சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் சிவன், முருகன், திருமால் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியே கோவில்கள் இருந்தன என்பதை சிலப்பதிகாரத்தின் மூலம் அறிய முடிகிறது.
சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலன்! சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் சிவன், முருகன், திருமால் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியே கோவில்கள் இருந்தன என்பதை சிலப்பதிகாரத்தின் மூலம் அறிய முடிகிறது. கி.பி. 4-ம் நூற்றாண்டிற்கு முன்பே சோழமன்னன் கோச்செங்கணான் சிவபெருமானுக்கு 70 கோவில்கள் கட்டி வைத்துள்ளார். அவ்வாறு உருவான கோவில்களில் ஒன்றுதான் நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோவில். இந்த கோவில் சோழநாட்டு காவிரி தென்கரை தலங்கள் 127 ல் 83வது தலமாக திகழ்கிறது. சிவனுக்குரிய கோவிலாக இருப்பதோடு மட்டுமின்றி முருகனுக்குரிய முக்கிய தலமாகவும் இத்தலம் திகழ்கிறது. முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் வரை மழையில்லாமல் உயிர்கள் எல்லாம் வருந்த நேரிட்டது. பசுக்கள் தின்பதற்கு கூட புல் இல்லாத நிலை ஏற்பட்டது. பசியால் வாடியது காமதேனு பசு. அந்த சமயத்தில் காமதேனுவின் கண்ணுக்கு இறந்த நாய் ஒன்று தென்பட்டது. பசியின் கொடுமையால் காமதேனு இறந்த நாயின் இறைச்சியை தின்று தனது உயிரை தக்க வைத்துக்கொண்டது. இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்த சிவபெருமான், "நாயின் ஊனைத் தின்றதால் புலிமுகம் பெற்றுத் திரிக" என காமதேனுவை சபித்தார். சிவபெருமானின் சாபத்திற்கு ஆளான பசு, இறைவனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, தனது சாபத்தை போக்கும்படி வேண்டியது. பசுவின் கண்ணீருக்கு மனம் இரங்கிய சிவபெருமான், 'சோழநாட்டில் சிறந்த தலமாக விளங்கும் மல்லிகாரண்யத்திற்கு (இன்றைய சிக்கல்) சென்று அங்குள்ள அமிர்த தடாகத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் உன்னுடைய சாபம் நீங்கும்" என்றார். அதன்படி மல்லிகாரண்யத்திற்கு சென்று அனுதினமும் இறைவனை வழிபட்டதால் காமதேனுவின் சாபம் நீங்கியது. தனது சுயவடிவத்தை பெற்றது. அப்போது. தனது வழிபாட்டால் கிடைத்த பேரின்பத்தினால் அந்த காமதேனு பசுவின் மடியில் இருந்து தானாகவே பால் சுரந்தது. அவ்வாறு சுரந்த பால் பெருகி குளம் போல காட்சியளித்தது. அவ்வாறு உருவான குளம்தான் சிக்கலில் உள்ள இன்றைய பாற்குளம். இத்தலத்தை தரிசிக்க வரும் பக்தர்கள், இந்த புனித தடாகத்தில் நீராடி, கோவிலை வலம் வந்து நவந்தேசுவரரையும், சிங்காரவேலரையும் வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் கைகூடும் என்பது ஐதீகம். இந்த புண்ணிய தீர்த்தம் கோவிலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. திருவாரூர் முதலிய 7 விடங்க சேத்திரங்களில் தியாகராஜன் பெருமானின் நடனத்தை தரிசிக்கலாம். கூத்தப்பிரானைபோல் காலைத் தூக்கி ஆடுகின்ற திருவுருவம் தியாகராஜப் பெருமானுக்கு இல்லை. ஏனைய சிவாலயங்களில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தியை போலவே வலது காலை தொங்கவிட்டும். இடது காலை மடித்துக் கொண்டும் சுகாசன மூர்த்தியாக தியாகராஜ மூர்த்தி இங்கு விளங்குகிறார். இவர் அமர்ந்த நிலையிலேயே நடனம் செய்பவராக விளங்குகிறார். குறிஞ்சி நிலக்கடவுள் முருகன், குறிஞ்சி நிலம் மலைப் பகுதியாகும். கட்டுமலையாகிய இத்தலத்தில் முருகன் சிங்கார வேலனாக காட்சி தருகிறார். அறுபடை வீடுகளில் குன்று தோறாடலும் ஒன்று. அந்த வகையில் இத்தலம் கட்டுமலை ஆதலின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதலாம். முருகு என்றால் இளமை, அழகு, மணம், தெய்வத்தன்மை என பல்வேறு அர்த்தங்களை குறிக்கிறது. இவைகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக கொண்ட முருகன், இங்கு சிங்கார வேலனாக வீற்றிருக்கிறார். நீர்வளம் மிகுந்த சோலைகளுக்கு நடுவில் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்கு முன்புறம் 80 அடி உயரமுள்ள எழுநிலை மாடக் கோபுரமும், 3 நிலை மாடக் கோபுரமும் வருகிற பக்தர்களை வரவேற்கம் விதத்தில் அமைந்துள்ளது. பெரிய கோபுரம் சிவனுக்கும், சிறிய கோபுரம் பெருமாள் கோவிலுக்குமாக அமைந்துள்ளது. கோவிலின் இந்த தென்புறத்தில் விநாயகரும், வடபுறத்தில் தண்டாயுதபாணியும் தனித்தனியே கோயில் கொண்டுள்ளனர். அதனை அடுத்து அறுபத்து மூவர் மண்டபம், காசி விஸ்வநாதர் விசாலாட்சி சன்னதி, சனீஸ்வரர் சன்னதி, கார்த்திகை விநாயகர் சன்னதி பல்வேறு தெய்வங்களுடன் பக்தர்களுக்கு என் அருள்பாலிக்கிறார் சிங்காரவேலர். முன் கோபுரத்தை அடுத்துள்ள திருச்சுற்றில் கிழக்கு நோக்கிய சன்னதியாக பெருமாள் கோவிலும், வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை திங்களில் நவநீதப் பெருமாளுக்கு 10 நாட்களும், ஐப்பசி திங்களில் சிங்காரவேலருக்கு 10 நாட்களும் மிகவும் கோலாகலமாக திருவிழா நடைபெறுகிறது. அப்பொழுது வேலவர் தங்க வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். 5 வது நாளில் தேர்த் திருவிழா நடைபெறும். திருச்செந்தூரை போல இங்கும் மிகவும் கோலாகலமாக சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து தொலைவிலும், திருவாரூரில் இருந்து 5 கிலோமீட்டர் 19 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூரில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்தல வரலாறு:
தியாகராஜமூர்த்தி
சிங்காரவேலர்
கோவில் அமைப்பு:
திருவிழாக்கள்:
அமைவிடம்:
ஆன்மீக குறிப்புகள் : சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலன் - தல வரலாறு, தியாகராஜமூர்த்தி, கோவில் அமைப்பு, திருவிழாக்கள், அமைவிடம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Problem Solving Singaravelan - History of the place, Thyagarajamurthy, temple structure, festivals, location in Tamil [ spirituality ]