர்களிடத்திலும் அருளறத்தைக் கடைப்பிடிப்போர் அறநெறியாளர்கள் ஆவார்கள். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். அதிகாரம் : 3
திருக்குறள்: பொருளடக்கம் : நீத்தார் பெருமை - அதிகாரம் : 3 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Pride of justice - Authority : 3 in Tamil [ Tirukkural ]